• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]

சி ஜீ குவான்

சீனாவின் புஃசியன் மாநிலத்தின் யூ சான் எனுமிடத்தில் பெரியார் சி ஜி குவான் நினைவு மண்டம் ஒன்று உள்ளது. பயணிகள் இங்கு வந்து நாட்டுப்பற்றுமிக்க வீரரான சி ஜி குவானின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்கள். ஜப்பானிய கடற்கொள்ளைக்காரர்களுக்கு எதிரான போரிடுவதில் அவர் ஆற்றிய அருங்செயல்களை அவர்கள் நினைவுபடுத்துகின்றனர்.

சி ஜி குவான் என்பவர் மின் வமிச ஆட்சிக் காலத்தின் புகழ் பெற்ற தலைமைத் தளபதியாவார். தளபதி வீட்டில் பிறந்த அவர் சிறு வயதிலேயே தம் தந்தையிடமிருந்து கல்வி கற்று ராணுவத் துறையில் அதிக ஆர்வம் காட்டினார். கல்வியிலும் போர்க் கலையிலும் தேர்ச்சி பெற்ற நேர்மையான ராணுவ வீரராக இருக்க வேண்டும் என்று அவர் அப்போதே மன உறுதி பூண்டார். அக்கலாத்தில் சீனாவின் கடலோரப் பகுதிகள் அடிக்கடி ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்களால் தாக்கப்பட்டன. இந்த ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்களின் அட்டூழியங்கள் மீது சி மிகவும் வெறுத்தார். 17 வயதில் அவர் தம் தந்தையாரின் பதவியை ஏற்று தீவிரமான போர் ராணுவ வாழ்க்கையை கடத்தத் துவங்கினார். ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்கள் உருவாக்கிய சொல்லைகள் அவரை எதிர்நோக்கிய கடுமையான பிரச்சினையாக இருந்தது.

ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்கள் என்றால் ஜப்பானின் உள் நாட்டுப் போரின் போது தோல்வியுற்று எஞ்சிய போர் வீரர்களும் தளபதிகளும் ஒரு பகுதி கொள்ளைக் காரர்களும் வணிகர்களும் ஆவர். 14ம் நூற்றாண்டின் யூ வான் வமிச ஆட்சிக் காலத்தின் இறுதிக் காலம் முதல் மிங் வமிச ஆட்சிக் காலத்தின் துவக்கக் காலம் வரை அவர்கள் அடிக்கடி கப்பல்களில் வந்து சீனாவின் கடலோரப் பகுதிகளில் கொள்ளை அடித்தனர். ஆட்களைக் கொன்று தீயிட்டனர். 15ம் நூற்றாண்டின் பிற்பாதியில் அவர்கள் மேலும் காட்டு மிராண்டித் தனமாக செயல்பட்டனர். சீனாவின் கடலோரப் பகுதியிலுள்ள உள்ளூர் கொடுங் கொண்மையாளர்களுடனும் பொல்லா வணிகர்களுடனும் ரகசியக் கூட்டு சேர்ந்து சீய செயல்களில் ஈடுபட்டனர். சிலர சீனாவின் உள் பிரதேசத்திற்குள் ஊடுருவிச் சென்று வாமட்டங்களைத் தாக்கிக் கைப்பற்றினர். உண்மையில் இவர்கள் சீனாவின் தென் கிழக்கு கடலோரப் பகுதிக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக சீய சக்திகளாக விளங்கினர்.

1555ம் ஆண்டு சி ஜி குவாங் சான்துங் மாநிலத்தில் ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்களை எதிர்த்துப் போரிடுவதில் அருங்செயல்களை ஆற்றியதால் தலைமை தளபதியாக பணியாற்ற அவர் செச்சியாங் மாநிலத்தின் திங் காய்க்கு அனுப்பப்பட்டார். அது ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்கள் அடிக்கடி செயல்படும் மைய பிரதேசமாகும். அதனால் விவசாயிகளும் சுரங்கத் தொளிளாளர்களும் அடங்கிய பெரும் படை ஒன்றை சி ஜி குவாங் உருவாக்கினார். போர்களில் அவருடைய படை முதலில் தீக் கணைகள் வில் அம்புகள் ஆகியவற்றின் பாதுகாப்புடன் போரிட்டது. எதிரிகள் நூறு காலடிகளுக்குள் சென்ற போது அவர்கள் தீக் கணைகளைச் செலுத்துவார்கள். 60 காலடிகளுக்குள் எதிரிகள் சென்ற போது அவர்கள் அம்புகளைச் செலுத்துவார்கள். எதிரிகள் மேலும் உள்ளே வந்தால் அவர்கள் இரண்டையும் பயன்படுத்தி பாய்ந்தோடிச் சென்று போரிடுவார்கள்.

4000 போர் அடங்கிய இந்தப் புதிய படை தலைமை தளபதி சியின் கண்டிப்பான பயிற்சியினால் போர்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றது. இதனால் மக்கள் அவர்களை மிகவும் விரும்பினார்கள். இப்படையை சி குடும்ப படையென மக்கள் அழைப்பது உண்டு

1561ம் ஆண்டு ஆயிரக்கணக்கான ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்கள் நூற்றுக்கு அதிகமான போர் கப்பல்களுடன் செச்சியாங் மாநிலத்தின் தைய் சோ பிரதேசத்தின் மீது படையெடுத்தனர். சி குடும்ப படை இச்செய்தியை கேட்டறிந்ததும் விரைவில் அவர்களை எதிர்த்து போரிட்டது. தைய் சோ பிரதேசத்தில் 9 தடவை அது போரிட்டது. எதிரிகள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். அதன் பிறகு ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்கள் சி குடும்பம் என்று கேட்டதுமே பெரும் பீதியடைந்தனர்.

சி ஜி குவாங்கும் இதர தளபதிகளும் கூட்டாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஜப்பானிய கடற் கொள்ளைக் காரர்களுக்கு எதிரான போர் வெற்றி மேல் வெற்றி பெற்றது. செச்சியாங், புஃசியன் உள்ளிட்ட கடலோரப் பிரதேசங்கள் நாளுக்கு நாள் அமைதியாக மாறின. பொருளாதாரமும் படிப்படியாக வளமடைந்தது. இப்போர்களில் சி ஜி குவாங் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரஞ்செயல்களை அக்கால மக்களும் பிற்கால மக்களும் புகவ்ந்து போறியுள்ளார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040