• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

பெருஞ்சுவர்

உலகப் புகழ்மிக்க 7 அற்புதங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர், முற்காலத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய அளவிலான பண்டைக்கால ராணுவப் பாதுகாப்பு அரணாகும்.கம்பீரமான இந்தச் சுவர், சீன நிலப்பகுதியில் சுமார் ஏழாயிரம் கிலோமீட்டர் நீளமுடையது. 1987ல் சீனப் பெருஞ்சுவர், உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கி.மு. 9வது நூற்றாண்டில் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி துவங்கியது. அப்போதைய சீனாவின் சொங்யுவான் ஆட்சிக் காலத்தில் வட பகுதி தேசத்தின் ஆக்கிரமிப்பை எதிர்க்க, எல்லைப்புறத்தில் அமைந்துள்ள வழிகாட்டும் கோபுரங்களை நகரச்சுவரால் ஒன்றிணைத்ததால் பெருஞ்சுவராக மாறிவிட்டது. வசந்த கால மற்றும் இலையுதிர் காலத்திலும் போரிடும் தேசக் காலத்திலும் பேரரசரின் கீழுள்ள சிற்றரசுகள் மேலாதிக்கம் செலுத்தியதால் போர் நடைபெற்றுவந்தது. பெரிய அரசுகள் தற்காப்புக்காக, எல்லைப்புறத்திற்கு அருகிலுள்ள மலைத் தொடர்களைப் பயன்படுத்தி, பெருஞ்சுவரைக் கட்டின. கி.மு. 221 ஆண் ஆண்டில் பேரரசர் சிங்ஸ்ஹுவாங் சீனாவை ஒன்றிணைத்ததை அடுத்து, வடக்கிலுள்ள மங்கோலிய புல்வெளியில் நாடோடி தேசத்தின் குதிரைப் படையின் வேகத்தை எதிர்த்துநிற்பதற்காக, போரிடும் தேசங்கள் கட்டிய இப்பெருஞ்சுவர் ஒன்றிணைக்கப்பட்டு, மலைத் தொடர்களுக்கு ஊடாகச் சென்று, வட எல்லைப் பகுதிக்கு ஒரு காப்புத் திரையாகிவிட்டது. அப்போது, பெருஞ்சுவரின் நீளம் 5000 கிலோமீட்டரைத் தாண்டியிருந்தது. சின் வமிசத்துக்குப் பிந்திய ஹெங் வமிசக் காலத்தில் பெருஞ்சுவரின் நீளம் 10 ஆசிரம் கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டது. கடந்த ஈராயிரம் ஆண்டு கால வரலாற்றில் சீனாவின் பல்வேறு கால ஆட்சியாளர்களின் கட்டளைக்கிணங்க, வேறுபட்ட அளவில் கட்டப்பட்ட பெரும் சுவர்களின் மொத்த நீளம், 50 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. அவற்றின் நீளம் பூகோளத்தைச் சுற்றினால் ஒரு வட்டத்துக்கு அதிகமாகும். தற்போது நாண் காணும் பெருஞ்சுவர், மிங் வமிச காலத்தில் அதாவது, 1368ஆம் ஆண்டு முதல் 1644ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட பெருஞ்சுவராகும். மேற்கில் சீனாவின் கான்சு மாநிலத்தின் சியாயு கணவாயில் இருந்து, கிழக்கில், சீனாவின் லியௌநின் மாநிலத்து யாலுசியாங் ஆற்றுக் கரை வரை நீள்கிறது. வழியில் அது, 9 மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களுக்கு ஊடே செல்கின்றது. அதன் முழு நீளம் 7300 கிலோமீட்டர். பெருஞ்சுவர் என்று அது அழைக்கப்பட்டுவருகின்றது. தற்காப்புத் திட்டப்பணியாக விளங்கிய பெருஞ்சுவர், மலைப் பக்கத்தில் கட்டப்பட்டு, பாலை வனம், புல் வெளி, சதுப்பு நிலம் ஆகியவற்றுக்கு ஊடாகச் செல்கிறது. அங்குள்ள நில அமைவு மிகவும் சிக்கலானது. க்ட்டடத் தொழிலாளர்கள் வேறுபட்ட நில அமைவுக்கேற்ப பெருஞ்சுவரைக் கட்டிவிட்டனர். சீன மூதாதையரின் அறிவுக் கூர்மையை இந்தப் பெருஞ்சுவர் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.

பெருஞ்சுவர் ஊர்ந்து செல்லும் மலைத் தொடரின் உச்சி வழியாக நீடித்திருக்கின்றது. பெருஞ்சுவரின் கீழ், மலைத்தொடரின் செங்குத்தான மலைகள் உள்ளன. மலையும் சுவரும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. பண்டைக்கால ராணுவ நிலைமையில் இவ்வளவு செங்குத்தான, ஆபத்தான மலையிலிருந்து பெருஞ்சுவரின் கீழ் பகுதிக்கு இஙங்கி, எவ்வித உதவியுமின்றி, மேலே ஏறி, நகரச் சுவரைத் தாண்டி நகரைக் கைப்பற்றுவதற்காக போர் புரிவது சாத்தியமாகாது. பெருஞ்சுவர் பொதுவாக பெரிய செங்கல் மற்றும் நீளமான கற்களால் கட்டப்பட்டது. அதன் உட்பகுதியில், மண், சின்னஞ்சிறிய கற்கள் ஆகியவை போடப்பட்டுள்ளன. அதன் உயரம் சுமார் 10 மீட்டர். சுவர் உச்சியின் அகலம் சுமார் 4 அல்லஸது 5 மீட்டர். அதாவது, ஒரே நேரத்தில் 4 குதிரைகள் ஒரே வரிசையில் ஓடலாம். போரிடும் போது, படைப்பிரிவுகள் போய்வருவதற்கும் தானியம், ஆயுதம் முதலியவை அனுப்புவதற்கும் இது வசதியாய் ிருந்தது. பெருஞ்சுவரின் உட்பகுதியில், கல்லினாலான ஏணிகள் இருப்பதால் மேலே கீழே போய்வருவதற்குத் துணை புரிந்தது. பெருஞ்சுவரில் குறிப்பிட்ட தொலைவுகளில் நகர மாடங்களோ, வழிகாட்டும் கோபுரமோ கட்டப்பட்டன. நகர மாடங்களில் ஆயுதம், தானியம் ஆகியவை சேமித்துவைக்கப்பட்டன. காவல் புரியும் போர்வீரர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் இவை திகழ்ந்தன. போரின் போது போர்வீரர்கள் இவ்விடத்தில் ஒளிந்து கொள்ள முடியும். எதிரிகள் ஊடுருவும் போது, வழிகாட்டும் கோபுரத்தில் ஒளிப்பந்தம் ஏற்றப்பட்டதும் போர் பற்றிய தகவல் உடனடியாக நாடு முழுவதும் பரவியது.

கடந்த காலத்தில் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்ட பெருஞ்சுவரின் பயன்பாடு, தற்போது இல்லை. எனினும், அதன் தனிச்சறப்பு வாய்ந்த கட்டட அழகைக் கண்டு மக்கள் வியப்படைகின்றனர். கம்பீரமான பெருஞ்சுவரைத் தொலைவிலிருந்து பார்க்கும் போது, இந்த நீளமான உயரமான சுவர், மலை உச்சி நெடுகிலும் நீளமான மலைவடிவத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அது உயிருள்ள டிராகன் போன்று வளைந்து நெளிந்து செல்கிறது. அருகிலிருந்து அதைப் பார்க்கும் போது, கண்பீரமான பெருஞ்சுவர், ஊரந்துசெல்லும் நகரச் சுவர், செங்குத்தான நகர அரண்மனை, வழிகாட்டும் கோபுரம் ாகியவை, ஏற்றத் தாழ்வான இட அமைப்புக்கேற்ப, ஒரு மர்மமான படமொன்றை உருவாக்கியுள்ளன. அது மாபெரும் கலை ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது. பெருஞ்சுவர், மாபெரும் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுலா மதிப்பு மிக்கது. பெருஞ்சுவருக்குச் செல்லாதவர்கள், வீரர் அல்ல என்ற கூற்று சீனாவில் பரவியிருக்கின்றது. பெருஞ்சுவரில் ஏறுவது பெருமை தரும் என்று சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கருதுகின்றனர். சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெய்ச்சிங்கின் புகழ்பெற்ற பதாலிங் ஸ்மாதைய், முதியன் ஆகிய நுழைவாயில்கள் பெருஞ்சுவரின் கிழக்கு முனையில் அமைந்துள்ள, சீனாவின் முதலாவது கணவாய் என்று அழைக்கப்படும் சாங்ஹெய் மலைக் கணவாய், பெருஞ்சுவரின் மேற்கு முனையில் அமைந்துள்ள கான்சு மாநிலத்தின் சியாயு கணவாய் பிரபல சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன. ஆண்டுதோறும் பயணிகள் இத்தலங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இப்பெருஞ்சுவரில் சீனாவின் பண்டைக் காலத் தொழிலாளிகளின் விவேகமும் வியர்வையும் ரத்தமும் கலந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகிவிட்ட போதிலும், அது இடிந்துவிழவில்லை. அதன் புகழும் ஈர்ப்புத் தன்மையும் சீனத் தேசத்தின் சின்னமாகிவிட்டன. ஷ்ரக்ஷஆம் ஆண்டில், சீனத் தேசத்தின் சின்னம் என்ற முறையில் உலக மரபுச் செல்வப் பட்டியலில் பெருஞ்சுவர் சேர்க்கப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040