• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

போக்குவரத்து வழிமுறை

வெளிநாட்டிலிருந்து ஷாங்காய்க்குப் பயணம் மேற்கொள்வதற்கு, விமானம், தொடர்வண்டி, பயணியர் படகு ஆகியவற்றின் மூலம் வரலாம்.

விமானம்:ஷாங்காயில் பூட்டொங் மற்றும் ஹொங்சியோ விமான நிலையங்கள் இருக்கின்றன. அவற்றின் குறியீடு முறையே, ப்பீ வி ஜி, எஸ் எச் ஏ ஆகும். ஷாங்காயில் விமானத்தை மாற்ற வேண்டுமானால், ஒரே விமான நிலையத்திலிருந்து பறந்து இறங்கும் விமானத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து நேரத்துக்காக 2 முதல் 3 வரை மணிநேரம் முன்கூட்டியே இன்னொரு விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

தொடர்வண்டி:தொடர்வண்டி நிலையம், தெற்கு தொடர்வண்டி நிலையம், ஹொங்ச்சியோ தொடர்வண்டி நிலையம் ஆகியவை ஷாங்காயில் உள்ளன. முக்கிய இருப்புப் பாதைப் போக்குவரத்து மையமாக ஷாங்காய் இருக்கிறது.

பயணியர் படகு:ஷாங்காய் துறைமுகமான வூச்சோங் பயணியர் மையம், பௌஷேன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து சீனாவின் பல்வேறு கடலோர நகரங்களைச் சென்றடைந்து, தென்கொரியா, ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் போகலாம்.

ஷாங்காயில் பயணம் மேற்கொள்ளும் போது, மின்காந்த இருப்புப் பாதை, சுரங்க இருப்புப்பாதை, வாடகைச் சீருந்து முதலியவை மூலம் செல்லலாம்.

மின்காந்த இருப்புப் பாதை:உலகின் முதல் மின்காந்த இருப்புப் பாதை முன்மாதிரியாக, ஷாங்காய் மின்காந்த இருப்புப் பாதை இருக்கிறது. ஒரு வழிப்பயணக் கட்டணம், 50 யுவானாகும். போய்வரப் பயணக் கட்டணம், 80 யுவானாகும்.

சுரங்க இருப்புப்பாதை:ஷாங்காய் சுரங்க இருப்புப்பாதையில் 11 பாதைகள் உள்ளன. பயணிகள் செல்லும் தூரத்தின் படி, பயணக் கட்டணம் மாறுகிறது. பயணச் சீட்டு விற்பனை இடத்திலும், தானியங்கி இயந்திரங்களிலும், ஒரு வழிப் பயணச் சீட்டை வாங்கலாம்

வாடகைச் சீருந்து:பகல் வாடகைச் சீருந்தில், 3 கிலோமீட்டர் தூரத்து்ககுக் குறைந்தபட்சக் கட்டணம் 12 யுவான் செலுத்த வேண்டும். இரவில் ஒரே தூரத்தில் 16யுவான் செலுத்த வேண்டும். புறநகருக்கும் நகரப்பிரதேசத்துக்குமிடை விலை வேறுபடுகிறது. புறநகரில் வாடகைச் சீருந்து மூலம் பயணம் செய்யும் போது 10 யுவான் தேவைப்படும்.

1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040