• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]

ராணுவத் தளபதிகளின் முன்னோடி செங் வூ  

கி.மு.6ம் நூற்றாண்டில் வாழ்த ராணுவ வல்லுனர் செங் வூ புகழ் பெற்றவர். அவர் எழுதிய "செங் ச்சுவின் போர்க் கலை"எனும் நூல் பண்டைக்கால சீனாவின் மாபெரும் ராணுவ தத்துவ நூலாகும். உலகில் செல்வாக்கு மிக்க மிகவும் பரலலான பண்டைக்கால சீன நூல்களில் ஒன்றும் ஆகும். செங் வூ பண்டைக்கால மற்றும் நவகால சீன அந்நிய ராணுவ வல்லுனர்கள் அவரை ராணுவத் தளபதிகளின் முன்னோடி என புகழ்ந்து போற்றினார்கள்.

செங் வூ கி.மு.551ம் ஆண்டில் பிறந்தார். அப்போது சர்வாதிகாரத்துக்காக சிறிய அரசர்கள் போரிட்ட வசந்தகால மற்றும் இலையுதிர் காலமாகும். செங் வூ ச்சி நாட்டைச் சேர்ந்தவர். 19 வயதான போது அவர் கிழக்கு சீனாவின் வூ நாட்டுக்குச் சென்றார். வூ நாட்டின் தலை நகரின் புறநகரில் நுணுக்கமாக ராணுவ நூல் இயற்றினார். வூ அரசின் அமைச்சர் வூ ச்சு சி அவரை வூ மன்னரிடம் பரிந்துரை செய்தார். செங் வூ போர்க் கலை பற்றி தாம் எழுதிய 13 கட்டுரைகளை வூ மன்னரிடம் அந்பளிப்பாக வழங்கினார். அதைப் படித்து முடித்த வூ மன்னர் "பிரமாதம்!பிரமாதம்!"என்று கூறி அவரைப் பாராட்டினார். ஆனால் இந்த தத்துவத்தை நடைமுறைக்குப் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகம் கொண்ட வூ மன்னர் பயிற்சிக்காக அரண்மனை பணிப் பெண்களை வரவழைத்தார்.

செங் வூ 180 பணிப் பெண்டகளை இரண்டு அணஇகளாகப் பிரித்து மன்னர் வூவுக்கு பிரியமான இரண்டு ஆசை நாயகிகளை இவ்விரண்டு அணிகளின் தலைவிகளாக அமர்த்தினார். ராணுவ பயிற்சி துவங்கலாயிற்று.

செங் வூ ஆணையிடும் மேயில் நின்று பயிற்சிக்கான முக்கிய கோட்பாடுகளை உணர்வுபூர்வமாக எடுத்துக் கூறினார். ஏற்பாட்டுப் பணி முடிந்த பின் அவர் மேளதாளம் அடிப்பதன் மூலம் கட்டளையிட்டார். ஆனால் பணிப் பெண்கள் அவருடைய கட்டளைக்கு இணங்க செயல்படாமல் விளையாடினர். அப்போது அணிகள் சிதறிக்கிடந்தன. செங் வூ மீண்டும் கட்டளையிட்டாலும் பணிப் பெண்கள் இன்னும் கட்டுப்பட வில்லை. பின் இவ்விரு அணிகளின் தலைவிகளை கொல்ல அவர் கட்டளையிடார். தமக்குப் பிரியமான ஆசை நாயகிகள் கொல்லப்படுவதைக் கேட்டறிந்த மன்னர் ஊ செங் வூவிடம் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கோரினார். ஆனால் அதை மறுத்த செங் வூ ராணுச் சட்டத்தின் படி அவர்களை கொன்றார். பின் வேறு இருவரை தலைவர்களாக அமர்த்தினார். இதனால் ராணுவப் பயிற்சி நீடித்தது. செங் வூ மீண்டும் மேளதாளம் அடிக்க தொடங்கிய போது பணி பெண்கள் விளையாடத் துணியாமல் ராணுவ பயிற்சியில் ஈடுபட துவங்கினார்கள். அவர்களின் பயிற்சி சட்டத்துக்கு பட்டதாகும். அணிகளும் மிகவும் ஒழுங்கான முறையில் வடிவமைந்தது. இதைக் கண்ட மன்னர் வூவின் கோம் தீர்ந்து விட்டது. அவரை தளபதியாக அமர்த்தினார்.

சென் வூ கண்டிப்பான முறையில் பயிற்சி அளித்ததன் விளைவாக ஊ ராணுவத்தில் போர் ஆற்றல் கிருப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. பிறகு செங் வூ இரண்டு தலைமுறை மன்னர்களுக்கு உதவி செய்தார். சிறிய அரசர்களுக்கு எதிரான போர்களில் ஊ ராணுவம் வெற்றி மேல் வெற்றிபெற்றது.

கி.மு.482ம் ஆண்டு ஊ மன்னநர் சிறிய அரதர்களுக்கிடையில் சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டினார். இதில் செங் வூ நுணுக்கமாக பயிற்சி அளித்து வருவாக்கிய ராணுவ தந்திரங்கள் வெளிப்படையான பங்கை ஆற்றியுள்ளன.

ஊ நாட்டின் லட்சியப் பணி மேலோங்கி வளர்வதுடன் ஊ நாட்டு மன்னர் பு ச்சாய் விசுவாசமான அரசு அதிகாரிகளின் கூற்றுக்களைக் கேட்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்யும் அரசு அதிகாரிகளின் அவதூறுகளை நம்பி செயல்ப்பட்டார். அதனால் செங் வூ தலைமறைவாக மலைப் பகுதியில் வாழலானார். தமது அனுபவத்தின் படி போர்க் கலை பற்றிய 13 கட்டுரைகளை அவர் சீர்திருத்தி முழுமைபடுத்தினார்.

"செங்ச்சு போர் கலை"எனும் ராணுவ நூலிில் 6000 எழுத்துக்ககளைக் கொண்ட 13 கட்டுரைகள் இடம் பெற்று செங் வூவின் முழுமையான ராணுவ சித்தாந்த அமைப்பு முறையை அது வெளிப்படுத்துகின்றது. "பண்டைக்கால உலகின் முதலாவது போர்க் கலை நூல்"என்றும், "போர் கலை பற்றிய நூல்களில் தொன் நூல்"என்றும் அது பிற்கால மக்களால் புகழ்ந்து போற்றப்படுகின்றது. அதில் விளக்கிக் கூறப்பட்ட போர் தந்திர சிந்தனைகளும் தத்துவங்களும் ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பரவலாக பயன்படுகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040