|
![]() |
யூ பொ யாவும் சுங் ச்சு ச்சியும்
வசந்த இலையுதிர் வம்ச காலத்தில் ச்சு நாட்டில் யூ பொ யா எனும் புகழ் பெற்ற இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். அவர் இளம் வயதிலேயே தன் அறிவுக் கூர்மையைக் காட்டினார். இசையில் அதிக நாட்டமும் காட்டினார். இதனால் புகவ் பெற்ற இசை ஞாணி செங் லியனிடமிருந்து இசை கற்றுக் கொண்டார்.
மூன்று ஆண்டுகளாக இசை கற்றுக் கொண்ட பின் அவர் புகழ் பெற்ற இசைக் கருவானார். ஆனால் அவர் இன்னும் மனநிறைவடையவில்லை. கலையில் உச்சக் கட்டத்தை அடையாததற்காக அவர் வருத்தப்பட்டார். இதைக் கேட்டறிந்த அவருடைய ஆசிரியர் "எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் உனக்குக் கற்றுத் தந்தேன். நீ நன்றாய் கற்றுக் கொண்டாய். இசை உணர்வைப் பொறுத்து நானே நன்கு கற்றுக் கொள்ள முடியவில்லை. என் ஆசிரியர் பான் ச்சி சுண் ஒரு தலைமுறை ஆசான். அவருடைய இசை நுட்பமும் நேர்ச்சியானது. இப்போது அவர் கிழக்கு சீனக் கடலின் ஒரு தீவில் வசிக்கிறார். நான் உன்னை அவரிடம் அழைத்துச் செல்கிறேன். நீ அவரிடமிருந்து தொடர்ந்து கற்றுக் கொள்ளலாம். எப்படி"என்றார். இதைக் கேட்ட யூவின் மனம் எண்ணெயில் விழுந்த பூரி போல் பூரித்தது. பிரமாதம் பிரமாதம் என்றும் அவர் சொன்னார்.
பிறகு இவர்கள் இருவரும் போதுமான உணவுகளை எடுத்துக் கொண்டு படகில் கிழக்கு சீன கடலுக்கு புறப்பட்டனர். படகு பென்லை மலையை அடைந்தது."இங்கே இரு. நான் ஆசிரியரை அழைத்து வருகிறேன்"என்றார் செங் லியன். அவர் சென்று பல நாட்கள் ஆயின. அவர் திருந்பவே இல்லை. பொ யா மிகவும் துன்பப்பட்டார். அவர் பெரும் கடலை ஏறி பார்த்தார். கடலலைகள் கொந்தளிப்பாக இருந்தன. தீவை நோக்கி திருந்பிப் பார்த்த போது ஒரே மொனமாக இருந்தது. பறவைகள் மட்டும் சோக பாடல் பாடின. இக்காட்சியைக் கண்ட பொ யா உணர்ச்சிவசப்பட்டு ஒரு இசையை இசைத்தார். அந்த இசையில் சோக உணர்வு ததும்பியது. அப்போது முதல் பொ யாவின் இசை இசைக்கும் நட்பம் பெரிதும் உயர்ந்தது. உண்மையில் அவரை இயற்கை உலகில் ஒரு வகை உணர்வை நாடிக் கண்டறிய துணை புரியும் பொருட்டே அவருடைய ஆசிரியர் இவ்வாறு செய்தார்.
பொ யா தன்னந்தனியாக தீவில் இருந்து கடலுக்குத் துணையாக விளங்கினார். பறவைகளின் நண்பராகிவிட்டார்ய இயல்பாகவே அவருடைய உணர்வில் மாற்றம் ஏற்பட்டது. பின் அவர் ஒரு புகழ் பெற்ற இசை ஆசான் ஆனார். ஆனால் அவருடைய இசையை கேட்டறிந்தவர்கள் மிகவும் குறைவு.
ஒரு முறை அவர் படகுடன் ஆற்றில் உல்லாசப் பயணம் மேற்கொண்டார். படகு ஒரு மலை பக்கம் போய்ச் சேர்ந்த போது திடீரென பெரும் மழை கொட்டியது. படகு மலை பக்கத்தில் நிற்க வேண்டிரிருந்தது. இம்மழைக் காட்சியைக் கண்டு கமிழ்ந்த பொ யா உணர்ச்சிவசப்பட்டு இசை இசைக்கலானார். சட்டென்று இசைக் கருவியின் நரம்பு நடுங்கியது. அருகில் யாரோ ஒருவர் இசையைக் கேட்டு ரசிக்கிறார் என்று பொருள். பொ யா படகிற்கு வெளியே வந்து பார்த்தார். கரையில் சொங் ச்சி ஜி எனும் விறகு வெட்டுபவர் ஒருவர் காணப்படார்.
பொ யா அவரை படகிற்குள் அழைத்தார். இருவரும் தத்தம் பெயர்களைத் தெரிவித்தனர். பொ யா "உயர் மலை"எனும் இசை ஒன்றை இசைத்தார். "எவ்வளவோ கம்பீரமான மலை!"என்று ச்சுச்சி புகழ்ந்து போற்றினார். பிறகு"நீரோட்டம்"எனும் இன்னொரு இசையை பொ யா வாசித்தார். "ஆற்று நீர் எவ்வளவோ கொந்தளிப்பாக உள்ளது"என்று ச்சு ச்சி போற்றினார். இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பொ யா "உலகில் நீங்கள் தான் என் இதய ஒலியை புரிந்து கொண்டீர்கள். நீங்கஏ என் உற்ற நண்பர்"என்றார். பின் இருவரும் உற்ற நண்பர்களாயினர்.
உல்லாச பயணத்துக்குப் பின் ச்சு ச்சியைச் சென்று பார்க்க அவருடைய வீட்டுக்குச் செல்ல இருவரும் திட்டமிட்டனர். திட்டப் படி ஒரு நாள் பொ யா அவருடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால் தூரதிருஷ்டவசமாக ச்சு ச்சி நோய்வாய்ப்பட்டு காலமானார். பெரும் துக்கமடைந்த பொ யா ச்சு ச்சியின் கல்லறைக்குச் சென்று அவருக்காக துக்க இசை ஒன்றை வாசித்தார். பிறகு தமது விலை மதிப்புள்ள இசைக் கருவியை ச்சு ச்சியின் கல்லறைக்கு முன் உடைத்து நொறுக்கினார். பிறகு பொ யா இசை இசைக்கவே இல்லை.
|