|
![]() |
புராதன லிச்சியாங் நகரம்
புராதன லிச்சியாங் நகரம், தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்து லிச்சியாங் நசி இனத் தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, சொங் வமிசத்தின் இறுதி காலத்திலும் யுவான் வமிசத்தின் துவக்கக் காலத்திலும் (கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில்) உருவாகியது. யுன்னான்-குவெய்சோ பீடபூமியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்நகரின் பரப்பளவு 3.8 சதுர கிலோமீட்டர். பண்டை காலந் தொட்டே, இந்நகரம் பிரபல சந்தை நகராக திகழ்ந்துவருகின்றது. இந்நகரில் 6200க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 25000 பேர் வாழ்கின்றனர். இவர்களில், நாசி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களில் 30 விழுக்காட்டினர், செப்பு மற்றும் வெள்ளிப் பொருள் தயாரிப்பு, கம்பளி மற்றும் தோல் பதனீட்டுத் தொழில், துணிப் பொருள் தயாரிப்பு, மது தயாரிப்பு ஆகிய பாரம்பரிய கைவினைத் தொழிலிலும் வணிகத் துறையிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
புராதன லிச்சியாங் நகரப்பகுதியில் மலை மற்றும் நீர் அருகில் செந் நிறக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகளில் மழை காலத்தில் சேறாக இருக்காது. வறட்சி காலத்தில் புழுதி பறக்காது. இக்கற்களின் மேல் தீட்டப்பட்ட அழகான ஓவியங்கள் நகரச்சூழ்நிலையுடன் ஒன்றிணைந்துள்ளன. நகர மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்பாங் வீதி, புராதன லிச்சியாங் வீதிகளின் சின்னமாகத் திகழ்கின்றது.
லிச்சியாங் நகரப்பகுதியிலுள்ள யுஹொ ஆறுகளின் மீது 354 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. சராசரி ஒரு சதுரக் கிலோமீட்டருக்கு 93 பாலங்கள் உள்ளன. பாலங்களின் வடிவம் பல்வகையானது. இவற்றில் புகழ்பெற்ற சுசெய் பாலம், தாஷ் பாலம், வன்சியெ பாலம், நான்மென் பாலம், மாஅன் பாலம், ழன்சௌ பாலம் ஆகியவை மிங் மற்றும் சிங் வமிசக்காலத்தில் (கி.பி. 14ம்-19ம் நூற்றாண்டுகள்) கட்டப்பட்டன. இவற்றில் ஸ்பாங் வீதியின் கிழக்கிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தாஷ் பாலம் தனிச்சிறப்பு மிக்கது.
லிச்சியாங் நகரப்பகுதியில் மு என்ற குடும்பத்தின் இல்லம், மு என்பவர் குடும்பத்தின் தலைமுறை தலைமுறையாக மு என்ற குடும்ப பெயருடைய அதிகாரியின் அலுவலகமாக விளங்கிவந்தது. யுவான் வமிசக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அலுவலகம் 1998ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட பின் புராதன நகர அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. சுமார் 3 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இக்கட்டடத்தில் பெரிதும் சிறிதுமாக மொத்தம் 162 அறைகள் உள்ளன. இவற்றில் கடந்த கால மன்னர்கள் எழுதிய எழுத்துக்களுடன் கூடிய 11 பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. மு குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி வரலாற்றை இது பிரதிபலிக்கின்றது.
நகரப்பகுதியிலுள்ள வுகொ கோயிலைச் சேர்ந்த வூவன் கட்டடம் கி.பி. 1601ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 20 மீட்டர் உயரமுடைய இக்கட்டடத்தின் வடிவம், 5 phoenix (பீனிக்ஸ்)பறவைகள் பறப்பது போல இருப்பதால் 5 phoenix கட்டிடம் என்றும் அழைக்கப்படுகின்றது. இக்கட்டடத்தின் மேல் தளத்தில் பல்வகை தரமான ஓவியங்கள் தீட்டப்பட்டதாலும், ஹென், திபெத், நாசி உள்ளிட்ட தேசிய இனங்களின் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டிருப்பதாகவும் சீனாவின் பண்டை காலக் கட்டடங்களில் மதிப்பிற்கரிய கலைச் செல்வமாகக இது திகழ்கின்றது.
பெய்சா குடியிருப்புகள், லிச்சியாங் நகரின் வடக்கிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. கி.பி. 10வது நூற்றாண்டு முதல் 14வது நூற்றாண்டு வரை லிச்சியாங் பிரதேசத்தின் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாக இருந்தது. இக்குடியிருப்புகள், தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் அச்சாணியில் அமைந்துள்ளது. அதன் மையப் பகுதி, கோடக வடிவச் சதுக்கமாகும். நீருற்று ஒன்று வடக்கிலிருந்து இச்சதுக்கத்துக்குள் எடுத்துச்செல்லப்படுகின்றது. சதுக்கத்தின் 4 திசைகளிலும் ஒரு வீதி உள்ளது. இது தனிச்சிறப்பு வாய்ந்தது. பெய்சா குடியிருப்புக்களின் உருவாக்கமும் வளர்ச்சியும் புராதன லிச்சியாங் நகரின் பரவலுக்கு அடிப்படை இட்டுள்ளன.
லிச்சியாங் நகரின் வட மேற்கிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுஹொ குடியிருப்புக்கள், இந்நகரின் சுற்றுப்புறத்தில் ஒரு சிறிய சந்தையாகும். இக்குடியிருப்புக்களுக்குள் வீடுகள் ஒழுங்கான முறையில் கட்டப்பட்டுள்ளன. அதன் பரவல், இந்நகரிலுள்ள ஸ்பாங் வீதியைப் போன்றது. சிங்லுங் ஆற்று நீர் இக்கட்டடங்களின் நடுப் பகுதி வழியாக ஓடுகின்றது. சிங்லுங் பாலம், லிச்சியாங் நகரில் மிகப் பெரிய கல் பாலம்.
புராதன லிச்சியாங் நகரம் நீண்ட வரலாறுடையது. மலை நகரக் காட்சியுடன் கூடிய இந்நகரில் நீர் வளம் கொண்ட ஊரும் இருக்கின்றன. லிச்சியாங் ஹென், பெய், யி மற்றும் திபெத் இனங்களின் பாணியில் அமைக்கப்பட்ட லிச்சியாங் குடியிருப்புகளில் நாசி இன மணமும் கமழுகின்றது. சீனாவின் கட்டட வரலாறு, பண்பாட்டு வரலாறு ஆகியவற்றை ஆராய்வதில் முக்கியமான அரிய மரபுச்செல்வம் இது நாசி இனத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதால் மனித குலப் பண்பாட்டு வளர்ச்சியை ஆராய்வதில் முக்கிய வரலாற்றுத் தகவலாக தேசிய இனப் பாரம்பரிய பண்பாட்டைப் பிரதிபலிக்கும் லிச்சியாங் நகரம் திகழ்கின்றது.
லிச்சியாங் நகரமானது, உயரிய மதிப்பு வாய்ந்த பிரபல வரலாற்றுப் பண்பாட்டு நகரமாகும். உள்ளூர் வரலாற்றுப் பண்பாட்டையும் தேசிய இன நடையுடை பாவனைகளைப் பிரதிபலிக்கும் இந்நகரத்தில் அப்போதைய சமூக முன்னேற்றத்தின் தனிச்சிறப்பைக் காணலாம். மாறிவரும் நகர நிலைமை, உயிராற்றல் நிரம்பிய நீர்ப்பகுதி, ஒருமைப்பாடான பாணியில் கட்டப்பட்ட கட்டிடங்கள், குடியிருப்புக்கு ஏற்ற சூழ்நிலை, தனிச்சிறப்பு மிக்க தேசிய இனக் கலை ஆகியவற்றினால் இந்நகரம், சீனாவின் இதர புகழ்பெற்ற வரலாற்றுப் பண்பாட்டு நகரங்களிலிருந்து வேறுபடுகின்றது. புராதன லிச்சியாங் நகரம், சிறுபான்மை தேசிய இன மக்கள் குழுமிவாழும் பாரம்பரிய வசிப்பிடமாகும். மனிதகுல நாகரிக வளர்ச்சி வரலாறு, தேசிய வளர்ச்சி வரலாறு ஆகியவை பற்றிய தகவல்களைத் தருகின்றது. இது, சீனாவிற்கும் உலகிற்கும் மதிப்புள்ள பண்பாட்டு மரபுச்செல்வம் ஆகும். இது, உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர தகுதி உண்டு.
புராதன லிச்சியாங் நகரத்தில் இயற்கை காட்சியும் செயற்கை காட்சியும் நன்கு இணைந்திருக்கின்றன. 1997ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில், பண்பாட்டு மரபுச் செல்வ வரைமுறையின் படி, உலக மரபுச்செல்வப் பட்டியலில் இந்நகரம் சேர்ந்துள்ளது. பொருளாதாரம், போர்தந்திர முக்கிய இடம் ஆகியவை கரடுமுரடான புவியியல் நிலையுடன் உரிய முறையில் ஒன்றிணையும் புராதன லிச்சியாங் நகரில், தொன்மை வாய்ந்த நிலைமை உண்மையாகவும் முழுமையாகவும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.
அதிகமான வமிசக் காலச் சோதனைகளுக்குத் தாக்குபிடித்து, பல்வேறு தேசிய இனங்களின் பண்பாட்டுத் தனிச்சிறப்புக்களை ஒருங்கே கொண்டிருப்பதால் இந்நகரிலுள்ள கட்டடங்கள் புகழ்பெற்றுளஅளன. இந்நகரிலுள்ள தொன்மை வாய்ந்த நீர் விநியோகத் தொகுதி, இதுவரையிலும் பயனுள்ள முறையில் பங்காற்றிவருகின்றது.
|