• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

யுன்காங் கற்குகை

வட சீனாவின் சான்சி மாநிலத்து தாதுங் நகருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வுசௌ மலையின் தென் பகுதி அடிவாரத்தில் யுன்காங் கற்குகை அமைந்துள்ளது. கி.பி 453ஆம் ஆண்டில் கற்குகையைச் செதுக்கும் பணி துவங்கியது. கி.பி 494ஆம் ஆண்டில் இதன் பெரும்பாலான பணி நிறைவடைந்தது. ஆனால், புத்தர் உருவச்சிலையைச் செதுக்கும் பணி கி.பி. 520 முதல் 525 வரை நீடித்தது. மலையைச் சுற்றிச் செதுக்கப்பட்ட கற்குகையின் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக சுமார் ஒரு கிலோமீட்டர். அது கம்பீரமாகக் காணப்படுகின்றது. இப்போது 45 கற்குகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. புத்தர் உருவச்சிலைகள் வைக்கப்படும் பெரிய மற்றும் சிறிய பீடங்களின் எண்ணிக்கை 252 ஆகும். இவற்றில் 51000 புத்தர் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மிக பெரிய புத்தர் உருவச்சிலையின் உயரம் 17மீட்டரும், மிக சிறிய புத்தர் உருவச்சிலையின் உயரம் சில செ.மீ. மட்டுமே. இக்கற்குகையில் புத்தர் முதலிய தெய்வங்களின் உருவச்சிலைகள் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. கோபுரத்தின் தூண்களில் செதுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலைகள், கி.மு 221ஆம் ஆண்டு முதல் 220 ஆம் ஆண்டு வரையிலான யதார்த்த கலையின் சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளன. யுன்காங் கற்குகையும் கான்சு தங்ஹுவாங் முகௌகு கற்குகை, ஹொனான் லுங்மன் கற்குகை ஆகியவையும் சீனாவின் மூன்று முக்கிய கற்குகைகளாகவும் உலகில் புகழ்பெற்ற கல் செதுக்கல் கலைக் களஞ்சியங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றன.

 

யுன்காங் கற்குகை, கி.பி. 5வது நூற்றாண்டில் சீனாவின் கல் செதுக்கல் கலை வேலைபாட்டில் முதலிடம் என்றும் சீனாவின் பண்டைக் காலத்தில் செதுக்கல் கலைக்களஞ்சியம் என்றும் போற்றப்பட்டுள்ளது. கற்குகை செதுக்கப்பட்ட காலம், முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என்று 3 கால கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு காலத்தில் செதுக்கப்பட்ட காலம், முற்காலம், இடைக்காலம், கற்குகையின் வடிவமும் பாணியும் வேறுபடுகின்றன. முற்காலத்தில் செதுக்கப்பட்ட தென்யொ 5 கற்குகைகள் சீனாவின் மேற்கு பகுதி தனிச்சிறப்பைப் பிரதிபலிக்கின்றன. மத்திய காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகைகள், நுட்பம், அழகு ஆகியவற்றினால் பாராட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகைகளில் அறையின் அளவு சிறியதாக இருந்தாலும் புத்தர் உருவச்சிலையில் காணப்படும் கடவுள் உருவம் மெல்லியதாகவும், உரிய விகிதத்தில் செதுக்கப்பட்டதாகவும் உள்ளது. தவிர, கற்குகையிலுள்ள இசை-நடனம், நாடகம் மற்றும் குட்டிக்கரண உருவச்சிலைகள், அப்போதைய புத்த மதச் சிந்தனையின் பரவலையும் அக்காலச் சமூக வாழ்வையும் பிரதிபலித்துள்ளன.

இந்திய மற்றும் மத்திய ஆசிய புத்த மதக் கலை, சீன புத்த மதக்கலையாக வளரும் வரலாற்றை யுன்காங் கற்குகை நிரூபித்துள்ளது. புத்தர் உருவச்சிலை சீனாவில் படிப்படியாகத் தேசிய மயமாவதை இது வெளிப்படுத்தியுள்ளது. வெவ்வேறு பாணியில் செதுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலைக் கலை, யுன்காங் கற்குகையில் முன்னெப்பொழுதும் கண்டிராதவாறு தோன்றியுள்ளது. இதனால் உருவான யுன்காங் மாதிரி, சீனப் புத்த மதக் கலையின் வளர்ச்சியில் திருப்பு முனையாக விளங்குகின்றது. தங்ஹுவாங் முகௌகு கற்குகை, லுங்மன் கற்குகை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள வடக்குவெய் வமிசக் காலப் புத்தர் உருவச்சிலைகளில் அளவில் யுன்காங் கற்குகையின் தாக்கம தெரிகிறது.

யுன்காங் கற்குகை, கற்குகை கலையின் சீன மயமாக்கத்தின் துவக்கம். மத்திய காலத்தில் செதுக்கப்பட்ட யுன்காங் கற்குகையில் இடம்பெற்றுள்ள சீன அரண்மனைக் கட்டடமும் அதன் அடிப்படையில் வளர்ந்த சீன மாதிரி புத்தர் உருவச்சிலைப் பீடமும் அதற்குப் பிந்திய கற்குகைக் கோயில்களின் கட்டுமானத்தில் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற்காலத்தில் செதுக்கப்பட்ட யுன்காங் கற்குகை அறைகளின் பரவலும் அலங்காரமும் சீனக் கட்டடப்பாணியை வெளிப்படுத்தி, புத்த மதக் கலை சீன மயமாவதைக் கோடிட்டுக்காட்டுகின்றது.

2001ஆம் ஆண்டு டிசெம்பர் திங்களில் உலக மரபுச்செல்வப் பட்டியலில் யுன்காங் கற்குகை சேர்க்கப்பட்டது. சான்சி மாநிலத்து தாதுங் நகரில் அமைந்துள்ள யுன்காங் கற்குகை, கி.பி. 5வது நூற்றாண்டு முதல் 6வது நூற்றாண்டு வரையிலான சீனாவின் தலை சிறந்த புத்த மதக் கற்குகைக் கலையின் சின்னம். இவற்றில் தெயொ 5 கற்குகைகளின் பரவல் நியாயமானது. சீனப் புத்த மதக் கலையின் முதலாவது உச்ச கட்டத்தில முன் மாதிரியாகும் என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பிடுகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040