• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]

யென் ச்சு

"ஸ் ச்சி"எனும் பண்டைக் கால சீனாவின் கமத்தான வரலாற்றுப் படைப்பான "வரலாற்று பதிவேட்டின்"எழுத்தாளர் சிமா சியென் தந்திரமும் துணிவும் மிக்க ஒரு தூதாண்மை தூதரைப் பற்றி எழுதினார். அவர் தான் கி.மு.6ம் நூற்றாண்டு கால சி நாட்டின் யென் ச்சு ஆவார். அவர் பற்றிய கதை சீனாவில் மிகவும் பரவலாக உள்ளது. இதோ அவர் தூதராக சூ நாட்டிற்கு சென்றது பற்றிய கதை.

ஒரு முறை யென் ச்சி தூதுவராக சூ நாட்டிற்கு சென்றார். அவர் குள்ள மாணவர் என்று கேட்டறிந்த சூ மன்னர் அவரை கேலி செய்ய வேண்டும் என்று எண்ணி ஒரு தந்திரம் செய்தார். நகர் மதில் வாசலுக்கு அருகில் ஒரு சிறிய கதவைத் திறக்குமாறு சூ மன்னர் கட்டளையிட்டார். யென் ச்சு இந்த சிறிய கதவின் மூலம் உள்ளே நுழைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டரா.

இதைக் கேட்டறிந்த யென் ச்சு உறுதியாக மறுத்து விட்டார். "நாய் துளை மூலம் உள்ளே நுழைய வேண்டும் இப்போது நான் தூதராக இங்கு வருகிறேன். நாய் துளை மூலம் நுழையக் கூடாது"என்றார் அவர்.

யென் ச்சுவை உபசரித்த சூ அதிகாரி அவரை பெரிய வாசல் மூலம் உள்ளே செல்ல அனுமதித்தார். சூ மன்னரைச் சென்று பார்த்த யென் ச்சுவை பார்த்து சூ மன்னர் "சீ நாட்டில் வேறு ஆள் இல்லாததால் உன்னை இங்கே அணுப்பினாரா?"என்று வேண்டுமென்றே கேட்டார்.

"எங்கள் சி நாட்டில் மக்கள் அதிகமாக காணப்படுகின்றனர். தலைநகரில் மட்டும் சுமார் நூறு வீதிகள் உண்டு. மக்கள் சட்டை கையை உயர்த்திப் பிடித்தால் சூரியனை மூடி மறைக்க முடியும். மழை பெய்வது போல் மக்கள் வியர்வையை வீசியெறிவார்கள். வீதிகளில் மக்கள் தோளோடு தோளைந்து நெருக்கமாக உள்ளார்கள். மிகவும் நெரிசல். சி நாட்டில் ஆள் இல்லை என்று எப்படி கூறுகிறங்க"என்று பதிலளித்தார் யென் ச்சு.

"அப்படியிருக்க ஏன் உன்னை அனுப்பினார்"என்று சூ மன்னர் கேட்டார்.

"எங்கள் சி நாட்டில் தூதர்களை அனுப்புவது மிகவும் நுட்பமான பிரச்சினை. தேர்ச்சி பெற்றவர்களை நல்லொழுக்கங்களைப் படைத்த நாடுகளுக்கு அனுப்புகிறோம். சிறமையற்ற மிகவும் முட்டாள்தனமான தூதர்களை மிகவும் மோசமான நாடுகளுக்கு அனுப்புகிறோம். இந்த தூதர்களில் நான் மிகவும் மடையன். மிகவும் திறமையற்றவன். ஆகவே என்னை இங்கு அனுப்பினார்"என்று யென் ச்சு தந்திருமாகப் பதிலளித்தார். அவருடைய கூற்றைக் கேட்ட சூ நாட்டின் மன்னரும் அரசு அதிகாரிகளும் ஒன்றும் பேச முடியாமல் மௌனம் சாதித்தனர்.

பிறகு யென் ச்சு மீண்டும் சூ நாட்டிற்கு தூதராக அனுப்பப்பட்டார். இதைக் கேட்டறிந்த சூ மன்னர் அதிகாரிகளிடம் "யென் ச்சு சி நாட்டின் திறமைமிக்கவர். வாதப் பிரவாதத்தில் தேர்ச்சி பெற்றவர். இப்போது அவர் மீண்டும் இங்கே வருவார். அவளை அவமானப்படுத்த ஏதேனும் நல்ல தந்திரம் உண்டா?"என்று கேட்டார்.

"யென் ச்சு வரும் போது இரண்டு படைவீரர்கள் ஒருவரை உங்கள் முன்னிலையில் கட்டி இழுத்து வந்து நிறுத்த நான் ஏற்பாடு செய்வேன். அப்போது கட்டப்பட்ட இந்த ஆள் யார்"என்று நீங்கள் கேட்க வேண்ுடம். இவர் "சி நாட்டைச் சேர்ந்தவர்" என்று படைவீரர்கள் பதிலளிக்க வேம்டும் எதற்காக அவரைக் கட்ட வேண்டும் என்று நீங்கள் கேட்டால் "அவர் ஒரு திருடன் என்று படைவீரர்கள் பதிலளிப்பார்கள்"என்று ஒரு அதிகாரி யோசனை கூறினார். இது ஒரு நல்ல யோசனை என்று கூறிய மன்னர் இதற்கான ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார்.

யென் ச்சு சூ நாட்டை அடைந்த போது சூ மன்னர் விருந்து அளித்து அவரைச் சிறப்பித்தார். விருந்தில் போது இரண்டு படைவீரர்கள் ஒருவரைக் கட்டிக் கொண்டு சூ மன்னர் முன்னால் நிறுத்தினார். "கட்டப்பட்ட இந்த ஆள் யார் ? எதற்காக கட்டப்பட்டுள்ளார்?"என்று சூ மன்னர் கேட்டார்.

"இவர் சி நாட்டை சேர்ந்தவர். பொருட்களைச் சிருடியதற்காக கட்டப்பட்டார்"என்று பதில் அளித்தனர் படைவீரர்கள்.

"சி நாட்டவர் இயல்பாகவே திருடர்களா?"என்று சூ மன்னர் வேண்டுமென்றே யென் ச்சுவிடம் கேட்டார்.

"ஒரு வகை செடி சி நாட்டில் வளர்ந்து சுவைமிக்க கணியை தருகின்றது. அது சூ நாட்டில் வளர்ந்தால் மேலோட்டமாக பார்க்கும் போது அதன் இலைகள் சி நாட்டில் வளர்ந்தது போல் இருந்தாலும் அதன் கனிகள் மிகவும் சுவையானவை. வெவ்வேறான நீர் மற்றும் மண் இதற்கு காரணமாகும். இப்போது இந்த மனிதர் சி நாட்டில் திருடவில்லை. ஆனால் சூ நாட்டில் திருட கற்றுத் தேர்தார். சூ நாட்டின் நீர் மற்றும் மண்ணால் அவர் திருடுவதில் தேர்ச்சி பெற்றவராக மாறியுள்ளார்?"என்று யென் ச்சு சாதுலியமாகப் பதிலளித்தார்.

இதைக் கேட்ட சூ மன்னர் கசப்புச் சரிரிப்புடன் "உங்களை கேலி செய்ய விரும்பினேன் இதற்கு மாறாக நீங்கள் என்னை கேலி செய்தீர்கள். உங்களை மதிக்கிறேன்"என்றார்.

இது போன்ற கதைகள் இன்னும் உள்ளன. யென் ச்சு தமது விவேகத்தால் சில நாட்டவரின் சதி சூழ்ச்சியைத் தோற்கடித்தார். இதனால் அவருடைய செல்வாக்கு மேன்மேலும் பரவியது. இறுதியில் அவர் ஒரு புகழ் பெற்ற தூதாண்மை அதிகாரியானார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040