• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நீர் நகரான ஷோ சிங்
  2017-03-22 11:05:14  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்துவது, நீர் நகரும், பாலம் நகரும், மது நகருமான ஷோ சிங். ஷோ சிங் நகர், செங்ஜியாங் மாநிலத்தின் மத்திய வடக்கில் அமைந்துள்ளது. பண்டை காலம் தொட்டு இன்று வரை, இந்நகர் 2500 ஆண்டுகள் வரலாறுடையது. பருவகால வானிலையால் ஷோ சிங் நகர் இளஞ்சூடானதும், ஈரமானதுமான தன்மையுடன் உள்ளது.

ஷோ சிங் நகரில், சீனாவின் பல புகழ் பெற்ற கலைஞர்களும் மற்றும் அறிஞர்களின் தாய் மண்ணாகும். எடுத்துக்காட்டாக, சீனாவின் தலைமை அமைச்சர் சோ என் லாயின் சொந்த ஊர் ஷோ சின் ஆகும். அவரின் குடும்பக் கட்டிடத்தின் அடிப்படையில், ஷோ சிங் சோ என் லாய் நினைவுக் காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. இந்நினைவுக் காட்சியகம், ஜிங் மற்றும் மிங் வம்சக் காலப் பாணியுடையது. அன்பான தலைமை அமைச்சர் சோ என் லாயை நினைவுக் கூர, சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வருவர்.

சீனாவின் புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சிந்தனையாளருமான லூ சிவேன், ஷோ சிங் நகரைச் சேர்ந்தவராவார். அவரைத் தெரியாதவர் சீனாவில் இல்லை என்று கூறினால் மிகையாகாது. அவரின் திசை தான், சீனாவின் புதிய பண்பாட்டுத் திசை என்று அரசுத் தலைவர் மா-சே தூங் ஒரு முறை வெகுவாகப் பாராட்டினார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040