• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[உலக மரப்பு செல்வம்]

சோகவுதியென் பெய்ச்சிங் மரபுச்சிதிலம்

சோகவுதியென் பெய்ச்சிங் மனிதரின் மரபுச்சிதிலம், பெய்ச்சிங் மாநகரின் தென் மேற்கிலுள்ள 48 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வான்ஷான் திஸ்டிறிக் சோகவுதியென் கிராமத்தின் லுங்கு மலையில் அமைந்துள்ளது. மலைப்பிரதேசம் சமவெளியுடன் இணையும் இவ்விடத்தின் தென் கிழக்கு பகுதி, வட சீனாவின் சமவெளி. வட மேற்கு பகுதி மலைப்பிரதேசம். சோகுவதியெனுக்கு அருகிலுள்ள மலை, பொதுவாக சுண்ணாம்புக் கல்லினால் ஆனது. இங்கு பல பெரிய சிறிய இயற்கைக் குகைகள் உருவாகியுள்ளன. மலையில் கிழக்கிலிருந்து மேற்காக 140 மீட்டர் நீளத்திற்கு இயற்கை குகையொன்று உள்ளது. வாலில்லாக் குரங்கு என்று இது அழைக்கப்படுகின்றது. 1929ஆம் ஆண்டு இக்குகையில் பண்டைக் கால மனிதர்களின் மனிதர் மரபுச்சிதிலம் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட பின், சோகுவன்தியெனின் முதலாவது இடம் என்று அது அழைக்கப்படுகின்றது.

சோகுவன்தியென் மரபுச்சிதிலம், வட சீனாவின் முக்கிய பழைய கற்காலத்திலான மரபுச்செல்வமாகும். இதில் சோகுவன்தியெனின் முதலாவது இடம் அதாவது பெய்ச்சிங் மனிதர் மரபுச்சிதிலம் புகழ் மிக்கது. 1921ஆம் ஆண்டு சுவீடன் அறிஞர் ஆந்தசன் முதன்முதலில் இந்த மரபுச்சிதிலத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் அறிஞர்கள் பலர் இதைத் தோண்டியெடுத்தனர். 1927ஆம் ஆண்டு கனடா நாட்டு அறிஞர் புதாசன் சோகுவுன்தியென் மரபுச்சிதிலத்தை அதிகாரப்பூர்வமாகத் தோண்டியெடுத்து, சோகுவுன்தியெனில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மனிதர்களின் பற்கள், சீனாவின் வாலில்லாக் குரங்கு—பெய்ச்சிங் இனம் என்று பெயர் சூட்டினார். 1929ஆம் ஆண்டு சீனாவின் தொல் பொருள் ஆய்வாளர் பெய்வன்சொங், பெய்ச்சிங் மனிதரின் முதலாவது மண்டை ஓட்டைத் தோண்டியெடுத்ததது உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சோகுவன்தியென் மரபுச்சிதிலம் சுமார் 80 ஆண்டுகளாக அவ்வப்போது தோண்டியெடுக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிப் பணி தற்போதும் நடைபெற்றுவருகின்றது. இதுவரை சோகுவன்தியெனின் முதலாவது இடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட சுமார் 40 மீட்டர், அதன் மொத்த நீளத்தின் அரைவாசியை எட்டவில்லை. சோகுவன்தியென் பெய்ச்சிங் மனிதர் மரபுச்சிதிலத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ள வாலில்லாக் குரங்கின் புதைபடிவம், கல்பொருள், பாலூட்டி விலங்குகளின் புதை படிவம் ஆகியவற்றின் எண்ணிக்கையும், தீ பயன்படுத்தப்பட்டதன் அடையாளமும் அக்காலத்திய இதர மரபுச்சிதிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதவை.

சோகுவன்தியெனின் முதலாவது இடத்தில் தீ பயன்பாட்டுச் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், மனிதக் குலத்தின் தீ பயன்பாட்டு வரலாறு பல லட்சம் ஆண்டுகள் முன்தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சிதிலத்தில் 5 சாம்பல் தட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக தடியான சாம்பல் தட்டுக்களின் அளவு 6 மீட்டரை எட்டியுள்ளது. பெய்ச்சிங் மனிதருக்குத் தீ பயன்படுத்தத் தெரியும் என்பது மட்டுமல்ல, தீப்பற்றும் பொருளை நிலைநாட்டவும் தெரியும் என்பதை இச்சிதிலங்கள் கோடிட்டுக்காட்டுகின்றன.

இச்சிதிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கல் பொருட்களும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலப்பொருட்கள் சிதிலத்தின் அருகிலிருந்து கிடைத்தன. கல் பொருட்களில் பெரும்பாலானவை, சிறிய அளவுடையவை. பல்வகைகளானவை. முற்காலத்திய கல் பொருள் பெரியது. வெட்டுக் கருவி முக்கிய இடம் வகித்தது. மத்திய காலத்தில் கல்பொருளின் வடிவம் சிறியது. பிற்காலத்தில் கல்பொருள் மேலும் சிறியது. துளையிடும் கூம்பு வடிவ கல் கருவி, இப்பிற்காலத்தில் மட்டும் இருக்கும் கல் கருவி.

 சுமார் 7 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் பெய்ச்சிங் வாலில்லாக் குரங்கு சோகுவன்தியென் பிரதேசத்தில் வசித்ததைத் தோண்டி யெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் நிரூபித்துள்ளன. பெய்ச்சிங் மனிதர், பண்டை கால வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதராக மாறும் பழமை வாய்ந்த மனிதக் குலத்தைச் சேர்ந்தவர் என்று உயிரினவியல், வரலாற்றுவியல் மற்றும் மனித குல வளர்ச்சி வரலாற்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெய்ச்சிங் மனிதரும் அது தொடர்பான பண்பாடும் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்பட்டதால், 19வது நூற்றாண்டில் ஜாவ மனிதர் கண்டுபிடிக்கப்பட்ட பின் அறிவியல் துறையில் சுமார் அரை நூற்றாண்டாக நடைபெற்றுவரும் நிற்கும் மனிதர் வாலில்லாக் குரங்கா மனிதரா என்பது பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது. மனித குல வரலாற்றின் முற்காலத்தில் நிற்கும் மனிதர் என்ற காலகட்டம் இருந்தது. அவர்கள், நான்யு வாலில்லாக் குரங்கின் பின் தலைமுறையினர். அதற்குப் பின் தோன்றி மனிதரின் மூதாதையரும் ஆவர். நிற்கும் மனிதர், வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதராக மாறும் கால கட்டத்தில் நடு நிலையில் இருந்தனர். இதுவரை, நிற்கும் மனிதரின் வடிவம் தொடர்ந்து சோகுவன்தியென் பெய்ச்சிங் மனிதரை வரைமுறையாகக் கொண்டது. சோகுவன்தியென் சிதிலம், தொடர்ந்து உலகின் இதே காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டை கால மனித குலச் சிதிலங்களில் ஏராளமான தகவல்களைக் கொண்ட மதிப்பு மிக்க சிதிலம் ஆகும். உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறையின் படி, சோகுவன்தியென் பெய்ச்சிங் மனிதர் சிதிலம் 1987ஆம் ஆண்டு டிசெம்பர் திங்களில் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, சோகுவன்தியென் பெய்ச்சிங் மனிதர் சிதிலம் பற்றிய ஆராய்ச்சிப் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இதுவரை, அறிவியலாளர் கண்டுபிடித்துள்ள சீன வாலில்லாக் குரங்குகள் பெய்ச்சிங் மனிதரின் சிதிலத்தைச் சேர்ந்தவை. அவற்றின் பல்வகை வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்களும் அதே காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.மு 18000 ஆம் ஆண்டு முதல் கி.மு. 11000 ஆம் ஆண்டு வரையிலான புதிய மனித குலச் சிதிலங்கள் இதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. சோகுவன்தியென் சிதிலம், தொலைவு தொன்மை காலத்தில் ஆசிய கண்ட மனித குலச் சமூகத்தில் காண்பது அரிதான வரலாற்றுச் சான்று ஆகும். இது மட்டுமல்ல, மனித குல வளர்ச்சியையும் கோடிட்டுக்காட்டுகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040