|
![]() |
ஏர்மெய் மலையும் லொசான் புத்தர் உருவச்சிலையும்
மேற்கு சீனாவின் ஸ்ச்சுவான் மாநிலத்தின் மத்திய தெற்கில் அமைந்துள்ள ஏர்மெய் மலை, தாகுவான்மிங் மலை என்றும் அழைக்கப்படுகின்றது. வெளிச்சம் காட்டும் மலை அல்லது ஒளி தரும் மலை என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஸ்ச்சுவான் வடி நிலத்துக்கும் சிங்ஹைய்-திபெத் பீடபூமிக்குமிடையில் அமைந்துள்ள முக்கிய மலையான சிங்தினின் மிக உயரமான உச்சி--வன்வு உச்சி, கடல் மட்டத்திலிருந்து 3099 மீட்டர் உயரத்தில் உள்ளது. அழகான இயற்கை காட்சி, புத்த மதப்புனித இடம் ஆகியவற்றால் இது உலகில் புகழ் பெற்றுள்ளது. எழில் மிக்க இயற்கை காட்சி நீண்ட வரலாற்றுப் பண்பாட்டுடன் உரிய முறையில் இணைந்துள்ளதால் ஏர்மெய் மலை, உலகில் முதலிடம் என்று போற்றப்பட்டுள்ளது.
ஏர்மெய் மலை, பல இயற்கை காரணிகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ளதால், இங்கு வாழும் உயிரினங்களின் வகை அதிகமானவை. துணை வெப்ப மண்டலத் தாவர வகைகள் முழுமையான பாதுகாப்புடன் இருக்கின்றன. மரங்களின் பரப்பளவு 87 விழுக்காட்டை எட்டியுள்ளது. ஏர்மெய் மலையில் 3200 வகை தாவரங்கள் வளர்கின்றன. இது, சீனாவின் மொத்த தாவர வகைகளில் 10 விழுக்காடாகும். இவற்றில் ஏர்மெய் மலையில் வளரும் அல்லது ஏர்மெய் மலையில் கண்டுபிடிக்கப்பட்டு, ஏர்மெய் பெயரால் சூட்டப்பட்ட தாவரங்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது. தவிர, ஏர்மெய் மலை, அரிய விலங்குகள் வசிக்கும் இடமும் ஆகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்குகளின் வகை 2300க்கும் அதிகமாகும். உலக உயிரினச் சூழலை ஆராயும் முக்கிய இடம் இது.
சீனப் புத்த மதத்தின் 4 புகழ்பெற்ற மலைகளில் ஒன்றாக ஏர்மெய் மலை திகழ்கின்றது. புத்த மதப் பரவல், கோயில்களின் கட்டுமானம், வளமடைவது ஆகியவை, ஏர்மெய் மலைக்குப் புதுமை தருகின்றன. மதப் பண்பாடு, குறிப்பாக புத்த மதப் பண்பாடு, ஏர்மெய் மலை வரலாற்றுப் பண்பாட்டின் முக்கிய பகுதியாகத் திகழ்கின்றது. கட்டடங்கள், புத்தர் உருவச் சிலை, மதத்தவர் பயன்படுத்தும் இசைக்கருவி, சடங்கு, இசை, ஓவியம் ஆகியவை அனைத்திலும் மதப்பண்பாட்டு மணம் கமழுகின்றன. ஏர்மெய் மலையில் கோயில்கள் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பௌகொ கோயில், வென்நியென் கோயில் உள்ளிட்ட 8 முக்கிய கோயில்கள் புகழ்பெற்றவை.
லொசான் புத்தர் உருவாச்சிலை ஏர்மெய் மலையின் கிழக்கு அடிவாரத்தில் சிலென் மலையில் அமைந்துள்ளது. பண்டை காலத்தில் இது மைத்ரேயா புத்தர் உருவச்சிலை என்றும் சியாதிங் உருவச்சிலை என்று அழைக்கப்பட்டது. இதன் செதுக்கும் பணி கி.பி. 713ஆம் ஆண்டில் துவங்கியது. 90 ஆண்டுகளுக்குப் பின் அது நிறைவடைந்தது. புத்தர் உருவச்சிலை மலை மற்றும் ஆற்றின் பக்கத்தில் செதுக்கப்பட்டது. உலகில் இதுவரை பாதுகாப்பாக இருக்கும் முயென் கல் உருவச்சிலை இது. மலை, ஒரு புத்தர் உருவச்சிலை போன்றது; புத்தர் உருவச்சிலை ஒரு மலை போன்றது என்பது பொருள். மேற்கை நோக்கி அமரும் MAITREYA உருவச்சிலையின் உயரம் 71 மீட்டர். இக்கம்பீரமான உருவச்சிலை, தாங் வமிச காலப் பண்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த உருவச்சிலையின் தெற்கு மற்றும் வடக்கு சுவர்களில் தாங் வமிச காலத்தில் செதுக்கப்பட்ட சுமார் 90 கல் உருவச்சிலைகள் உள்ளன.
லொசான் புத்தர் உருவச்சிலை உள்ளிட்ட ஏர்மெய் மலை, அதன் தனிச்சிறப்பு வாய்ந்த புவியியல் நிலை, எழில் மிக்க இயற்கை காட்சி, தனிச்சிறப்புடைய நில அமைவு, சீரான உயிரின வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றின் காரணமாக, குறிப்பாக, உலக உயிரின வாழ்வன மண்டலம் ஒன்றிணையும் இடத்திலும் இடைநிலை இடத்திலும் இம்மலை அமைந்துள்ளதால், ஏராளமான விலங்குகளும் தாவர வளங்களும் உள்ளன. இவ்விடம் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு வாய்ந்தது. அழியும் அபாயத்தில் உள்ள அருமையான விலங்குகளின் வகை அதிகம். கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் புத்த மதத்தை முக்கிய சின்னமாக கொண்டு விளங்கும் வளமிக்க பண்பாட்டு மரபுச்செல்வங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வரலாறு, அழகியல், அறிவியல் ஆராய்ச்சி, அறிவியல் பரவல், சுற்றுலா ஆகிய துறைகளில் ஏர்மெய் மலையிலுள்ள இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் மதிப்பு மிக்கவை. இவை, மனித குலத்தின் பொது சொத்து என்று கருதப்படுகின்றது.
பண்பாட்டு மரபுச்செல்வம், இயற்கை மரபுச்செல்வம் ஆகியவற்றின் வரைமுறையின் படி, 1996ஆம் ஆண்டு ஏர்மெய் மலையும் லொசான் புத்தர் உருவச்சிலையும் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கி.பி. நூறாம் ஆண்டில் சீனாவின் ஸ்ச்சுவான் மாநிலத்தின் எழில் மிக்க ஏர்மெய் மலை உச்சியில் சீனாவின் முதலாவது புத்த மதக் கோயில் கட்டப்பட்டது. அதன் சுற்றுப்புறத்தில் இதர கோயில்கள் கட்டப்பட்டதுடன் இவ்விடம், புத்த மதத்தின் முக்கிய புனித இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த பல நூறு ஆண்டுகளில் இவ்விடத்தில், பண்பாட்டுச் செல்வம் அதிக அளவில் குவிந்திருக்கின்றது. இதில் லொசான் புத்தர் உருவச்சிலை மிகவும் புகழ்பெற்றது. 8வது நூற்றாண்டில் கல் மலையொன்றில் மக்களால் செதுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலை இது. 71 மீட்டர் உயரமுடைய இப்புத்தர் உருவச்சிலை உலகில் முதலிடம் வகிக்கினறது என்று கருதப்படுகின்றது. ஏர்மெய் மலையில் ஏராளமான வகை தாவரங்கள் வளர்வதால் உலகில் அது புகழ்பெற்றது. இவற்றில் சில மரங்களின் வயது ஆயிரம் ஆண்டைத் தாண்டியுள்ளது.
|