• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]

ஓங் சவு சியூன்

சீனாவின் பண்டைகால வரலாற்றில் மத்திய சீனாவில் இருந்த ஹான் இன நடுவன் ஆட்சிக்கும் சுற்றுப் பிரதேசத்தில் இருந்த சிறுபான்மை தேசிய இன உள்ளூர் ஆட்சிகளுக்குமிடையில் அவ்வபோது முரண்பாடுகள் ஏற்பட்டன. இம்முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்து வந்தன. ஆனால் சமாதான சக வாழ்வுக்காக பேரரசர்கள் மகளை மணம் செய்து கொடுப்பதன் மூலம் தகராறுகளைத் தீர்ப்பதும் உண்டு.

கி.மு. முதலாவது நூற்றாண்டு சீனாவின் ஹாங் வமிச ஆட்சிகாலமாக இருந்தது. தென் மேற்கு சீனாவிலுள்ள சிறுபான்மை தேசிய இனமான சியொன்னு இன ஆட்சிக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. 5 பழங்குடி தலைவர்கள் பரஸ்பரம் போரிட்டனர். இறுதியில் இரண்டு ஆளுனர்கள் மட்டும் இருந்தனர். எதிர் தரப்பினர் நடுவன் ஆட்சியான ஹான் வமிச ஆட்சியுடன் கூட்டு சேர்ந்து உன்னைத் தாக்கும் என்று இரு தரப்பினரும் பயப்பட்டனர். அப்போது ஹு ஹான் சியெ எனும் ஆளுனர் தாமாகவே ஹான் வமிச ஆட்சியின் தலைநகரான சான் ஆனுக்குச் சென்று ஹான் பேரரசரிடயம் விசுவாசம் காட்டினார். பேரரசர் அவரை உற்சாகத்துடன் வரவேற்றார். அவர் சான் ஆனை விட்டுப் புறப்பட்ட போது பேரரசர் அவருக்கு உணவு தானியங்களை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் குதிரை படையின் பாதுகாப்புடன் அவர் தன் ஆட்சி இடத்துக்குத் திரும்பினார். ஹான் வமிச ஆட்சியின் ஆதரவைப் பெற்ற ஹு யெ சியெ இறுதியில் சியொனஅனுவை மறுபடியும் ஒன்றிணைத்தார்.

ஹான் வமிச ஆட்சியுடன் தலைமுறை தலைமுறையாக நட்பு கொள்ளும் வகையில் கி.மு.33ம் ஆண்டு அவர் மூன்றாவது முறையாக சான் ஆன் சென்றார். பேரரசரின் கமனை திருமண் செய்யுமாறு அவர் பேரரசரிடம் கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கை ஏற்றுக் கொண்ட பேரரசர் தமது பிறந்த மகனை விட விரும்பவில்லை. பிறகு அரண்மனை பணி பெண்களிடம் ஒரு உத்தரவை விடுத்தார்.

"யார் சியென்னு மன்னரை திருமணம் செய்ய விரும்புகிறாரோ அவரை அரச குமாரியாக பேரரசர் ஏற்றுக் கொணன்வார்" என்று இவ்வுத்தரவு கூறியது.

அரண்மனை பணி பெண்கள் அனைவரும் பொது மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிகளாவர். அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்ததும் தமது சுதந்திரத்தை இழந்தனர். கண்டிப்பான பாதுகாப்புடன் கூடிய அரண்மனை விட்டு வெளியேற பெரிதும் விரும்பியதால் சியென்னு மன்னரைச் சிருமணம் செய்ய அவர்கள் யாரும் விரும்பவில்லை.

அக்காலத்து விதிகளின் படி அரண்மனை பணி பெண்கள் தாம் விரும்பிய வாறு பேரரசரைச் சென்று பார்க்க முடியாது. அரண்மனையில் இருந்த ஓவியர்கள் அவர்களுக்காக உருவப் படம் வரைந்து தேர்வுக்காக பேரரசரிடம் வழங்குவார்கள். தேர்ந்தெடுக்கப்ப்ட அரண்மனை பணி பெண்களுக்கு பேரரசரைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைக்க முடியும். ஆதலால் மமவு சென் சொ என்னும் ஓவியர் இவ்வாய்ப்பைப் பயயன்படுத்தி பணி பெண்களிடம் லஞ்சம் மேட்பார். அரண்மனை பணி பெண்களோ பேபபசரால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நினைத்து இந்த ஓவியருக்கு பணமும் பொருட்களும் வழங்குவார்கள். ஓங் சௌ சியூன் எனும் பெண் ஒருவர் இருந்தார். அவர் ஒரு திறமைசாலி. கல்வி கற்பதிலும் கவிதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர். இசை கருவிகளை இசைக்கவும் தெரியும், மேலும் அவர் நேர்மையானவர். இந்த ஓவியருக்கு அவர் பணம் கொடுக்காத படியால் மௌ யென் சொ அவர் மீது பகைமை கொண்டார். ஆதலால் அவருடைய எழில் மிக்க உருவத்தை வரைய அவர் விரும்பவில்லை. இதன் விளைவாக ஓங் சௌ சியூன் அரண்மனையில் பல்லாண்டுகளாக தங்கி இருந்தும் பேரரசரைக் காண முடியாமல் போய்விட்டார்.

சியென்னு மன்னரைத் திருமணம் செய்வது பற்றிய செய்தியைக் கேட்டறிந்த ஓங் சௌ சியூன் தனி நபரின் இன்பத்துக்காகவும் தமது எதிர்காலத்திற்காகவும் அதுவும் ஹாங் மற்றும் சியொன்னு தேசிய இனங்களிடை நட்புப் பூர்வமான சக வாழ்வுக்காகவும் சியொன்னு மன்னரை திருமணம் செய்ய அவர் விருப்பம் தெரிவித்தார். இதைக் கேட்டு மகிழ்ந்த பேரரசர் தலைநகரான சான் ஆனில் இவர்களுக்காக விமரிசையான திருமண சடங்கு நடத்தினார்.

தேவதை போன்ற எவிலார்ந்த மனைவியைப் பெற்று மகிழ்ச்சி அடைந்த சியொன்னு மன்னர் தம் மனைவியுடன் சேர்ந்து பேரரசரிடம் சென்று நன்றி தெரிவித்தார். முதன் முறையாக ஓங் சௌ சியூனைக் கண்ட பேரரசர் அவருடைய அழகான முகத்தைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினார். மீட்பதற்கு வழியில்லாமல் அவர் ஓங் சௌ சியூனை சியொன்னு மன்னருடன் செல்ல அனுமதித்தார். தவிரவும் அரச குமாரி போல் அவருக்கு பல சீதனங்களையும் வழங்கினார்.

ஓங் சௌ சியூன் எழில் மிக்க சிவப்பு ஆடையை அணிந்து வெள்ளை குதிரையில் ஹான் மற்றும் சியொன்னு அதிகாரிகளின் பாதுகாப்புடன் சான் ஆனை விட்டுப் புறப்பட்டு சியொன்னு சென்றடைந்தார். ஆரம்பத்தில் சியொன்னு இன மக்களின் வாழ்க்கை பழக்கவபக்கங்கள் அவருக்கு பரிச்சயமில்லை. ஆனால் அவர் பாடுபட்டு இன்னல்களைச் சமாளித்து படிப்படியாக அவற்றுக் கேற்ப வாழலானார். சியொன்னு மக்களுடன் சுமுகமாக வாழ்ந்தார்.

ஓங் சௌ சியூன் சியொன்னுவில் தமது வாழ்நாளை கழித்தார். அவர் ஹான் இனத்தின் பண்பாட்டை சியொன்னு இன மக்களிடம் பரப்பினார். அவருடைய புதல்வ புதவிகளும் அவருடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஹான் இன மக்களுக்கும் சியொன்னு இன மக்களுக்குமிடையிலான நட்புறவை தொடர்நது வளர்த்தார்கள். இன்றைய உள் மங்கோலியாவின் ஹூர்ஹோட் புறநகரில் "சௌ சியூன் கல்லறை "ஒன்று உள்ளது பண்டைக்கால சியௌனஅனு மக்கள் இந்த நட்புபர்பூர்வமான தேசிய தூதரை நினைவுப்டுத்தும் பொருட்டு இது கட்டப்பட்டது. "ஓங் சௌ சியூன் பற்றிய கதை"பல்லாயிரம் ஆண்டுகளாக சீனாவின் வரலாற்றில் தலைமுறை தலைமுறையாக பரவி வருகின்றது. சீனாவில் கவிதை, இசை நாடகம், நாவல் படைப்பு ஆகியவற்றுக்கு கருப்பொருளாகவும் அது திகழ்கின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040