• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மற்றதுறையினர்கள்]

சென் ஸன், ஊ குவாங் கிளர்ச்சி

சென் ஸன், ஊ குவாங் ஆகியோர் சீனாவின் புகள் பெற்ற விவசாயக் கிளர்ச்சி படையின் புகழ் பெற்ற தலைவர்கள். அவர்கள் தலமைமையிலான கிளர்ச்சி கி.மு. 3ம் நூற்றாண்டின் சிங் வமிச ஆட்சிக் காலத்தின் இறுதியில் நிகழ்ந்தது. இது சீன வரலாற்றில் முதலாவது பெருமளவு விவசாயிகள் பங்கேற்ற கிளர்ச்சியாகும்.

கி.மு.210ம் ாண்டு சிங் சு குவான் பேரரசர் நோய்வாய்பட்டு காலமானார். அவருடைய இளைய மகன் கூ ஹெ ஆட்சிக்கு வந்தார். இரண்டாவது சிங் பேரரசர் மதிநுட்பமற்ர கொடுங்கோல் அரசராவார். அவருடைய ஆட்சியின் கீழ் பாமர மக்களின் வரிச் சுமை நேலும் அதிகரித்தது. குற்றங்களுக்கு தண்டனை முறைகளும் மேலும் கடுமையானது. ஏராளமான உழைப்பாளி மக்கள் பட்டினியால் மரணத்தின் விளிம்பில் தத்தளித்துப் போராடினர்.

கி.மு.209ம் ஆண்டு குவாய் ஹோ ஆற்றுப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தின் 900 ஏழை விவசாயிகளை யு யாங் என்னும் இடத்தில் இன்றைய பெய்சிங்கின் மி யூன் காவல்படுத்த கட்டளையிட்டார்.

கூலி விவசாயியான சென் ஸனும் ஏழை விவசாயியான ஊ குவாங்கும் அவர்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆன் வெய் மாநிலத்தின் சோ மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியை அடைந்த போது அடை மறை யினால் அங்கு நிற்க வேண்டி ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் யூ யாங்கை அடைய முடிய வில்லை. சிங் வம்ச ஆட்சிக் காலத்தின் சட்டப்படி இவர்கள் அனைவரும் மரணத் தண்டனை விதிக்கப்படுவர்.

அவர்களுடன் சென்ற இரண்டு ராணுவ அதிகாரிகள் மிகவும் கொடுமையானவர்கள். சென் ஸன்னும் ஊ குவாங்கும் ஏதோ ஒரு சாக்குப் போக்கில் அவர்களை கொன்றார்கள். பெரும் மழை பெய்ததால் நாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் யூயாங் சென்றடைய முடிய வில்லை. இதனால் நாங்கள் மரண தண்டனை விதிக்கப்படுவோம். எங்களை கொலை செய்யா விட்டாலும் எங்களின் 60, 70 விழுக்காட்டினர் காவல் புரியும் போது மரணமடைவோம். வீரர்கள் என்று மரணமமடைந்தால் விறுவிறுப்பான லட்சியத்திற்கு பணி புரிய வேண்டும். என்று அவர்கள் அனைவரிடமும் கூறினர். இதைக் கேட்டு ஊக்கம் பெற்ற விவசாயிகள் மன உறுதி பெற்றனர். இவர்கள் சென் சன்னை தளபதியாகவும் ஊ குவாங்ஙை துணை தளபதியாகவும் தேர்ந்தெடுத்து விவசாயிகள் கிளர்ச்சி படை ஒன்றை உருவாக்கினர். சீனாவின் வரலாற்றில் முதலாவது மாபெரும் விவசாயப் புரிட்சி வெடித்தது.

தன் தாக்கத்தை விரிவாக்கும் வகையில் அவர்கள் இரவு தங்கள் தங்குமிடங்களுக்கு அருகிலுள்ள தேவர் கோயில்களில் முகாம் தீயை எரித்தனர். நரியைப் போல் ஊளையிட்டனர். "கபெரிய ச்சூ எழுந்திரு மன்னர் சென் ஸன்"என்ற முழக்கம் எழுப்பினர். இவ்விவசாயிகள் கிளர்ச்சி படை தாச் செ வட்டத்தைக் கைப்பற்றி விரைவில் சிசியென் மாவட்டத்தையும் தாக்கிக் கைப்பற்றியது. 5, 6 மாவட்ட நகரங்கள் உடனடியாக அவர்களுடைய ஆட்சியின் கீழ் வந்தன. கிளர்ச்சிப் படை சென்ற இடமெங்கும் ஏழை விவசாயிகள் இப்படையில் சேர்ந்தனர். கிளர்ச்சி படை சென் சியென் மாவட்டத்தைக் கைப்பற்றிய பிறகு "சாங் ச்சூ"ஆட்சியை உருவாக்கியது. சென் ஸன் அவ்வாட்சியின் ஆளுநராக மாறினார். இது சீன வரலாற்றில் கண்ட முதலாவது விவசாயிகளின் புரிட்சிகர ஆட்சியாகும்.

கிளர்ச்சிப் படை வெற்றியுடன் முன்னேறி மூன்று பக்கங்களிலிருந்து சிங் வம்ச ஆட்சி மீது தாக்குதல் தொடுத்தது. அப்போது பல லட்சம் பேர் கொண்ட இப்படையில் ஆயிரம் ராணுவ வாகனங்கள் இருந்தன.

கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த பிரிவான சோ வென் தலைமையிலான விவசாயிகள் படை ஷாங் சி மாநிலத்தின் லிங் தொங் எல்லையை அடைந்து சியென் யாங்கை நெருங்கியது. இதைக் கண்டு கதி கலங்கிய இரண்டாவது பேரரசர் சிங் தளபதி லீ சான் பலையில் கல்லறையை கட்டிக் கொண்டிருந்த பல பட்லம் சிறை கைதிகளுக்குத் தலைமை தாங்கி கிளர்ச்சிப் படைக்கு எதிராக போரிட ராணுவ அதிகாரி சாங்காங்கை அவசரமாக அனுப்பினார். அதனிடையில் எல்லைப் பிரதேசத்திலிருந்து 3 லட்சம் படையினரை ஏவிவிட்டார். சோ வென் தலைமையிலான விவசாயிகள் படை துணிவுடன் போரிட்ட போதிலும் போர் அனுபவம் குறைவாக இருந்ததலால் அரசுப் படையால் தாக்கப்பட்டு தோல்வி கண்டதுத. ஹான் கு கணவாயிரிந்து பின் வாங்க நிர்பம்திக்கப்பட்டது. உதவிக்காக அது சவுயாங்கில் இன்றைய ஹொ நான் மாநிலத்தின் லின் பவுவின் கிழக்கு பகுதியில் நிறுத்தப்பட்டது.

விவசாயிகள் படையின் இன்னொரு பிரிவான சென் தலைமையிலான படை பழைய சவுவின் தலைநகரான ஹான் தாங்கைக் கைப்பற்றியது. கிளர்ச்சிப் படையில் நுழைந்த பழைய உயர் குடி சக்திகளின் பிரதிநிதிகளான சாங் ழெ சென் யூ ஆகியோரின் தூண்டுதலின் கீழ் ஊ சென் சவு மன்னராக ஆட்சி புரிந்தார். முழு நிலைமையை கருத்தில் கொண்ட செந் ஸன் இதை ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது. அத்துடன் படைக்குத் தலைமை தாங்கி சோ வெனுக்கு ஆதரவளிக்குமாறு ஊ செனுக்கு கட்டளையிட்டார். சாங் ழெ, செந் யூ இருவரும் சோ வென் விவசாயிகள் படைக்கு உதவி அளிப்பதற்கு பதிலாக தனி சுதந்திர படையை உருவாக்கினர். அதை தொடர்ந்து 6 நாடுகளின் பழைய உயர் குடிகள் அடுத்தடுத்து இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு சிற்றரசர்களாக ஆட்சி புரிந்தனர். இதனால் சென் ஸன் ஊ குவான் தலைமையிலான கிளர்ச்சிப் படை முதுகில் குத்தப்பட்ட நிலையில் இருந்தது. சோ வென் தலைமையிலான படை சவு யாங்கில் மூன்று திங்கள் தாக்குப் பிடித்து போரிட்டது. பந்முறை தோல்வி கண்டு இறுதியில் உதவி பெறாமல் கடும் சேதம் ஏற்பட்டதால் சோ வென் தற்கொலை செய்தார். பிறகு சிங்யானை சூழ்ந்து கொண்டு தாக்கிய ஊ குவான் தமது தளபதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார். அவர் மறைந்த பின் போராற்றல் பெரிதும் குறைந்தது. இதர சில கிளர்ச்சி படைகளும் அரசு படையால் தோற்கடிக்கப்பட்டன. கி.மு.206ம் ஆண்டு சிங் வம்ச ஆட்சி விவசாயிகள் கிளர்ச்சி படையின் பலத்த தாக்குதலினால் வீழ்ச்சியடைந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040