• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]

சூ வு

ஆடுகளை மேய்க்கும் சூ வு எனும் கதை சீனாவில் மிகவும் பரவலாக வழங்கப்படுகின்றது. மிகவும் மோசமான சூழ்நிலையில் சூ வு கோடுங்கோலாட்சிக்கு பயப்படாமல் தமது உள்ளதை தேசிய எழுச்சியை நிலைநாட்டியது பற்றிய கதை இது.

சூ வு என்பவர் கி.மு.முதலாவது நூற்றாண்டில் சீன ஹான் வமிச ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தார். அப்போது மத்திய சீனப் பிரதேசத்து ஹான் ஆட்சிக்கும் வட மேற்கு சீனாவின் சிறுபான்மை தேசிய இனமான சியௌன்னு ஆட்சிக்கும் இடையில் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. கி.மு.நூறாண்டில் சியொன்னு ஆட்சியின் புதிய ஆளுநர் பதவிக்கு வந்தார். நட்புறவைக் காட்டும் வகையில் ஹான் வமிச ஆட்சியின் பேரரசர் சூ வு தலைமையிலான நூறு பேர் கொண்ட தூதுக் குழு ஒன்ரை அங்கு அனுப்பினார். இத்தூதுக் குழு பல செல்வங்களை அங்கு கொண்டு சென்றது. ஆனால் எதிர்பாராதவாறு சூ வு தம் நடமையை நிறைவேற்றி நாடு திரும்ப விருந்த போதே சியொன்னு ஆட்சியின் மேல் மட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனால் சூ வு அங்கு தடுக்கப்பட்டார். ஹான் வமிச ஆட்சிக்குத் துரோகம் செய்து சியொன்னு ஆளுநரிடம் அடிபணியும் படி அவர் கோரப்பட்டார்.

துவக்கத்தில் அவருக்கு அதிக ஊதியமும் உயர் அதிகாரி பதவியும் தரப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்தனர். சூ வு இதை உறுதியாக மறுத்து விட்டார்.

அறிவுறுத்தல் பயனற்றதைக் கண்டு சியொன்னு ஆட்சியாளர்கள் அவரைக் கடுமையாக சித்திரவதை செய்தனர். அப்போது கடும் குளிர்காலம். பெரும் உறைபனி பெய்தது. அவரை ஒரு சிறந்த நிலவறையில் அடைக்குமாறு சியொன்னு ஆளுனர் கட்டளையிட்டார். அதனிடையில் அவருக்கு உணவு மற்றும் நீர் நிவியோகம் துண்டிக்கப்பட்டது. இவ்வாரு செய்வதன் மூலம் ரான் வம்ச ஆட்சியின் மீதான சூ வுவின் விசுவாசத்தை மாற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். காலம் போகப் போக சூ வு நிலவறையில் கடைமையாக சித்திரவதை செய்யப்பட்டார். தாகம் ஏற்படும் போது அவர் ஒரு கைப்பிடி உறைபனியை எடுத்துச் சாப்பிடுவார். பசி ஏற்படும் போது தமது ஆட்டுத் தோல் கோட்டை உண்பார். பல நாட்கள் கடந்து சென்ற பின் மரண விளிம்பில் இருந்த சூ வு இன்னும் அடிபணியாததைக் கண்டு சியொன்னு ஆளுநர் வேறுவழியின்றி அவரை விடுதலை செய்தார்.

சூ வுவின் அடிப்பணியா எழுச்சியைக் கண்ட சியொன்னு ஆளுனர் சூ வுவை கொல்லவோ. அவரை தன் நாட்டுக்கு அனுப்பவோ விரும்பவில்லை. இறுதியில் ஆடுகளை மேய்க்க அவரை சைபிரியாவின் பெகார் ஏரிக்கு அனுப்பினார்.

இறுதியில் சூ வு மனித நடமாட்டம் இல்லாத பெய்கார் ஏரி கரைக்கு அனுப்பபட்டார். அங்கிலிருந்து அவர் தப்பிச் செல்லவே முடியாது. ஹான் வமிசத்தின் பிரதிநிதியான அநத தூதுவருக்கு தணையாக தடியும் ஆட்டு மந்தையும் தான் இருந்தன. சூ வு நாள்தோறும் இந்தத் தடியைக் கொண்டு ஆடுகளை மேய்ப்பார். என்றாவது ஒரு நாள் தம் நாட்டுக்கு திரும்ப முடியும் என்று அவர் எண்ணினார். நாட்கள் செல்லச் செல்ல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்தத் தடியின் மேல் உள்ள ணலங்காரப் பொருட்களும் காணாம்ல போய்விட்டன. சூ வுவின் தலைமுடியும் தாடியும் நரைத்துப் போயின.

பெகார் ஏரி பக்கத்தில் சூ வு 19 ஆண்டுகளாக ஆடுகளை மேய்த்தார். அப்போது அவரை சிறைப்படுத்த கட்டளையிட்ட சியொன்னு ஆட்சியாளர் மரணமடைந்தார். ஹான் வமிசக்காலத்து பேரரசரும் காலமானார். புதிய பேரரசரும் சியொன்னுவின் புதிய ஆட்சியாளரும் பதவிக்கு வந்தனர். புதிய சியொன்னு ஆளுனர் நட்புறவு கொள்கை செயல்படுத்தினார். சூ வுவை தம் நாட்டுக்கு அழைத்துச் செல்ல ஹான் வமிச ஆட்சியின் புதிய பேரரசர் தூதரை அங்கு அனுப்பினார்.

சூ வு தலைநகரில் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். அரசு அதிகாரிகளும் பொது மக்களும் அவருக்கு பேரனபும் மதிப்பும் தெரிவித்தனர். ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இருந்தும் சூ வுவின் உன்னதத தேசிய எழுச்சி இது வரையிலும் சீன மக்களுக்கு முன் மாதிரியாக விளங்குகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040