• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காயின் உள்ளூர் தனிச்சிறப்பியல்புடைய 10 பொருட்கள்

பட்டுத்துணி,ச்சி ப்பௌ Si Chou,Qi Pao:பாரம்பரிய சீன ஓவியத்தை உள்ளடக்கமாகவும் உருவமாகவும் கொண்ட பட்டுத்துணி, தலைசிறந்த உற்பத்திப் பொருளாக இருக்கிறது. பட்டால் தயாரிக்கப்படும் ச்சிப்பௌ, இன்பமாகவும் உயர்தரமாகவும் காணப்படுகிறது.

Mu Diao மரச்சிற்பம்:வேறுபட்ட மூலப்பொருட்களின் படி, மரச்சிற்பங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, வெள்ளை மரம், சிவப்பு மரம் மற்றும் ஹுயாங் என்ற மரச்சிற்பங்களாகும்.

Gao Qiao Song Bing கோ ச்சோ சூங் பிங்:அது ச்யேன்சேன் கேக் எனவும் அழைக்கப்படுகிறது. மாவுச்சத்து, சிவப்பு மொச்சை, சர்க்கரை முதலியவற்றால் அது தயாரிக்கப்படுகிறது.

Jin Jing Fu Ru ஜின் ஜிங் ஃபூ ரூ:அதில் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண வகைகள் இருக்கின்றன.

Li Gao Tang லீ கோ டாங்:சர்க்கரை, பாதாம் முதலிய 14 வகை உணவுகளால் அது சமைக்கப்படுகிறது.

Jia Ding Huang Cao Bian ஜியா டிங் புல் பின்னல் வேலை:புல்லால் தயாரிக்கப்படும் பொருட்களில் ஆயிரக்கான வகைகள் உள்ளன. பழக் கூடை, பெட்டி, தளர்மென்மிதியடி முதலியவை, அவற்றில் அடங்கும்.

Rong Xiu ஆட்டு ரோமப் பூத்தையல் வேலை:அது பலநிற ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்படும் கைவினை வேலையாக இருக்கிறது. உயிரோட்டம் வாய்ந்த ஆட்டு ரோமப் பூத்தையல் வேலை மிகவும் புகழ் பெற்றுள்ளது.

Nv Shi Nei Yi மகளிர் உள்ளாடை:நீண்டகால வரலாற்றைக் கொண்ட மகளிர் உள்ளாடை தொழில் சின்னங்கள், ஷாங்காயில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கூச்சின் என்ற தொழில் சின்னம் மிகப் புகழ் பெற்றது.

Gu Dong தொல் பொருட்கள்:ஷாங்காய் டுங் டாய் சாலை, ஷாங்காய் கண்ணாடித் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது. அதில் பல தொல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Zong Zi,Yue Bing சூங் ச்சி,நிலா கேக்:டிராகன் படகு ஓட்ட விழா, நிலா விழா ஆகிய விழாக்களில், ஷாங்காயின் நான் ஜின் கிழக்கு சாலை 720 இலக்கமான முதல் உணவுக் கடையில் பல்வகை சூங் ச்சி நிலா கேக்ஸ் முதலியவற்றை வாங்கலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040