|
![]() |
சியூவான் சுவாங்
"மேற்கிற்கு சுற்றுலா"எனும் நாவல் சீனாவில் அனைவருக்கும் தெரியும். 4 மேற்கிற்கு சென்று புத்த மத சாதனம் கற்கும் புராணக் கதையை இந்நாவல் கூறுகின்றது. இந்நாவலிலுள்ள கதா நாயகர்கள் பல இடர்பாடுகளையும் இன்னல்களையும் சமாளித்து எண்ணற்ற பேய் பிசாசுகளைத் தோற்கடித்து இறுதியில் வெற்றி பெற்றார்கள். இந்நாவலின் கதா நாயகர்களில் ஒருவரான தாங் சான் ச்சாங் என்பவரின் பாத்திரப் படைப்பு பண்டைக் கால சீனாவின் புகழ் பெற்ற பண்பாட்டுத் தூதரான துறவி சியான் சுவாங் ஆவார்.
சியாங் சுவாங் கி.பி.600ம் ஆண்டு சீனாவின் தாங் வம்ச ஆட்சிக் காலத்தில் பிறந்தார். அவர் சிறு வயதிலேயே தம் புத்தி கூர்மையைக் காட்டினார். குறிப்பாக அக்காலத்தில் பரவி வந்த புத்த மதத்தில் அதிக நாட்டம் காட்டினார். 11 வயதான போது அவர் புத்த மத சாதனங்களை ஓட முடிந்தது. 13 வயதில் அக்காலத்து சீனாவின் முக்கிய பண்பாட்டு நகரான லொ யாங்கில் முணிவரானார். பிறகு புகழ் பெற்ற குருக்களிடம் கற்க நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். 18வது வயதான போது சியாங் சுவாங் புத்த மத வட்டாரங்களில் புகழ் பெறலானார்.
இளமைக் காலத்தில் அவர் புத்த மத தத்துவத்தில் விடாப்பிடியான ஆர்வம் காட்டி அலசி ஆராய்ந்தார். அக்காலத்து புத்த மத சாசனம் அவ்வளவு சரியாக மொழி பெயர்க்கப்பட வில்லை என்ரு அவர் உணர்ந்து கொண்டார். புத்த மதத்தின் தத்துவத்தை மேலும் அறிந்து கொள்ளும் பொருட்டு புத்த மதம் பிறந்த நாடான இந்தியாவுக்குச் செல்வதென அவர் முடிவு எடுத்தார்.
கி.பி.627ம் ஆண்டு அவர் அக்காலத்து சீனாவின் தாஹ் வமித ஆட்சி காலத்தின் தலைநகரான சாங் ஆனிலிருந்து அதாவது இன்றைய சீ ஆன் நகரிலிருந்து புறப்பட்டார். இந்தியாவின் நாளந்தா நகருக்குச் சென்று புத்த மதத்தை ஆராய்வது அவருடைய நோக்கமாகும்.
1300 ஆண்டுகளுக்கு முன் புவியியல் அறிவு பற்றாக் குறை, பின் தங்கிய போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றின் காரணத் தால் மத்திய சீனாவிலிருந்து தொலைவிலுள்ள இந்தியாவுக்கு நடந்து செல்வது எவ்வளவோ இன்னல் வாய்ந்தது. வழியில் மனித நடமாட்டம் இல்லாத பாலைவனங்களையும் அடர்த்தியான காடுகளையும் கடந்த செல்ல வேண்டும்.
இருந்த போதிலும் பயபக்தியான சியுவான் சுவாங் விதம் விதமான இன்னல்களையும் இடர்பாடுகளையும் சமாளித்து இறுதியில் கி.மி.629ம் ஆண்டு கோடைகாலத்தில் வட இந்தியாவை அடைந்தார். பிறகு மத்திய இந்தியாவுக்குள் நுழைந்து புத்த மதத்தின் 6 புனித இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
கி.பி.631ம் ஆண்டில் சிவாங் சுவாங் நாலாந்தா கோயிலில் புத்த மதம் பயின்றார். அங்கு 5 ஆண்டுகள் கற்றார். பிறகு 6 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று புத்த மதம் பயின்றார். அவர் 10க்கும் அதிகமான புத்த மதத் துறவிகளிடம் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அக்கலாத்து தலைசிறந்த புத்த மத புலவர்களில் ஒருவரானார். ஒரு தடவை அனைத்து இன்திய புத்த மத த்துவம் பற்றிய ஒரு கருத்தரங்கில் இதில் கலந்து கொண்டோர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். இதனால் அவர் இந்தியாவின் மத வட்டாரங்களில் புகழ் பெற்றார்.
கி.பி. 643ம் ாண்டு வசந்த காலத்தில் சிவாங் சுவாங் தாய்நாட்டுக்குப் புறப்பட்டார். தாம் பல்லாண்டுகளாக சேகரித்து வைத்த புத்த மத சாசனங்களையும் புத்த மத சிலைகளையும் நாட்டுக்குக் கொண்டு வந்தார். அவரை வரவேற்க அக்காலத்து சீனாவின் பேரரசர் தாங் தைய் சொங் தாமாகவே ஆட்களை அனுப்பி வைத்தார். மத சார்பற்ற வாழ்க்ககையை மீண்டும் தொடங்கி அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்று பேரரசர் முன்வைத்த கோரிக்கையை அவர் மறுத்தார். பின்னர் சாங் ஆன் நகரிலுள்ள ஹொங் பு கோயிலிலி வாழகத் துவங்கினார். பேரரசர் ஆதரவுடன் புத்த மத சாசனத்தின் பெரிய மொழிப் பெயர்ப்பு மன்றத்தை உருவாக்கும் பொருட்டு அவர் பல்வேறு இடங்களிலுள்ள துறவிகளையும் அறிஞர்களையும் வரவழைத்தார். இவர்கள் 19 ஆண்டுகளாக மொழிப் பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் மொத்தமாக 1335 தொகுதிகளைக் கொண்ட 75 புத்த மத சாசனங்களை மொழி பெயர்த்தார்கள். அன்றியும் தமது முதுமைக் காலத்தில் புத்த மதத்தின் தொனூலான "மகா பிரஜினா பாரமித்தா சூத்திர"எனப்படும் நூலிந் 600 தொகுதிகளை மொழி பெயர்த்தார். சியாங் சுவான் வட மொழியில் தேர்ச்சி பெற்றதால் அவர் மொழிபெயர்த்த புத்த மதச் சாசனங்கள் மிகவும் தலைசிறந்தவை.
சியாங் சுவாங் புத்த மத சாசனங்களை மொழி பெயர்த்த அதே வேளையில் புதிய மதத் தத்துவங்களையும் படைத்தார். சீன புத்த மத வரலாற்றில் உள்ள பாஃசியாங் சொங் எனும் பிரிவு அவரால் படைக்கப்பட்டது. அவருடைய ஜப்பானிய சீடர் நாடு தும்பிய பின் ஜப்பானிய பாஃசியாங் சொங் கைப்படைத்தார். இது இப்போதும் ஜப்பானில் பரவி வருகின்றது. வட கொரிய சீடர் யுவான் ச்செ நாடு திரும்பிய பின் வட கொரியாவின் பாஃசியாங் சொஹ்கைப் படைத்தார்.
ருத்த மத நூல்கள் தவிர சியாங் சுவாங் தமது அனுபவத்தின் படி கேட்டெழுதல் மூலம் ஏராண்டாக "பெரிய தாங் வமிசக் காலத்து சீனாவின் மேற்கு அண்்டை நாடுகளிலான சுற்றுலா குறிப்பு"எனும் நூலை அவருடைய சீடர்கள் இயற்றினார்கள். இந்த நூல் அவருடைய 10 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் தமது சுற்றுலா வாழ்க்கையில் கடந்து சென்ற 100க்கும் அதிகமான நாடுகளை வகைப்படுத்தி அவற்றின் வரலாறு புவியில் அமைப்பு தேசிய இன தோற்றம் மூல பொருட்களும் வானிலைகளும் பண்பாடும் அரசியல் முதலியவற்றை வர்ணிக்கின்றது. இது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் பண்டைக்கால வரலாற்றையும் புவியியல் நிலையையும் ஆராய்வதற்கு அரிய தகவல்களை இந்நூல் தருகின்றது. 19ம் ஆநூற்றாண்டு முதல் இந்நூல் பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நவகால தொல் பொருள் ஆய்வாளர்கள் இந்நூலில் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பண்டைக்கால இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் வரலாற்று பம்பாட்டு சிதிலங்களைத் தோண்டியெடுத்து ஆராய்ந்து நல்ல பயனைப் பெற்றுள்ளனர். சியாங் சுவாங்கின் பண்பாட்டு தாக்கமானது அவர் மேற்கிற்குச் சென்று புத்த மதம் கற்றுக் கொண்டதன் நோக்கத்தையும் நேரடியான விளைவையும் வெகுவாக தாண்டியுள்ளது. இது சீனா மற்றும் கிழக்கு பண்பாட்டு வரலாற்றில் முக்கிய இடம் பெறுகின்றது. சியாங் சுவாங் ஒரு தலைசிறந்த மொழி பெயர்ப்பாளரும் புத்த மத தத்துவ ஞானியும் மட்டுமல்ல மத்திய பண்டைக் காலத்தின் ஒரு மாபெரும் சுற்றுலாப் பயணியும் ஆவார். 17 ஆண்டுகளில் 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து 110க்கும் அதிகமான நாடுகளுக்குச் சென்றார். இது போன்று உலக வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. இந்த நூல் இறவாத் தன்மை மாய்ந்த புகழ் பற்ற உலக நூல் எனவும் புகழ்ந்து போற்றப்படுகின்றது.
|