• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]
புகழ் பெற்ற மருத்துவர் குவா தொ

உடம் நலம் கெட்டு மருத்துவ சிகிச்சை பெறும் போது மருத்துவர் உடனே சிகிச்சை செய்து விரைவில் குணப்படுத்த வேண்டும் என்று தான் மக்கள் விரும்புவர். சீனாவின் மக்கள் நீண்டகாலம் நோய்வாய்பட்டு குணமடையாத போது குவா தொ இருந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்று கூறுவார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த மருத்துவர் தமது தலைசிறந்த மருத்துவ சிகிச்சை நுட்பத்தால் தெய்வ மருத்துவர் என மக்களால் அழைக்கப்பட்டார்.

கிழக்கு சீனாவின் ஆன் வெய் மாநிலத்தைச் சேர்ந்த குவா தொ எப்போது பிறந்தார் என்பது இது வரை உறுதியாகத் தெரியவில்லை. கி.பி.208ம் ஆண்டுக்கு முன் அவர் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார் என்பது மட்டுமே தெரியும். குவா தொ நல்ல உடலுடன் இருந்தார். நூறு வயதான போதும் அவர் துடிப்புடன் செயல்பட்டார் என்று தெரிய வருகின்றது. அவர் புகழ் ஈட்டுவதிலும் சொந்த நலனிலும் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவரை அதிகாரி பதவிக்கு மற்றவர்கள் பரிந்துறை செய்த போது அவர் பன்முறை மறுத்தார். அக்காலத்து மன்னர் சௌ ச்சௌவுக்கு அடிக்கடி தலைவலியும் மயக்கமும் ஏற்பட்டன. சிகிச்சை செய்யுமாறு அவரை அழைத்தார். வேறு வழியின்றி அவர் அங்கு போய் அவருக்கு சிகிச்சை செய்தார். விரைவில் சொச்சொ குணமடைந்தார். தம்முடன் தங்கி மருத்துவராக பணியாற்றும் படி மன்னரால் குவா தொ நிர்ப்பந்திக்கப்படார். சிறிது காலத்திற்கு பின் தமது மனைவி நோய்வாய்ப்படுவதாக கூறி ஓய்வு கேட்டு பிரிடாவிடை பெற்ற வீடு திரும்பினார். சௌ ச்சௌ பன் முறை வற்புறுத்திய போதும் குவா தொ திரும்பவே வில்லை. ஆகையால் சௌ ச்சௌ அவரை சிறைப்படுத்தி இறுதியில் அவரை கொன்றார்.

குவா தொவின் மருத்து வசிகிச்சை முட்பம் தலைசிறந்தது. பல துறைகளில் அவர் தேர்ச்சி பெற்றார். எடுத்துக்காட்டாக தொற்றுநோய், ஒட்டுண்ணி நோய், மகளிர் நோய் மற்றும் மகப் பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், சுவாச குழாய் நோய், தோல் நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை தருவதிலும் குறிப்பாக உடல் விறைப்பாக்கம் மற்றும் அறுவை சிகிச்சை துறைகளில் அவர் கணிசமான சாதனை புரிந்தார். மக்களின் பேரண்பைப் பெற்ற மருத்துவராக அவர் விளங்கினார். அவருடைய மருத்துவ சாதனைகள் 2000 ஆண்டுகளுக்கு முந்திய சீனாவின் மருத்துவ வளர்ச்சியின் ஒரு பக்கத்தை பிரதிபலித்துள்ளன. உலகில் மிகவும் முன்னதாக முழு உடல் விரைப்பாக்க முறையை பயன்படுத்திய மருத்துவர்களில் குவா தொ ஒருவராவார். அவர் கண்டுபிடித்த "விறைப் பாக்க மருந்து"அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் நோவைக் குறைக்க முடிந்தது. இந்த மருந்தை முன்னோர் பயன்படுத்தியதே இல்லை. ஆனால் இந்த மருந்து குறிப்பேடு காணாமல் போயிற்று. பாவம். இந்த மருந்து குவா தொ வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்வதற்கு துணை புரிந்தது.

அறுவை சிகிச்சையில் குவா தொ தேர்ச்சி பெற்றிருந்தார். ஒரு முறை அவர் ஒரு 20 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தார். அந்தப் பெண்ணின் இடது முழங்காலின் பக்கத்தில் சீழ் கட்டியது. அவருக்கு வலியில்லை என்ற போதிலும் சொறியல் எடுத்தது. 7 ஆண்டுகளாக பன்முறை சிகிச்சை செய்த போதிலும் குணமடையவில்லை. குவா தொ விடம் சென்று காட்டினார். குவா தொ இந்தச் சீழிலிருந்து பாமுபு பான்ற ஒரு பொருளை எடுத்து விட்டு பின் அதன் மேல் மருந்து தடவினார். 7 நாட்களுக்கு பின் அப்பெண் குணமடைந்தார். இதற்காக நோயாளியும் அவருடைய குடும்பத்தினரும் மிகவும் மனமுருகின்ர். குவா தொ அவருடைய முழங்காலிருந்து எடுத்த பொருளா உண்மையில் தீரா எலும்பு நிணவெலும்பு வீக்கத்தினால் ஏற்பட்ட செத்த எலும்பு என இப்போது மக்கள் கருதுகின்றனர். மறு முறை கடும் நோய் வாய்ப்பட்ட முதியோர் ஒருவர் அவரிடம் சென்று சிகிச்சை செய்தார். அவருடைய நோய் ஆழமாக வேரூன்றி நின்றதால் வயிற்றில் அழுவை சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்த பின் அவர் 10 ஆண்டுகள் மட்டும் உயிர் வாழ முடியும். இந்நோய் அவரை விரைவில் சாகச் செய்யாது. இருக்கடும் என்று குவா தொ கவனமாக உடல் சோதனை செய்த பின் அவருடைய குடும்பத்தினரிடம் சொன்னார். நோயாளியோ நோயால் அவதிப்பட முடியாமல் அறுவை சிகிச்சை செய்யுமாறு குவா தொவைக் கேட்டுக் கொண்டார். அதனால் குவா தொ அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் 10 ஆண்டுகளுக்குள் அந்த நோயாளி மரணமடைந்தார்.

உள் மருத்துவ சிகிச்சை துளையில் குவா தொ மிகவும் தேர்ச்சி பற்றவர். நோயாளியின் முகம் நிறம் நோய் மற்றும் நோய்க் கூறுகளின் அடிப்படையில் அந்நோய்க்கு சிகிச்சை செய்ய முடியுமா என்பதைக் கவனிப்பார். ஒரு முறை மது விடுதியில் மது அருந்தும் சிலரை அவர் உன்னிப்பாக கவனித்தார். அவர்களில் யென் சின் என்பவர் கூடுதலாக மது அருந்த வேண்டாம். விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று அவர் அவரிடம் அரிவுரை கூறினார். அந்த ஆண் வீடு திரும்பும் வளியில் ுண்டியிலிருந்து கீழே விழுந்தார். வீட்டை அடைந்த சிறிது காலத்துக்குப் பின் உயிரிழந்தார். செந் தென் எனும் ஒரு நோயாளிக்கு மார்பில் புழுக்கம் ஏற்பட்டது. முகம் சிவப்பாக இருந்தது. சாப்பிட மனமில்லை. அவருடைய வயிற்றில் புழுக்கள் என்று கூறி குவா தொ அவருக்கு மருந்து எழுதிக் கொடுத்து சிகிச்சை செய்தார். விரைவில் அந்நோயாளி பல ஒட்டுணிகளை வெளியேற்றி குணமடைந்தரார். ஒரு அதிகாரி நீண்டகாலம் நோய்வாய்பட்டார். பேராத்திரம் அவருடைய நோயைக் குணப்படுத்த முடியும் என்று சிகிச்சைக்கு பிந் குவா தொ கூறினார். பிறகு அவர் அவ்வதிகாரிக்கு வசை மொழி பொழியும் கடிதம் ஒன்றை அனுப்பினார். இக்கடிதத்தை படித்து பேராத்திரம் அடைந்த அவ்வதிகாரி குவா தொவைத் துரத்தயடித்துக் கொல்ல ஆட்களை ஏவிவிட்டார். குவா தொவைப் பிடிக்காததால் மேலும் கோபமடைந்த அவர் கறுப்பு ரத்தத்தை துப்பிய பின் குணமடைந்தரா.

தவற்ற முறையில் சிிகிச்சை அளிப்பது மருத்துவ பயனை உயர்த்துவதற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிகிச்சையின் போது குவா தொ வெவ்வேறான நிமைமைகளுக்கு ஏற்ப வெவ்வேறான மருந்து அளிப்பது அவர் வோயாளியின் வரவேற்பைப் பெற்றதற்கு காரணங்களில் ஒன்றாகும். ஒரு முறை இரண்டு நோயாளிகளுக்கும் தலைநோவால் காய்ச்சல் அடித்தது. சிகிச்சைக்கு பின் குவா ஒருவருக்கு வயிற்றுப் போக்கு மருந்தையும் மற்றவருக்கு வியர்வை வெளியேற்றும் மருந்தையும் எழுதிக் கொடுத்தார். பக்கத்தில் உள்ளவர்கள் அதைப் புரிந்து கொண்டலால் அவரிடம் கேட்டனர். இருவருக்கும் நோய் அறிகுறிகள் ஒரே விதமாக இருந்த போதிலும் ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்திருக்கின்றது. மற்றவருக்கு வயிற்று மந்தம் பிடித்திருக்கின்றது. நோய்வாய்ப்பட்டதற்கு காரணங்கள் வேறுபட்டிருப்பதால் அவர்களுக்கு எழுதி கொடுக்கப்பட்ட மருந்துகளும் வேறுபட்டிருக்கின்றன என்றார் குவா தொ. இறுதியில் அந்த இரு நோயாளிகளும் மருந்து உட்கொண்ட பின் விரைவில் குணமடைந்தனர்.

உடற்பயிற்சி மூலம் சிகிச்சை செய்வதில் இப்போது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நெடுங்காலம் வாழும் நோக்கத்தை அடையப் பெறும் பொருட்டு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குவா தொ இம்முறையையே பயன்படுத்தினார். அவர் கண்டுபிடித்த "5 மிருகங்கள்" போல் உடற்பயிற்சி செய்வதென்ற முறை மக்களின் வரவேற்பை வெகுவாக பெற்றது. புலி, மான், கரடி, மனிதக் குரங்கு, பறவை ஆகியவை இந்த ஐந்து மிருகங்கள் ஆகும். இந்த உடற்பயிற்சி மூலம் மக்கள் எலும்புகளை செயல்படுத்தி ரத்தத்தையும் வாயுவையும் சுத்தப்படுத்தி உடல் நலத்தை வலுப்படுத்தி சிகிச்சை பெற முடியும். மருத்துவர் குவா தொவிடமிருந்து கற்றுக் கொண்ட மாணவர்களில் மூவரும் பிறகு புகழ் பெற்ற மருத்துவர்களாக மாறினர். இவ்ரகள் வெவ்வேறு துறைகளில் சீன மருத்துவ மருந்தியல் வளர்ச்சிக்கு பங்காற்றினர். குவா தொவின் நினைவாக அவர் மறைவுக்கு பின் அவர் சிகிச்சை செய்த பல இடங்களில் "குவா ச்சு கோயில்கள்"கட்டப்பட்டன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040