• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

புகழ்பெற்ற உணவு வகைகள்

டா ச்சா ஷியெய் Da Zha Xie:ஆற்று நண்டு வகைகளில் ஒன்றாக டாச்சாஷியெய் இருக்கிறது. அதைச் சாப்பிட ஷாங்காய் மக்கள் மிகவும் விரும்புகின்றனர்.

ஷியெய் கெ ஹுவாங் Xie Ke Huang:ஷியெய்கெஹுவாங் எளிதில் உடையும் தோலுடைய வட்ட வடிவிலான அப்பமாகும். அதன் தோற்றமும் நிறமும், நண்டு ஓட்டைப் போலாக இருக்கும்.

நன் சியாங் சியோலூங் பௌ Nan Xiang Xiao Long Bao:ஷாங்காயின் பாரம்பரியச் சிற்றுண்டியாகத் திகழ்கிறது. நன்சியாங்சியோமன்டோ எனவும் அது அழைக்கப்படுகிறது.

ஷாங் சிஅன் மன் தோ Sheng Jian Man Tou:அதில் நிறைய சூப்பு இருக்கிறது. முக்கிய உணவு வகையாகவும், சிற்றுண்டியாகவும் அது சாப்பிடப்படலாம்.

பை ச்சேன் ஜி,சியோ ஷோ ஷிங் ஜி ச்சோ Bai Zhan Ji,Xiao Shao Xing Ji Zhou:பைச்சேன் கோழி, சியாங்சு மற்றும் சேச்சியாங் மாநிலங்களின் சுவை உணவாகும். சியோஷோஷிங் கோழி கஞ்சி, பைச்சேன் கோழியின் சூப்பு, கோழி இறைச்சி, அசிரி முதலியவற்றால் சமைக்கப்படும்.

Mian கை யாங் சூங் யோ மியன் Kai Yang Cong You:வெங்காயம், இறால், மாவடு முதலியவற்றால் அது சமைக்கப்படும். அது மிகவும் சுவையான உணவு ஆகும்.

பா பௌ லா ஜியாங் Ba Bao La Jiang:வீட்டுப் பறவைகள், இறைச்சி, ஆப்பிள் முதலிய 8 உணவுவகைகளை முக்கியமாகக் கொண்டு, இனிப்பாகவும் உறைப்பாகவும் அது தயாரிக்கப்பட்டுச் சுவைக்கப்படுகிறது.

யோ பௌ ஹெ சியா You Bao He Xia:இவ்வுணவு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. வட்ட வடிவிலான ஆற்று இறால், இனிப்பாகவும் வறைப்பாகவும் சுவைக்கப்படலாம்.

லேய் ஷா யுவான் Lei Sha Yuan:சிவப்பு மொச்சை, மாவு, அரிசி மாவு, எள்ளு முதலியவற்றால் சமைக்கப்பட்ட உள்ளூர் தனிச்சிறப்பியல்புடைய ஒரு வகை சிற்றுண்டி.

பாய் கூ நியென் கோ Pai Gu Nian Gao:பன்றி இறைச்சி, சுங் ஆற்று அரிசி முதலியவற்றால் அது சமைக்கப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040