• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதையின் திபெத் இன ஓட்டுநர்கள்
  2013-02-25 09:16:37  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்றைய நிகழ்ச்சியில் சீனாவின் ச்சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதையில் ஒரேயொரு திபெத் இன ஓட்டுநர்கள் குழு பற்றி கூறுகின்றோம். அவர்கள் தமிழ் பிரிவின் செய்தியாளர் ஈஸ்வரி, ஜனவரி திங்களில் ச்சிங்ஹெய் மாநிலத்திற்கு சென்று பணிப் பயணம் செய்த போது பேட்டி கண்ட இரண்டு ஓட்டுநர்களாவர். திபெத் தனிச்சிறப்புடைய முகங்களில் மலர்கின்ற மனமார்ந்த சிரிப்பு, இதுவரையும் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இப்போது திபெத் இன தொடர்வண்டி ஓட்டுநர் லாகாவ்செராங் மற்றும் துதங்தொஜியின் கதையைக் கேட்போம்.

தொடர்வண்டி ஒலித்தவுடன், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவை சேர்ந்த இளைஞர் துதங்தொவ்ஜியும் அவரது ஆசிரியர் லாகாவ்செராங்கும் அவர்களது மற்றொரு போக்குவரத்து பயணத்தை துவக்கினர். சுமார் 4 மணி நேர ஆயத்தத்துக்குப் பிறகு, அவர்கள் தொடர்வண்டியை ஓட்டி சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதையின் துவக்க நிலையமான சிநிங் நகரத்தை விட்டுச் சென்றனர்.

சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதை, மேற்கு சீனாவின் சிங்ஹெய் மாநிலத்தின் தலைநகர் சிநிங் நகரத்தையும் திபெத் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசா நகரத்தையும் இணைக்கின்றது. மொத்த நீளம் 1956 கிலோமீட்டராகும். இது, உலகின் மிக உயர்ந்த கடல்மட்டத்திலுள்ள பீடபூமி இருப்புப்பாதையாகும். 2006ஆம் ஆண்டின் ஜுலை திங்களில் இந்த இருப்புப்பாதையின் முழு நெறி, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. திபெதிற்கான போக்குவரத்து சேவையை நிறைவு செய்ய, தொடர்வண்டியின் பல்வேறு பதவிகளில் திபெத் இனப் பணியாளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். 27 வயதான துதங்தொவ்ஜி, அவர்களில் ஒருவராவார். தொடர்வண்டியை ஓட்டி அவரது ஊரான லாசாவுக்குத் திரும்புவது, அவரது கனவாகும்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040