• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

பண்பாடு

ஷாங்காயில் தலைச்சிறப்புமிக்க பண்பாட்டை எங்கும் உணரலாம். மேலை நாட்டுப் பண்பாடுகளுடன் இணைந்து, தனியான ஷாங்காய் பாணிப் பண்பாடு உருவாகியுள்ளதைக் காணலாம். ஷாங்காய் பாணிப் பண்பாட்டில் சீன மற்றும் வெளிநாட்டுப் பண்பாடு நன்றாக ஒன்றிணைந்து, நாட்டுப்புற மற்றும் வணிகச் சூழ்நிலையைக் காட்டுகிறது. ஷாங்காயின் பல்வேறு இடங்களில் அமைந்த புகழ் பெற்றவர்களின் வீடுகள் மூலம், வரலாற்றுக் கதைகள் மற்றும் பண்பாட்டுப் பாணிகளை அறியலாம். மேலும், ஷாங்காய் இசை நாடகம், ஷாங்காய் பண்பாட்டில் சிறப்பு வாய்ந்ததாகும். வென் மியாவ் எனும் கண்பிஃயூசியஸ் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள சிறிய நாடக நிலைய அரங்கேற்றங்களில் இந்த இசை நாடகத்தைக் கண்டு இரசிக்கலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040