• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையும் அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகளும்

மேற்கு சீனாவின் சிஆன் நகரில் அமைந்துள்ள பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறை உலகிலேயே மிகப் பெரிய, பேரரசர் கல்லறைகளில் ஒன்றாகும். இது தொன்மையான, தனிச்சிறப்பு வாய்ந்த கட்டடமாகும். இக்கல்லறையுடன் புதைக்கப்பட்ட சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகள், எகிப்தின் பிரமிடு போல, உலகில் 8வது அற்புதம் என அழைக்கப்படுகின்றது. பேரரசர் சிங்ஸ்ஹுவான், கி.மு.259 முதல் கி.மு. 210 வரையான சீனாவின் நிலப்பிரபுத்தவச் சமுதாயத்தில் முதலாவது மன்னர் ஆவார். சீன வரலாற்றில் சர்ச்சைக்குரிய வரலாற்றுப் பிரமுகர் அவர், சீனாவை ஒன்றிணைத்த முதலாவது மன்னர் அவரே. சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். எடுத்துக்காட்டாக, ஒரே நாணயம் மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கட்டளை பிறப்பித்தார். நீளம், அளவு, எடை ஆகியவற்றை அவர் முறைப்படுத்தினார். அத்துடன், வட பகுதி சிறுபான்மை தேசிய இன ஆட்சியின் ஊடுருவலுக்கு எதிராக, தற்பாப்புக்கென பெருஞ் சுவரைக் கட்ட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். இதன் காரணமாக, சீன வரலாற்றில் புகழ்பெற்ற அரசியல்வாதியாக அவர் விளங்கினார். ஆனால், அவர் மிகவும் கொடூரமானவர். சொகுசு வாழ்க்கை நடத்தியவர். மக்களின் சிந்தனையை வலுகட்டாயமாகக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தமது ஆட்சிக்குத் துணை புரியாத நூல்களைத் தீயிட்டு கொளுத்தினார். சிங் வமிச ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, தம்முடன் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட அறிஞர்களை உயிருடன் புதைத்தார். தவிர, தனது ஆட்சி காலத்தில், பொழுதுபோக்கிற்காக, அவாங்குங் மாளிகை உள்ளிட்ட அரண்மனைகளைக் கட்டினார். நாட்டை ஒன்றிணைத்த சிறிது காலத்திற்குப் பின்னர், தமக்கென கல்லறைக் கட்டுவதற்கு 7 லட்சம் மக்களைத் திரட்டினார். அவர் மரணமடையும் வரை, இக்கல்லறையின் கட்டுமானப் பணி முடிவடையவில்லை. சீனாவின் ஷென்சி மாநிலத்து சிஆன் புறநகரிலுள்ள லிசான் மலையில் பேரரசர் சிங்ஸ்வானின் கல்லறை க்ட்டப்பட்டது. அதன் பரப்பளவு 56 சதுர கிலோமீட்டராகும். அதன் அடித்தள வடிவம் ஏறக்குறைய சதுரமானது. தெற்கிலிருந்து வடக்கில் 350 மீட்டர் நீளமும், கிழக்கிலிருந்து மேற்கில் 345 மீட்டர் நீளமும் கொண்டது. அதன் உயரம் 76 மீட்டர். இக்கல்லறை, பிரமிடு வடிவமுடையது. இக்கல்லறையின் சுற்றுப்புறத்தில் இறந்தோருடன் புதைக்கப்பட்டவர்கள் மற்றும் பொருட்களின் குழிகள், கல்லறைகள், இக்கல்லறைக் கட்டியமைத்தவரின் கல்லறைகள் ஆக 500க்கும் அதிகமாகும் என்பதை சீனாவின் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்குழிகளில், பேரரசர் சிங்ஸ்ஹுவான் வாழ்நாட்களில் பயன்படுத்திய குதிரை வாகனங்கள், குதிரைத் தொட்டிகள், சிங் வமிச காலத்திய படைவீரர்களின் சுடுமண் உருவச் சிலைகள் ஆகியவை உள்ளன. பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையும் அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகளும் உலகின் 8வது அற்புதமென போற்றப்பட்டுள்ளது. அது கண்டுபிடிப்பு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

1974ஆம் ஆண்டில், அங்குள்ள கிராமவாசிகள் கிணற்றைத் தோண்டிய போது, அதிகமான பீங்கான்களைக் கண்டுபிடித்தனர். அவர்கள் இவற்றைக் கவனிக்காமல் வீசியெறிந்தனர். அந்நேரத்தில் இப்பீங்கான்களைக் கண்டுபிடித்த தொல்பொருள் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர், இது முக்கிய கண்டுபிடிப்பு என்று நினைத்தார். இது பற்றி அவர் உடனடியாக மாவட்டத் தொல் பொருள் அதிகாரியிடண் தெரிவித்தார். இதன் விளைவாக, உலக அதிசயமான சிங்ஸ்ருவானின் கல்லறையும் அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகளும் தோண்டி யெடுக்கப்பட்டன. இதுவரை 500 உருவச்சிலைகளும் 18 மரச்சிற்பங்களினாலான போர் வாகனங்களும் 100க்கும் மேற்பட்ட பீஙகான் குதிரை உருவச்சிலைகளும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இந்த சுடுமண் உருவச்சிலைகள் உயரமானவை. அவற்றின் சராசரி உயரம் 1.8 மீட்டர் ஆகும். அவை நேர்த்தியாகக் காணப்படுகின்றன. சிங் வமிச காலத் தரமான சிற்ப நுட்பம் இதிலிருந்து தெரிகிறது. இவற்றைப் பார்வையிட விரும்பும் பல்வேறு நாட்டு மக்கள் வெகு தொலைவிலிருந்து சீனாவுக்கு வருகை தந்துள்ளனர். சில நாடுகளின் அரசியல பிரமுகர்களும் சீனப் பயணத்தின் போது இவற்றைப் பார்வையிட விரும்புகின்றனர். பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையும் அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகளும் மனித குலத்தின் மகத்தான அற்புதம் என முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ரொனால்டு ரேகன் போற்றினார். தொல் பொருள் பாதுகாப்புத் தொழில் நுட்ப பிரச்சினையினாலும் பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையையும் அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகளையும் மேலும் செவ்வனே பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் இக்கல்லறையின் முக்கிய பகுதியைத் தோண்டியெடுக்கத் தற்போது சீன அரசு திட்டமிடவில்லை. இக்கல்லறையுடன் இணைந்து புதைக்கப்பட்ட குழிகளிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் தோண்டியெடுக்கப்பட்ட 50 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய வரலாற்றுத் தொல் பொருட்களில் அருமையான செப்புக் குதிரை வாகனங்கள் பல இடம்பெற்றுள்ளன. சீனாவின் தொல் பொருள் ஆய்வாளர்கள் 1980ஆம் ஆண்டில் செப்புக் குதிரை வாகனங்களைக் கண்டுபிடித்தனர். இவ்வாகனங்களின் முக்கிய பகுதி செம்பால் உருவாக்கப்பட்டது. அவற்றின் உதிரி பாகங்கள், தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்காரம் செய்யப்பட்ட்ன. இவற்றின் பல்வேறு பகுதிகள் இயந்திரத்தால் இணைக்கப்பட்டவை. செப்பான குதிரை வாகனங்களின் அளவு, உண்மை செப்புக் குதிரை வாகனங்களின் அளவை விட அரைவாசி குறைவு. இதன் மூலம், பேரரசர் சிங்ஸ்ஹுவானின் பண்பு நயம் மீண்டும் நேர்த்தியாகப் பிரதிபலிக்கிறது. பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறை, அக்கால சிங் வமிச ஆட்சி மீண்டும் தோன்றுவதாகும் என்பதை இந்தக் குழிகளிலுள்ள பொருட்களும் சீன வரலாற்று நூலிலுள்ள தொடர்புடைய பதிவேடுகளும் காட்டுகின்றன. தமது மறைவுக்குப் பின்னர், தொடர்ந்து ஆட்சி புரிய பேரரசர் சிங்ஸ்வான் முயன்றார். ஆனால், அவர் மரணமடைந்த மூன்று ஆண்டுகளுக்குள் விவசாயிகளின் கிளர்ச்சியினால் சிங் வமிச ஆட்சி தூக்கியெறியப்பட்டது என்று பேரரசர் சிங்ஸ்வான் எதிர்பார்க்கவேயில்லை. இருப்பினும், சீனாவின் பேரரசர் கல்லறைகளில் அளவில் மிக பெரிய, புதைக்கப்பட்ட மதிப்பிடற்கரிய பொருட்கள் அதிக அளவிலான இக்கல்லறை, நிலத்தின் கீழ் 2000 ஆண்டுகளுக்கு மேலாக மறைந்திருந்தது. இது, சீன வரலாற்றின் "சாட்சியம்". பேரரசர் சிங்ஸ்வான் கல்லறையின் மாபெரும் வரலாற்று மதிப்பினால், 1987ல், பேரரசர் சிங்ஸ்ஹுவானின் க்ல்லறையும் அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகளும் ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040