|
![]() |
குவாங்சொங்கு பவுசூயாவும்
குவாங்சொங்கு பவுசூயாவும் கி.மு.7ம் நூற்றாண்டில் அதாவது சீனாவின் வசந்த-இலையுதிர் கால அரசியல் வாதிகள். இவர்கள் உற்ற நண்பர்களும் கூட. குவாங்சொன் ஒரு ஏழை. பவுசுயான் கொஞ்சம் செல்வமுடையவர். இவர்களிடையில் பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் நிலவின. இருவரும் முற்காலத்தில் கூட்டாக வியாபாரம் செய்தார்கள். வியாபாரம் செய்த போது இருவரும் பரஸ்பர உதவி செய்தார்கள். குவாங்சுங் குறைவான முதலீடு செய்த போதிலும் லாபத்தைப் பகிர்ந்து கொண்ட போது கூடுதலான பணம் பெற்றார். காரணம் அவருக்கு குடுப்ச் சுமை அதிகம். சில சமயம் குவாங்சொங் சொன்ன முறைப்படி இருவரும் வியாபாரம் செய்த போது இழப்பு ஏற்பட்டது. பவுசுயான் ஆத்திரமடைவதற்கு பதிலாக குவாங்சொங்கிற்கு ஆறுதல் கூரினார். "உங்கள் கருத்து காரணத்தால் அல்ல வாய்ப்பு சரியில்லை என்று காரணத்தால தான் இழப்பு ஏற்பட்டது. இதை பொருட்படுத்த வேண்டும்"என்று பவுசுயான் தேற்றிக் கொண்டார்.குவாங்சொன் மூன்று முறை அதிகாரியாக பதவி வகித்தார். ஒவ்வொரு முறையும் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது குவாங்சொங் திறமையற்றவர் அல்ல. அவரின் திறமையை கண்டு ரசித்தவர் இல்லை என்று பவ் கருத்து தெரிவித்தார்.
பின்னர் இருவரும் அதிகாரிகளாக பணியாற்றினார்கள். அப்போது சி எனும் நாட்டில் அரசியல் குழுப்பம் நிலவியது. அரச குமாரர்கள் இக்குழப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக வெளி நாடுகளுக்குத் தப்பியோடினர். நாட்டின் வசித்த சியூ அரச குமாரருக்கு குவாங்சொங் உதவினார். பவுசுயாவோ லியூ நாட்டில் சி நாட்டின் இன்னொரு அரச குமாரர் சியொ பைய்க்கு உதவி செய்தார். விரைவில் சி நாட்டில் நிகழ்ந்த வன்முறை செயல்களில் பேரரசர் கொல்லப்பட்டார். இவ்விரு அரசக் குமாரர்களும் பேரரசர் பதவிக்காக சி நாட்டுக்கு விரைந்தார்கள். இரு அணிகளும் வழியில் சந்தித்தன. சியூவுக்கு உதியாக குவாங்சொங் சியௌ பைய் மீது அம்பெய்தினார். குறி தவறி அவரைக் காயப்படுத்த வில்லை. பின் சியௌ பைய் அரசரானார். சீன வரலாற்றில் அவர் சி ஹென்கொங் எனும் பெயர் சூட்டப்பட்டார்.
சி ஹெங்கொங் பேரரசராக பதவி ஏற்ற பின் அரசு குமாரர் சியூவைக் கொல்ல லூ நாட்டுக்கு கட்டளையிட்டார். குவாங்சொங் சிறையில் அடைக்கப்பட்டரா.் பவ்சுயாவை தலைமை அமைச்சராக மியமிக்க வேண்டும் என்று சிஹென் கொங் விருமிபினார். இப்பதவிக்கு தாம் தகுதியற்றவர் என்று கருதிய பன்சுயா சிறையில் அடைக்கப்பட்ட குவாங்சொங்ஙை அரசரிடம் பரிந்துரை செய்தார். துவக்கத்தில் அரசர் ஒப்புக் கொள்ள வில்லை. ஆனால் பவின் அறிவுறுத்தலின் காரணத்தால் அவர் ஒப்புக் கொண்டார். இறுதியில் குவாங்சொங் சி நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.
சி நாட்டுக்குச் சிரும்பிய குவாஹ்சொங் தலைமை அமைச்சராகவும் பவ்சுயா அவருடைய துணையாளராகவும் பமியாற்றினார்கள். இருவரின் கூட்டு முயற்சியினால் சி நாடு வலிமை மிக்க நாடாக மாறியது. பேரரசர் சி ஹெங்கொங் அரசர்களிடையில் சர்வாதிகாரியாக மாறிநார்.
பவ் இயற்கை எய்திய பின் தம் மீதான பவின் புரிந்துணர்வையும் ஆதரவையும் நினைத்துக் கொண்ட குவாங் அவருடைய கல்லறைக்கு முன் கதறி அழுதார். "ஆரம்பத்தில் நான் உதவிய அரசக்குமாரர் சியூ தோல்வி கண்டார். மற்றவர்கள் தமது மரணத்தால் அவர் மீது விசுவாசம் காட்டினார்கள். நானோ சிறையில் அ்டைக்கப்பட விரும்பினேன். பவ் என்னைக் கேலி செய்ய வில்லை. மகத்தான லட்சியத்துக்காக ஒரு காலத்து புகழை நான் புறக் கணிக்க மாட்டேன் என்பதை அவர் நன்கு கண்டறிந்தார். என் பெற்றோர் எனக்கு உயிர் தந்தனர். ஆனால் பவ் உண்மையில் என்னை உணர்ந்து உயர்வுதந்தார்"என்றார் குவாங்சொங்.
இவ்வுருவருக்குமிடைலின ஆழந்த நட்பு சீனாவில் தலைமுறை தலைமுறையாக கதையாகப் பரவி வருகிந்றது. சீனாவில் "குவாங் பவ் நட்பு"என்பதை கொண்டு உற்ற நண்பர்களிடை நெருங்கிய நம்பிக்கை உறவை வர்ணிப்பது வழக்கம்.
|