மறுபுறம், நகரங்களில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய மக்கள் புகைப்பனி வானிலையால் ஏற்படும் போக்குவரத்து சிக்கல்களைச் சமாளிக்க வேண்டும். இந்த மோசமான வானிலையால் பெய்ஜிங் மாநகர் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. கார் ஓட்டும் போது வழியை தெளிவாக காண முடிவதில்லை என்று சில நகரவாசிகள் செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
சீனப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியின் படி, தற்போது பெய்ஜிங், தியென்சின், ஹேபெய், சிஆன் ஆகிய இடங்களில் பல உயர்வேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதேவேளையில், பெய்ஜிங், தியென்சின் ஆகிய இடங்களின் விமான நிலையங்களில் அதிகமான விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. தியென்சின் விமான நிலையத்தில் 18ஆம் நாளிரவு 22 மணி முதல் அனைத்து விமான பயணங்களும் ரத்துசெய்யட்டுள்ளது. பெய்ஜிங் விமான நிலையத்தில் 20ஆம் நாள் காலை மட்டுமே, 169 விமானப் பயணங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.