• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]

ஜியென் சென்

ஜியென் சென் என்பவர் கிழக்கு சீனாவின் சியாங் சூ மாநிலத்தின் யாங்சோ நகரின் சியாங்யிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் புத்த மத நம்பிக்கை உள்ள குடும்பத்தில் பிறந்தார். கி.பி.708ம் ஆண்டில் 21 வயதான போது அவர் சாங் ஆனில் துறவறம் பூண்டார். 40 ஆண்டுகளாக அவர் புத்த மத சாசனங்களைப் பற்றி விரிவுரையாற்றி கோயில்களைக் கட்டி புத்த மத சிந்தனைகளை உருவாக்கி வந்தார். 40 ஆயிரத்துக்கு மேலானோர் அவர் தலைமையில் துறவியர் அணியில் சேர்ந்தனர். இவர்களில் பலர் பின்னர் பிரபலமான துறவிகளாக மாறினர். ஜியென் சென் கிழக்கு சீனாவில் துறவி பட்டம் வழங்கும் ஆசானாகத் திகழ்ந்தார். புத்த மத நம்பிக்கையாளர்களிடையே அவர் மிகுதியும் நன் மதிப்பு பெற்றார். ஒரு வட்டாரத்தின் மத தலைவராகினார்.

கி.பி.743ம் ஆண்டு ஜப்பானிய துறவிகள் யாங்சோ நகருக்கு வந்து புத்த மத சாசனங்களை பரப்புமாறு அவரை அழைத்தார்கள். ஜியென் சென் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஜப்பானுக்குச் செல்ல தயாராக இருந்தார். அவருடைய 21 சீடர்கள் அவருக்குத் துணையாகச் செல்லவும் தயாரானார்கள். இருப்பினும் அதிகார வட்டாரங்களின் தலையீட்டினால் அவர்களால் ஜப்பானுக்குச் செல்ல முடிய வில்லை.

இரண்டாவது முறை அவர் போர் கப்பலையும் புத்த சிலைகள் துறவிகளுக்கான சாதனங்கள் மருந்துகள் உணவு தானியங்கள் பலவற்றையும் வாங்கிய பின் ஜப்பானுக்குச் செல்ல தயாரானார். அவருடைய சீடர்களும் பிறருமாக மொத்தம் 85 பேர் அவருடன் சென்றனர். ஆனால் அக்கப்பல் புறப்பட்ட சிறிது காலத்துக்கு பின் சூழாவளியால் தாக்குண்டு சேதமடைந்தது. வேறு வழியின்று பழுது பார்க்க கப்பல் திரும்ப வேண்டியிருந்தது. பின்னர் கப்பல் மீண்டும் பயமம் தொடஹ்கியது. ஆனால் கடலில் கற்பாறையில் மோதியது.

மூன்று முறை தோல்விகளைக் கண்ட சியென் சென் நம்பிக்கையை இழந்து விட வில்லை. கி.பி.744ம் ஆண்டும் அவர் ஜப்பானுக்குச் செல்லத் தயார் செய்தார். அதிகார வட்டாரங்களால் மீண்டும் தடுக்கப்பட்டு தோல்வியடைந்தார். கி.பி.748ல் 61 வயதான போது யாங்சோ நகரிலிருந்து புறப்பட்டு 4 முறையாக ஜியென் செங் பயணமானார். ஆனாலும் சூறாவளி பயணத்திசையை மாற்றியதால் கப்பல் தென் சீனாவின் ஹாய்நான் தீவை அடைந்தது. இறுதியில் அவர் யாங் சோ நகரை அடைந்தார். 5வது முறையும் பயணமும் தோல்வி அடைந்தது. இம்முறை ஜப்பானின் துறவி யோ ஏ, ஜியென் செனின் சீடர் சியாங் சென் இருவரும் ஒருவர் பின் ஒருவராக நோய்வாய்பட்டு காலமானார்கள். அவருக்கோ கடும் களைப்பு. அவருடைய கண்களும் பார்வை இழந்தன.

5 ஆண்டுகள் கடந்து விட்டன. 66 வயதான சியென் சென் தம் கண் பார்வையை இழந்த போதிலும் ஜப்பானுக்கு செல்வதென முடிவு எடுத்தார். கி.பி.753ம் ஆண்டு அக்டோபர் 19ம் நாள் அவர் யாங் சோ நகரை விட்டு புறப்பட்டு இறுதியில் டிசெம்பர் 20ம் நாள் ஜப்பானை அடைந்தார். ஜப்பானில் அவர் சிறப்பாக வரவேற்கப்பட்டார். ஜப்பானிய அரசு அவருக்கு ஆறுதல் தெரிவிக்க கட்டளையிட்டது. அத்துடன் துறவி பட்டம் வழங்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. சியெதை கோயிலும் கட்டப்பட்டது. அவர் இக்கோயிலுக்கு தலைமை தாங்கினார். கி.பி.756ம் ஆண்டு அவர் பெரியார் என்று நியமிக்கப்ப்டடார். பின்னர் அவர் தம் சீடர்களுடன் சேர்நது தான் சௌ தி கோயிலைக் கட்டினார். கி.பி.763ம் ஆண்டு மே திங்களில் அவர் 76வது வயதில் காலமானார். அவருடைய பூதவுடல் ஜப்பானில் புதைக்கப்பட்டுள்ளது.

ஜியென் சென் ஜப்பானில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார். ஜப்பானின் பண்பாட்டின் வளர்ச்சிக்கும் சீன-ஜப்பானிய பண்பாட்டுத் தொடர்புக்கும் அவர் அருங் பங்காற்றினார். ஜியென் சென் ஜப்பானில் பயணம் செய்த போது சீனாவின் தாங் வம்ச ஆட்சிக் காலத்தின் பண்பாடு வளம் அடைந்து வந்தது. பூ வேலைப்பாடு செய்வோர் ஓவியர் ஜேட் பொருகளை செதுக்கும் தொழிலாளிகள் ஆகியோரையும் உருவப்படங்கள் பூவேலைப் பாடுடைய படங்கள், ஜேட் பொருட்கள், செம்பு கண்ணாடிகள் ஆகியவற்றையும் இன்ன பிறவற்றையும் ஜியென் சென் ஜப்பானுக்கு கொண்டு போனார். அவர் கொண்டு போன இந்த சீனாவின் பண்பாட்டுக் கலையை ஜப்பான் ஏற்றுக் கொண்டு ஜப்பானின் துலாக்கோல் பண்பாட்டை உருவாக்கியுள்ளது.

துலாக் கோல் பண்பாட்டின் மையமானது. புத்த மத பண்பாடாகும். இத்துறையில் தான் ஜியென் சென் அருங் பங்காற்றினார். புத்த மத கோயில்களின் கட்டுமான கலையில் சீன கோயில் கட்டுமான அமைப்பின் படி கட்டப்பட்ட தான் சௌ தி கோயில் பின்னர் ஜப்பானின் புத்த மத கோயில்களுக்கு முன் மாதியாக திகழ்ந்தது.

மேலும் ஜியென் சென் சீனாவின் மருத்துவத்தையும் ஜப்பானுக்கு கொண்டு போனார். அவர் ஜப்பானின் பேரரசரின் தாயாருக்கு தாமே மருத்துவ சிகிச்சை செய்தார். அவர் கண் பார்வையை இழந்த போதிலும் அவர் பயன்படுத்திய மருந்து பிசகவில்லை.

ஜியென் சென் தமது அயரா உழைப்பினால் சீன-ஜப்பானிய மக்களின் நட்பு மலர்ந்திய தண்ணீர் விட்டார். சீனஜஜப்பானிய பண்பாட்டு பரிமாற்ற வரலாற்றில் மூடிமறைக்க முடியாத அத்தியாயம் ஒன்றை தீட்டினார். 1973ல் சீனத் துணை தலைமை அமைச்சர் தென் சியௌ பின் ஜப்பானில் தாங் செத்தி கோயிலில் பயணம் செய்த போது துறவி ஜியென் சென்னின் அமரும் சிலையை நாடு திரும்பி பார்க்க விட வேண்டும் என்று இக்கோயில் தலைமை துறவி முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். 1980ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் அவருடைய அமரும் சிலை யாங்சோ நகரில் காட்சிக்க வைக்கப்பட்டு மக்களின் மனமார்ந்த வரவேற்பைப் பெற்றது.


1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040