• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதையின் திபெத் இன ஓட்டுநர்கள்
  2013-02-25 09:16:37  cri எழுத்தின் அளவு:  A A A   

இப்போது துதங்தொஜி, தொடர்வண்டியின் துணை ஓட்டுநர். ஒரு அதிகாரபூர்வ ஒட்டுநராக மாற, அவர் 5 ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டுள்ளார். ச்சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதை, மோசமான இயற்கை நிலையுடைய பிரதேசத்தில் அமைந்துள்ளது. எனவே, ஒரு ஓட்டுநராக மாற, மேலும் கடினமான பயிற்சியையும் சோதனைகளையும் கடந்து நிற்க வேண்டும். சிநிங் தொடர்வண்டி விவகார பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் யு ச்சியுவன் கூறியதாவது

புதிய பணியாளர்கள் முதலில் 3 முறை பயிற்சி வகுப்பில் கல்வி பெற வேண்டும். பிறகு ஓராண்டு பயிற்சி வேலை தேவைப்படும். துணை ஓட்டுநரிலிருந்து அதிகாரபூர்வ ஓட்டுநராக மாற சுமார் 3 ஆண்டுகள் தேவைப்படும். 60 ஆயிரம் கிலோமீட்டர் போக்குவரத்தில் விபத்து ஒன்றுமில்லாமல் இருந்தால், அவர் ஒரு ஒட்டுநராக மாறலாம். எனவே, ஓர் அதிகாரப்பூர்வமான தொடர்வண்டி ஓட்டுநராக மாற, குறைந்தது 4 ஆண்டு காலம் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு துதங்தொவ்ஜி, ஓட்டுநர் தேர்வில் கலந்து கொண்டு தனது கனவை நனவாக்கக் கூடும். அவர் ஓட்டுநராக மாறிய பின், தொடர்வண்டியை ஓட்டி தனது ஊரான லாசாவுக்கு திரும்ப முடியும். முன்பு அவர் ஊரிலிருந்து மிகவும் தொலைவில் உள்ள மத்திய சீனாவின் சான் சொ நகரில் கல்வி பெற்றார். அவர் நாளுக்கு நாள் சொந்த ஊருக்கு செல்லும் நாளை நெருங்கி வருகிறார். அவர் நினைவுக் கூர்ந்து கூறியதாவது

முன்பு ஊருக்குத் திரும்புவது, மிக கடினமானது. ஒரு முறை நான் சங்சொவிலிருந்து சாங்துகிற்கு சென்று பயணிப் பேருந்தில் 7 நாட்கள் செலவிட்டேன். பிறகு வேறு பேருந்தில் லாசாவுக்குத் திரும்ப வேண்டும். இது மிக கடினமானது. நெடுஞ்சாலை சீராக்கப்பட்ட பின், 3 நாட்கள் மட்டும் தேவைப்பட்டன. பிறகு சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. நான் நேரடியாக சாங்சொவிலிருந்து தொடர்வண்டியில் ஊருக்குத் திரும்ப முடியும் என்று அவர் கூறினார்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040