• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம்

சீனாவின் தலைநகரான பெய்ச்சிங் மாநகரின் மையப் பகுதியில் பண்டை காலக் கம்பீரமான பொன்னிறக் கட்டடங்கள் உள்ளன. அவை, உலகில் புகழ்பெற்ற தடுக்கப்பட்ட நகர். அதவாவது அரண்மனை அருங்காட்சியகம். பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம், சீனாவின் பண்டைக் கால அரண்மனைக் கட்டடங்களில் ஒரு முத்து. உலகில் இதுவரை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள அளவில் மிக பெரிய பண்டைக் கால வெட்டு மரங்களால் கட்டப்பட்ட கட்டடங்களாகும். 1987ஆம் ஆண்டில் அது, உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

கி.பி.1406ஆம் ஆண்டு மிங் வமிசத்தில் 2வது பேரரசர் சூடியின் கட்டளைக்கிணங்க பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணி துவங்கியது. இப்பணி 14 ஆண்டு காலம் நீடித்தது. 1911ஆம் ஆண்டு சிங் வமிச ஆட்சியின் அழிவு வரை, கடந்த சுமார் 500 ஆண்டுகளில் மொத்தம் 24 பேரரசர்கள் இந்த அரண்மனை அருங்காட்சியகத்தில் அரசு விவகாரங்களைக் கையாண்டனர். அளவில் மிக பெரிய அழகான கம்பீரமான பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம் உலகில் காண்பது அரிது. அதன் பரப்பளவு சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் சதுரமீட்டராகும். தெற்கிலிருந்து வடக்காக அதன் நீளம் ஏறக்குறைய ஆயிரம் மீட்டர். கிழக்கிலிருந்து வடக்காக அதன் அகலம் சுமார் 800 மீட்டர். அதன் 4 சுற்றுப்புறங்களிலும் 10 மீட்டர் உயரமுள்ள சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுவருக்கு வெளியே சுமார் 50 மீட்டர் அகலத்தில் ஹுசென் ஆறு ஓடுகின்றது. நிலப்பிரபுத்துவ மன்னராட்சியின் மரியாதை ஒழுங்கு முறை, அரசியல் விதிமுறை மற்றும் தத்துவத்துக்கிணங்க, பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம் கட்டப்பட்டது. அதன் அமைப்பு, அளவு, வடிவம், வண்ணம், காட்சி ஒழுங்கு ஆகியவை அனைத்தும், பேரரசரின் அதிகாரம் முதல் இடம் என்பதையும், சமூகப் பதவி முறைமையையும் பிரதிப்பலித்துள்ளன. இந்த அரண்மணை அருங்காட்சியகத்திலுள்ள தைஹெ மண்டபம், சொங்ஹெ மண்டபம், பௌஹெ மண்டபம் ஆகிய 3 பெரிய மண்டபங்கள் கவர்ச்சியானவை. அவை, பேரரசர் தமது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துவதற்கும், மாபெரும் கொண்டாட்டம் நடைபெறுவதற்கும் முக்கிய இடங்கள். தைஹெ மண்டபம், இந்த அரண்மனை அருங்காட்சியகத்தின் மையப் பகுதி. பேரரசர் அமரும் பொன்னிற இருக்கை, தைஹெ மண்டபத்தில் உள்ளது. தைஹெ மண்டபம், அரண்மனை அருங்காட்சியகத்தில் மிகவும் கம்பீரமான கட்டடமும் ஆகும். 30 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவுடைய சதுக்கத்தின் வடக்கில், தைஹெ மண்டபம், 8 மீட்டர் உயரமுடைய வெண்ணிற கல்லான மேடைப்படியில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் உயரம் சுமார் 40 மீட்டர் ஆகும். அரண்மனை அருங்காட்சியகத்தில் மிக உயரமான கட்டடம் இது. சீனப் பண்பாட்டில், டிராகன், பேரரசர் ஆட்சியின் சின்னம். பேரரசர், டிராகன் என்றும் கடவுளின் மகன் என்றும் கருதப்பட்டுவந்தார். தைஹெ மண்டபம் அலங்காரம் செய்யப்பட்ட போது டிராகன் உருவம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இம்மண்டபத்தில் மொத்தம் சுமார் 13000 டிராகன்கள் உள்ளன. அரண்மனை அருங்காட்சியகத்தின் கட்டுமானத்துக்குக் குறிப்பிட்ட விதி உண்டு. அதிகமான மண்டபங்களையும் மாளிகைகளையும் கொண்ட இக்கட்டடத்தில் மொத்தம் 9999.5 அறைகள் உள்ளனாம். கடவுள் வசிக்கும் அரண்மனையில் 10 ஆயிரம் அறைகள் உள்ளன என்றும், கடவுளின் மகனான பேரரசர், கடவுளைத் தாண்டக் கூடாது. தம்மைத் தாமே கட்டப்படுத்த வேண்டும் என்றும் பண்டை கால மனிதர்கள் கருதினர். இதனால், அரண்மனை அருங்காட்சியகத்திலுள்ள அறைகளின் எண்ணிக்கை கடவுள் வசிக்கும் அறைகளை விட குறைவு. இந்தப் பிரமாண்டமான கட்டடங்களில், சீனத் தொழிலாளர்களின் அறிவுக் கூர்மை நன்கு தென்பட்டுல்ளது. முழு கட்டடங்களின் கட்டமைப்பு, வேறுபட்ட வடிவங்களிலான உச்சி, கதவு மற்றும் சுவர்களிலான அலங்காரம் ஆகியவை அனைத்திலும் கற்பனை நிரம்பியுள்ளது. எடுத்துக்காட்டாக, தைஹெ மண்டபத்தில் வெண்ணிற கல் அடி தளத்தின் மேல் கட்டப்பட்டதால் இம்மண்டபம் மேலும் கம்பீரமாகவும் அழகாகவும் காணப்படுகின்றது. அத்துடன் ஈரத்தை நீக்கும் தன்மையும் அதற்கு உண்டு. இந்த அடி தளத்தில் பொருத்தப்பட்டுள்ள, நீரை வெளியேற்றும் சாதனங்கள், சீனக் கட்டுக்கதையில் கூறப்படும் ஒரு வகை டிராகன் வடிவத்தில் அமைக்கப்பட்டன. 3 தட்டுக்களைக் கொண்ட இந்த அடி தளத்தில் மொத்தம் ஆயிரத்துக்கும் அதிகமான டிராகன்கள் உள்ளன. பெரும் மழை பெய்யும் போது, டிராகன்கள் நீரை வெளியேற்றும். அப்போது, டிராகன் கூட்டங்கள் நீரை ஊற்றுவது போல் காட்சியளிக்கும். இது மிகவும் எடுப்பாகத் தெரியும். அரண்மனை அருங்காட்சியகம் வெட்டு மரங்களால் கட்டப்பட்டது. தீ விபத்தைத் தடுப்பதற்காக, கடந்த வமிச காலங்களில் கட்டட தொழில் வல்லுநர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்தனர். எடுத்துக்காட்டாக, இந்த அரண்மனை அருங்காட்சியகத்தில் 4 வீடுகள் உள்ளன. தோற்றத்தில் அவை வீடு போன்றவை. அவற்றுக்குள்ளே எல்லாம் கற்கள். இவை தான், நெருப்பைப் பரவாமல் தடுப்பதற்காகக் கட்டட நிபுணர்கள் வடிவமைத்து கட்டிய சுவர்கள். அரண்மனை அருங்காட்சியகத்தின் பல்வேறு முற்றங்களில் 308 பெரிய செப்புப் பாண்டங்கள் உள்ளன. தீ அணைப்புக்குப் பயன்படுவதற்காக, முழு ஆண்டிலும் அவற்றுக்குள்ளே நீர் சேமித்துவைக்கப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் இந்தச் செப்பு பாண்டங்களுக்குள்ளேயுள்ள நீர், பனிக் கட்டியாக மாறாமல் தவிர்க்கும் பொருட்டு, அவற்றுக்குக் கீழ் தீ எரிவது வழக்கம்.

வரலாற்றுப் பதிவேட்டின் படி, மிங் வமிச ஆட்சி காலத்தில் பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தின் கட்டுமானத்துக்கு ஒரு லட்சம் தொழில் வல்லுநர்களும் பல பத்து லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டனர். இக்கட்டுமானத்துக்குத் தேவைப்படும் அனைத்து பொருட்களும் பல பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. தவிர, அரண்மனையாக விளங்கும் இவ்விடத்தில் ஏராளமான மதிப்பிடற்கரிய தொல் பொருட்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இத்தொல் பொருட்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்வெண்ணிக்கை, சீனாவின் மொத்த தொல் பொருட்களில் ஆறில் ஒரு பகுதி. இவற்றில் சில, நாட்டின் அரிய செல்வம். 1980ஆம் ஆண்டுகளில், சீன அரசின் கோரிக்கைக்கிணங்க, 100க்கும் அதிகமான தரைக்கடிக் கிடங்குகள் கட்டப்பட்டன. பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்திலுள்ள பெரும்பாலான தொல் பொருட்கள் இவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கம்பீரமான அழகான அரண்மனை அருங்காட்சியகம், ஒளிமயமான சீனப் பண்பாட்டின் சின்னமாக மாறியுள்ளது. இக்கட்டங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும் ஈடிணையற்றவை. சீனாவின் நீண்ட வரலாற்றையும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய சீனத் தொழில் வல்லுநர்கள் கட்டடத்துறையில் ஈட்டிய தலை சிறந்த சாதனைகளையும் இது கோடிட்டுக்காட்டுகின்றது என்று சீன மற்றும் வெளிநாட்டுக் கட்டட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம் கட்டிமுடிக்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 580 ஆண்டுகளாகிவிட்டது. இதிலுள்ள பெரும்பாலான கட்டடங்கள் பழமையாகிவிட்டன. அத்துடன், கடந்த சில ஆண்டுகளாக, இதைப் பார்வையிடும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவருகின்றது. ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தை மேலும் செவ்வனே பராமரிக்கும் பொருட்டு, கடந்த ஆண்டு முதல் படிப்படியாகப் பழுதுபார்க்கும் பணி துவங்கியது. இத்திட்டப்பணி 20 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று தெரியவருகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040