• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]

மன்னர் சூசுவான்

சுயகட்டுப்பாடு சகிப்பு தன்மை ஆகியவை படைத்த கீனாவில் மக்கள் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முடிந்தது. "மன்னர் சூசுவான் தொப்பியின் அலங்காரப் பொருட்களை அகற்ற மறுப்புத"எனும் பழமொழி நல்லெண்ணத்துடன் செயல்பட்டு இறுதியில் நல்ல பயன் தரும் வகையில் சகிப்புத் தன்மையுடன் மக்களுடன் பழக வேண்டும் என்ரு மக்களுக்கு அறிவுறுத்துகின்றது.

இதோ இப்பழமொழி பர்றிய கதையைக் கேளுங்கள்.

கி.மு.7வது நூற்றாண்டின் வசந்த இலையுதிர்கால வம்சகாலத்தில் சீனாவில் பல சிற்றரசுகள் நிலவின. சூ அரசிந் மன்னரான சூசுவான் விவ்கமும் மன உறுதியும் மிக்கவர். அவருடைய ஆட்சியிந் கீழ் சூ அரசு ஒரு சிறிய அரசிலிருந்து வலிமைமிக்க அரசாக மாறியது.

ஒரு நாள் மன்னர் ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு விருந்து அளித்தார். அரண்மனையில் இருந்து ஆசைநாயகிகளும் இதில் கலந்து கொண்டனர். அனைவரும் மது அருந்திக் கொண்டே கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்கள். விருந்து அந்தி வேளையில் நடைபெற்றது. ஆனால் யாரும் அங்கிருந்து செல்ல விரும்பவில்லை. ஆகவே விருந்து மண்டபத்தில் மெழுகு வர்த்தியை ஏற்றி தொடர்ந்து மது அருந்தி விளையாட மன்னர் கட்டளையிடாட்ர. கோலாகலமான கொண்டாட்ட காட்சியைக் கண்டு மகிழ்ந்த மன்னர் தமது ஆசை நாயகிகளான மைய் ச்சி, சியூ ச்சி இருவரையும் அமைச்சர்களுடன் சேர்ந்து மது அருந்தி விளையாட கட்டளையிட்டார்.

திடீரென பெரிய காற்று வீசியது. பண்பத்தில் இருந்து மெழுகு வர்த்திகள் அனைத்தும் அமைந்தன. ஆசை நாயகி சியூ ச்சிக்கு காமக் குறும்பு ஏற்பட்டதை உணர்ந்தார். கோபமடைந்த அவர் அந்த அதிகாரியிந் தொப்பியின் அலங்காரப் பொருளை பிடுங்கிக் கொண்டு மன்னர் சுச்வானிடம் விரைந்தரா."சுற்று முன் யாரோ ஒருவர் என்னை மான பங்கம் செய்தார். நான் அவருடைய தொப்பியின் அலங்காரப் பொருளைப் பறித்துக் கொண்டேன். சிறிது நேரத்துக்குப் பின் மெழுகு வர்த்திகள் கொழுத்தப்பட்ட பின் யாருடைய தொப்பியில் அலங்காரப் பொருள் இல்லையோ அவரைத் தண்டிக்க வேண்டும்"என்றார் அவர். இதைக் கேட்டறிந்த மன்னர் சூ சுவான் "முதலில் மெழுகு வர்த்தியை ஏற்ற வேண்டாம். இருளுடன் மது அருந்து வது எவ்வளவே அர்த்தமுடையது"என்றார். பிறகு அனைவரும் தொடர்ந்து இருளில் மது அறுந்தி விளையாடினஆர்கள். சற்று நேரத்திற்குப் பின் "இன்ரு அனைவருக்கும் விருந்து அளிக்கிறேன். அனைவரும் சந்தோஷமாக மது அருந்து விட்டீர்களா?"என்று கேட்டார். "நன்றி மன்னரே! இன்று நாங்கள் மிக மகிழ்ச்சியுடன் மது அருந்திவிட்டோம்" என்று அனைவரும் பதிலளித்தனநர். "உண்மையா? அப்படியிருக்க அனைவரும் தொப்பியின் அலங்காரப் பொருளை ஒடிக்காவிட்டால் நீங்கள் ஆசை தீர விளையாட வில்லை" என்று பொருள். எனவும் மன்னர் கூறினார். இதைக் கேட்ட அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக தமது தொப்பிகளைக் கழற்றி அதிலுள்ள ்லங்கார்ப பொருட்களை ஒடித்தனர். அப்போது மெழுகு வர்த்தியை ஏற்றுமாறு மன்னர் கட்டளையிட்டார். தத்தமது தொப்பிகள் முன்பு போல் இல்லாததைக் கண்டு அனைவரும் கலகலவென்று சிரித்தார்கள். அவர்கள் அசை தீர மது அருந்தினர்கள். விடிந்த பிறகு அவர்கள் மன நிறைவுடன் வீடு திருந்பினர்.

அரண்மனைக்குத் திரும்பிய ஆசை நாயகி சியூ மிகவும் கோபமடைந்தார். மன்னரிடம் முரையிட்டார். அக்காலத்து சட்டப்படி ஆசை நாயகியை மானபங்கம் செய்வருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். "மன்னரே தாங்கள் இவ்வாறு அவர்களுக்கு உடந்தையாக இருந்தீர்கள் பிறகு அவர்கள் மேலும் தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்"என்று "ஆசை நாயகி சியூ கூறினார். அனைவரையும் ஆசை தீர விளையாட விடும் பொருட்டு நான் அதிகாரிகளுக்கு மது விருந்து அறித்தேன். மது அருந்திய பின் இயல்பை இழப்பது சகஜமானது. இதற்காக அதிகாரிகளுக்கு தண்டனை விதித்தால் விருந்துக்கு தொல்லை கொடுப்பது மட்டுமல்ல அவர்களையும் அவமானப்படுத்தியதாகும். இது நான் விருந்து அளித்ததன் நோக்கம் அல்ல"என்றார் மன்னர்.

பின்னர் மன்னர் ச்சூ ச்சுவான் செங் எனும் நாட்டை தாக்கினார். தாங்சியௌ எனும் தளபதி துணிவுடன் போரிட்டார். அரஞ்செயலாற்றினார். இதனால் ராணுவத்தின் போராற்றல் பீறிட்டு எழந்தது. இவர்கள் செங் நாட்டின் தலை நகரைத் தாக்கிக் கைப்பற்றினார்கள். இதனால் மன்னர் ச்சுச்சுவானின் புகழ் பெரிதும் பரவியது. இந்தத் தளபதி வேறு யாருமில்லை. விருந்தில் ஆசை நாயகி சியூவால் தொப்பி அலங்காரப் பொருளைப் பறித்தெடுக்கப்பட்டவர் தான். அவர் துணிவுடன் போரிட்டன் நோக்கமானது மன்னரின் பெரும் தன்மைக்கு கைமாறாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040