வட சீனாவின் பல இடங்களில் சில நாட்களாக தொடர்ந்து வரும் புகைப்பனி வானிலை 19ஆம் நாள் இரவு தொடங்கி மிகவும் மோசமான காலத்தில் நுழைந்துள்ளது. பெய்ஜிங் மாநகரில் 19ஆம் நாளிரவு கண்காணிப்பு நிலையம் வழங்கிய PM2.5 குறியீடு, 700யைத் தாண்டியுள்ளது. இந்த மோசமான புகைப்பனி வானிலையால் பொது மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சிவப்பு முன்னெச்சரிக்கை வெளியிடப்பட்ட 23 நகரங்களின் பெரும்பாலான பள்ளிகளிலும் குழந்தை காப்பபகங்களிலும் 19 முதல் 21 ஆம் நாள் வரை வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. காற்றைத் தூய்மைப்படுத்தும் இயந்திரம், புகைப்பனித் தடுப்பு முகமூடி உள்ளிட்ட பொருட்களின் மூலம் மக்கள் தங்களை பாதுகாத்து வருகின்றனர். பொருளாதார நிலைமை நன்றாக உள்ள குடும்பங்கள் சீனாவின் தென்பகுதிக்கு சென்று விட்டார்கள்.