• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

காட்சித்தலங்கள்

வெய் தான்

1、பொது அறிமுகம்:வெய் தான் எனும் ஆற்றுகரை வீதி, 1846ஆம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. ஷாங்காயின் நடுவில் ஹுவாங் பு ஆற்றுகரையில் இது அமைந்திருக்கிறது. அதன் கிழக்கில் ஹுவாங் பு ஆறு ஓடுகிறது. மேற்குப் பகுதியில் ரோமானிய பாணி மற்றும் Gothic எனப்படும் வெளிநாட்டுப் பாணியுடைய சிறப்பான 52 கட்டிடங்கள் உள்ளன . இதனால், பன்னாட்டுக் கட்டிடக் கண்காட்சி என்ற பெருமையை, வெய் தான் அடைகிறது. வைய்டானின் சுற்றுலா மேடையிலிருந்து, அழகான ஹுவாங் பு ஆற்றையும், லுஜியாசுயேயின் காட்சியையும் பார்த்து ரசிக்கலாம். எனவே, ஷாங்காயில் பயணம் மேற்கொள்ளும் போது, பார்வையிட வேண்டிய சிறந்த தலமாக வெய் தான் இருக்கிறது.

2、பன்னாட்டுக் கட்டிடக் கண்காட்சி:வரலாறு விட்டுச் சென்ற கதைகளுக்கு அது சான்று அளிக்கிறது. வேறுபட்ட பாணி, வேறுபட்ட பின்னணி, வேறுபட்ட பயன்பாடு ஆகியவை கொண்ட இந்தக் கட்டிடங்கள், வடிவமைப்பாளர்கள் வெளிப்படுத்திய முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அதற்கே உரித்தான தனிச்சிறப்பான ஈர்ப்பாற்றல் உள்ளது.

3、வெய் தான் சுற்றுலாக் குடைவழி: ஆற்றைக் கடந்துச் செல்ல உருவாக்கப்பட்ட முதலாவது நடைப்பாதை குடைவழியாகிய அது, 646.7 மீட்டர் நீளமாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் காட்சிகளைச் சிறப்பாகப் பார்வையிடுவதற்கு, வசதி வழங்கும் வகையில் கீழை முத்துக் கோபுரமும், ஹுவாங் பு ஆற்றின் மேற்கிலுள்ள வெய் தான் காட்சியும், இக்குடைவழி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இக்குகை வழியைக் கடந்து செல்லும்போது, பயணிகள் பல்வகை நிழற்படங்களைக் கண்டு இசைகளைக் கேட்டு இரசித்து மகிழலாம்.

4、காதலர் சுவர்:ஹூவாங் பு ஆற்றுகரையை ஒட்டி காதலர் சுவர் அமைந்திருக்கிறது. அதன் நீளம் சுமார் 1700 மீட்டர். அது பசுங்காரையால் கட்டியமைக்கப்பட்ட வெள்ளப்பெருக்கைத் தடுக்கின்ற ஒரு சுவராக இருக்கிறது. 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில், ஷாங்காயில் மிகவும் காதல் பாங்கான இடமாக அது கருதப்படுகிறது. இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான இணைகள் இங்கு வந்து காதல் காவிய காட்சிகளை வெளிப்படுத்துகின்றனர். இப்போது காதலர் சுவர், காட்சியைப் பார்க்கும் மேடையாக மாறி, எண்ணற்ற பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லூச்சியா சுயேய் பிரதேசம்

1、பொது அறிமுகம்:லூச்சியா சுயேய் பிரதேசம், பு தொங் புதிய மாவட்டத்தில் உள்ளது. ஷாங்காயில் மிக அதிக ஈர்ப்பாற்றலைக் கொண்டுள்ள பகுதி இது தான். கீழை முத்து என்று அழைக்கப்படும் வானொலி மற்றும் தொலைக்காட்சிக் கோபுரத்தை தனது அடையாள சின்னமாகக் கொண்டிருக்கும் இப்பகுதி, ஒளிமயமான முத்து போல் பளப்பளவென மின்னுகிறது. ஜின்மாவ் என்ற கட்டிடம், உலக நிதி மையம் முதலிய இங்குள்ள வானளாவியக் கட்டிடங்கள் இப்பிரதேசத்தை உறுதியாகப் பாதுகாத்து வருகின்றன. 2010ஆம் ஆண்டு இப்பிரதேசத்தில் சிறப்பாக நடைபெற்ற உலகப் பொருட்காட்சி, அதன் அழகை அதிகரித்துள்ளது.

2、கீழை முத்து வானொலி மற்றும் தொலைக்காட்சிக் கோபுரம்:சீனாவிலுள்ள இரண்டாவது உயரமான கோபுரமாகிய அது, ஷாங்காயின் புகழ் பெற்ற அடையாள சின்னங்களில் ஒன்றாகும். வேறுபட்ட அளவிலான 11 கோள வடிவக் கட்டிடப் பகுதிகளால் அது இணைக்கப்படுகிறது. இக்கோபுரத்தில் உணவகம், வணிகம், பொழுதுப்போக்கு, பூஃசியாங் ஆற்றுகரைப் பார்வை, கூட்ட அலுவல், வரலாற்றுக் கண்காட்சி, சுற்றுலா முதலிய சேவைகள், பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இங்கு பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை, அதனால் கிடைக்கும் வருமானம் ஆகியவை, உலகில் பிரான்ஸ்லுள்ள இஃபில் கோபுரத்துக்கு அடுத்து 2ஆம் இடத்தில் இருக்கிறது.

3、மின்காந்த தொடர்வண்டி:உலகின் முதலாவது வணிக நோக்கோடு மின்காந்தத்தில் இயங்கும் தொடர்வண்டி வழித்தடமாக, ஷாங்காயின் மின்காந்த தொடர்வண்டி நெறி இருக்கிறது. ஷாங்காய் சுரங்கத் தொடர்வண்டி போக்குவரத்து லூங்யாங் நிலையத்தின் தென் பகுதியிலிருந்து புஃ துங் பன்னாட்டு விமான நிலையத்தின் முதல் முனையம் வரை இயங்குகிறது. 30 கிலோமீட்டர் நீளம் போடப்பட்டிருக்கும் இந்த இருப்புப்பாதையில் மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்வண்டி ஓடுகிறது. பயண நேரம் 6 அல்லது 7 நிமிடங்கள் மட்டுமே. மேலும், லூங்யாங் பாதையில் அமைந்துள்ள மின்காந்த தொடர்வண்டி தொழில் நுட்பக் காட்சி மண்டபத்தில், மின்காந்த தொழில் நுட்பம் பற்றி பயணிகளுக்கு விளக்கப்படுகிறது.

4、உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சீன அரங்கு:உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் ஏ பகுதியில் சீன அரங்கு அமைந்துள்ளது. அதன் சாதாரண நுழைவுச்சீட்டு கட்டணம், 20 யுவானாகும். உலகப் பொருட்காட்சியின் நிரந்தரச் சிறப்புக் கருப்பொருள் அருங்காட்சியகங்களில் ஒன்றாகிய அது, ஆறு மாடிகளையும், ஒரு தரையடியில் ஒரு தளத்தையும் உடையதாகும். இது சீனாவின் செழிப்பான பண்பாட்டை வெளிப்படுத்துவதோடு, அதன் தோற்றம் பாரம்பரிய கட்டிடச் சிறப்புக்களையும் காட்டுகிறது. உலகப் பொருட்காட்சியின் மைய அச்சு பாதை, கூரை பூங்கா முதலியவை, பயணிகளுக்கு வியப்பளிக்கும் தோற்றங்களாக உள்ளன.

ஹெங்ஷான் பாதை

1、பொது அறிமுகம்:ஷாங்காயின் மிகவும் புகழ்பெற்ற மதுவகங்கள் அதிகமிருக்கும் சாலையாக ஹெங்ஷான் பாதை இருக்கிறது. பகல் நேரத்தில் உயரமான செழிப்பாக வளர்ந்த இன்துஸ் மரங்களின் நிழலில் உலாவி, இரவு நேரத்தில் வேறுபட்ட பணியுடைய மதுவகங்களில் மக்கள் மது அருந்தி மகிழலாம். உயர் தரமான ஐரோப்பிய பாணிக் கட்டிடங்கள், ஹெங்ஷான் பாதைக்குச் சிறப்பான பண்பாட்டுச் சூழலை ஏற்படுத்துகின்றன.

2、ஜியாங்ஜியேஷூவின் வீடு:கோமின்தாங் கட்சியின் முன்னாள் தலைவர் ஜியாங்ஜியேஷூவின் வீடு, அவருக்கும் சொங் மெய் லிங் அம்மையாருக்குமிடையிலான காதலின் அடையாளமாக உள்ளது. எனவே "காதல் வீடு" என்ற பெயர் மக்களால் அழைக்கப்படுகிறது. பிரான்ஸ் பாணியில் கட்டப்பட்ட தனி வீடாக அது உள்ளது.

3、மதுவகச் சாலை:இரவு நேரத்தில் ஹெங்ஷான் பாதை அழகு மிகுந்ததாக இருக்கிறது. பூங்கா போன்று தோன்றும் வெளிநாட்டுப் பாணியுடைய வீடுகளைப் புதுப்பித்து உருவாக்கிய சில பத்து மதுவகங்கள் இந்தச் சாலையில் உள்ளன. அவற்றில் சில பழமையானப் பண்பாட்டை வெளிப்படுத்தும் சிறப்பு வாய்ந்தவை. சில மதுவகங்கள் சீன மற்றும் வெளிநாட்டுப் பண்பாடுகளை இணைத்திருக்கின்றன. சில சீராகவும் அமைதியாகவும் இருக்கின்றன. கலை வண்ணப் பார்வையுடைய இளையோரின் கவனத்தை இவை ஈர்க்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இங்கு நமது விருப்பத்திற்கேற்ற மதுவகத்தைக் கண்டறிந்து மகிழ்ந்திருக்க முடியும்.

ஷிக்குமன் ஷின் தியென் தி கட்டிடக்குழு

1、பொது அறிமுகம்:நுங்தாங் என்னும் சிறு வீதிகளில், ஷாங்காய் மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வது, எளிதாக இருக்கிறது. அங்குள்ள ஷிக்குமன் என்னும் கட்டிடக்குழு, ஷாங்காயில் மட்டுமே உள்ள சிறப்பான கட்டிடங்களாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடமாக விளங்கும் ஷிக்குமனை அடிப்படையாகக் கொண்டு, புதுப்பிக்கப்பட்ட ஷின் தியென் தி, சீன மற்றும் மேலைப் பண்பாடு, பழைய மற்றும் புதிய எண்ணங்கள் ஆகியவற்றை இணைக்கும் பொழுதுபோக்குக்கான நடைப்பாதை சாலையாக மாறியுள்ளது.

2、ஷிக்குமன் ஷின் தியென் தி கட்டிடம்:30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளப்புள்ள ஷிக்குமன் ஷின் தியென் தி பிரதேசத்தில் செங்கல் சுவர் கட்டிடங்களிலிருந்து 1920ஆம் ஆண்டுக்காலத்தில் இருந்த பழைய ஷாங்காயின் காதற் காவிய பின்னணியை உணரலாம். என்றாலும் கவனமாகப் பார்த்தால், வரலாற்றுச் சிறப்புடைய ஒவ்வொரு கட்டிடத்திலும் தற்கால வண்ணமும் காணப்படுகிறது. பாரம்பரிய கட்டிடங்கள், நவீன புதிய ரகக் கட்டிடங்களுடன் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன.

3、சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது பிரதிநிதிக்கூட்டம், நினைவகம்: இரு ஷிக்குமன் கட்டிடங்களாக இந்த நினைவகம் இருக்கின்றன. இது, 1920ஆம் ஆண்டுக்காலத்தில் ஷாங்காய் குடிமக்களின் கட்டிட மாதிரியை வெளிப்படுத்துகிறது. பயணிகள் இங்கு இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம். சீன வரலாறு பற்றிய தொல்பொருட்களின் காட்சி, சீனக் கம்யூனிஸ்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்ற இடம் ஆகிய இரு பகுதிகளாக இந்நினைவகம் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று துணைக் காட்சியகங்களில், தொடர்புடைய புரட்சி மற்றும் வரலாற்று ஆவணங்களைப் பயணிகள் பார்த்து வாசிக்கலாம்.

யு யுவான் பூங்காப் பகுதி

1、பொது அறிமுகம்:சீனாவின் மிங் வம்சத்தின் அலுவலர் ஒருவர் அவரது தந்தைக்குக் கட்டிய ஒரு பண்டைய பூங்காவாக யு யுவான் பூங்கா திகழ்கிறது. இப்பூங்காவில் நாற்பதுக்கு மேலான பண்டைய கட்டிடங்கள் உள்ளன. அவை நுண்கட்டிடக்கலை அமைப்புடனும் சீராகவும் நிறுவப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பல்வகை மலர் கண்காட்சிகள், சுற்றுலா நடவடிக்கைகள், விளக்கு விழாக்கள், கையெழுத்துக்கலை மற்றும் ஓவியக் கலைக்கண்காட்சிகள் முதலியவை இப்பூங்காவில் நடைபெறுகின்றன. எனவே, ஷாங்காயில் பயணம் மேற்கொள்ளும்போது தவறாமல் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று தான்.

2、யு யுவான் பூங்கா:தென்கிழக்கு சீனாவில் தலைச்சிறந்த பூங்கா என்ற பெருமையை அடைந்துள்ள யு யுவான் பூங்கா, ஷாங்காயின் தென் பகுதியிலுள்ளது. இந்தப் புகழ் மிகுந்த பண்டைகலை பூங்கா, சுமார் 450 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டுள்ளது. 1987ஆம் ஆண்டு அது செப்பனிட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பின் பழைய மற்றும் புதிய காட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக் கொண்டு அழகை அள்ளித் தருகின்றன. புதிதாக நிறுவப்பட்ட கல் காட்சியகத்தின் பண்பாட்டு மதிப்பு, பெருவாரியான பயணிகளை ஈர்த்து வருகிறது. அத்துடன், யு யுவான் பூங்காவின் தெற்கில் ஏரியின் மையத்தில் அமைந்த காட்சி மண்டபம், அதற்கு அருகிலுள்ள ஜியுச்சு பாலம் ஆகியவை, யு யுவான் பூங்காவில் சிறப்பான பாணியுடைய காட்சியை உருவாக்கியுள்ளன.

3、பழைய சொங் ஹூவாங் கோயில்:1403 முதல் 1424ஆம் ஆண்டு வரை இக்கோயில் கட்டியமைக்கப்பட்டது. ஆனால் பண்பாட்டுப் புரட்சிக்காலத்தில் இக்கோயில் கடுமையாகத் தாக்கப்பட்டது. தற்போது அது தாவ் மதத்தின் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது.

4、தொங் தைய் பாதையின் தொல்பொருள் வீதி:சீனாவிலும் வெளிநாடுகளிலும் புகழ் பெற்ற பழைய கைவினைக் கலைப் பொருட்களை விற்கும் வீதியாக, தொங் தைய் பாதை இருக்கிறது. தனிச்சிறப்பியல்பு வாய்ந்த கைவினைக் கலைப் பொருட்கள், தொல்பொருட்கள், பழைய பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்த கடைகள், இந்தச் சந்தையில் நிறைய உள்ளன. அதிர்ஷ்டமிருந்தால் பயணிகள், இங்கு மதிப்புமிகுந்த பொருட்களைக் கண்டறிந்து வாங்கலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040