• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரம் பற்றிய வழிக்காட்டி
  2013-02-02 19:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   

வணிக மையங்கள்

1、வெய் தான் 18வது கட்டிடம்:பிரிட்டனின் சார்டார்டு வங்கி சீனாவிலுள்ள தலைமை மையமாக இருந்த வேளையில் அது 1923ஆம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவு வகைகள், அழகான ஆடைகள், நகைகள் முதலியவை இங்கு விற்கப்படுகின்றன. பண்டைய ரோமானிய பாணியுடைய இக்கட்டிடம், பகட்டாகவும் கலைவண்ணமிக்கதாகவும் இருந்து வருகிறது.

2、நான்ஜிங் நடைப்பாதை:நான்ஜிங் நடைப்பாதை சுமார் 1200 மீட்டர் நீளமுடையது. அது பாரம்பரிய தையும் நவீன தனிச்சிறப்பையும் இணைந்த நூறு ஆண்டுக்கால வரலாற்றுடைய பாதையாகும். பயணிகள் இங்கு வந்து, ஷாங்காய் வரலாற்றை புரிந்து கொள்ள விரும்பினால், ஷாங்காய் கலைவண்ண ஆடைக் கடைகள், முதலாவது உணவுக் கடை முதலியவற்றைச் சுற்றிப் பார்க்க வேண்டும். நவீனச் சூழ்நிலையை உணர்ந்து கொள்ள விரும்பினால், கவர்ச்சி மிகுந்த சிறப்பு சிறு தொடர்வண்டி மூலம் இப்பாதையில் பயணம் செய்து, காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

3、ட்சொங்தா சதுக்கம்(Super Brand Mall):பு¬¬ஃதுங் புதிய மாவட்டத்தில் அமைந்திருக்கும் ட்சொங்தா சதுக்கம், ஆசியாவின் எட்டாவது பெரிய வணிக மையமாக இருக்கிறது. தற்கால பேஃஷன் போக்கிற்கான உந்து விசை, புதிய வணிக தகுநிலை ஆகியவை படைத்த இம்மையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சின்னங்கள் பலவற்றின் பங்கெடுப்பை ஈர்த்துள்ளது. தற்போது ஆசியாவில் சிறப்பாக இயங்கும் வணிக மையங்களில் அது ஒன்றாகும்.

4、காங் ஹுய் சதுக்கம்(Grand Gateway):காங் ஹுய் சதுக்கம், சியுஹுய் மாவட்டத்தில் உள்ளது. ஷாங்காயில் மிகப் பெரிய வணிக மையமாக இது திகழ்கிறது. அதன் நுழைவாயில், சுரங்கத் தொடர்வண்டி நுழைவாயிலை நோக்கியிருப்பதால், பொது மக்கள் போய் வர மிகவும் வசதியாக உள்ளது. இக்கட்டிடத்தில் வணிகம் செய்யும் 7 மாடிகளில், பல்வேறு நிலையிலான நுகர்வோரின் தேவைகளை நிறைவு செய்ய முடியும்.

5、ஜியு குவாங் பல்பொருள் விற்பனை அங்காடி:இது ஜிங் அன் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சரியாக ஜப்பான் பாணியுடைய விற்பனை அங்காடியான இதில், பயணிகள் நட்பு சூழலை உணரலாம். ஜப்பானின் சிறப்பான பொருட்கள், புகழ் பெற்ற பிற தொழில் சின்னங்களுடைய பொருட்கள் முதலியவை, ஒன்பது மாடிகளில் விற்கப்படுகின்றன. தரையடியில் இருக்கும் பேரங்காடியில், இறக்குமதி உணவு வகைகள் பல, விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இந்தப் பேரங்காடிக்கும், சுரங்கத் தொடர்வண்டி போக்குவரத்து 2வது நெறியின் ஜிங் அன் கோயில் நிலையத்துக்கும் இடையில் நேரடி இடைவழி உள்ளது. போக்குவரத்து வசதியாக இருக்கிறது.


1 2 3 4 5 6 7 8 9 10
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040