வணக்கம் நேயர்களே, அடுத்து சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன் விழா எனும் பொது அறிவுப் போட்டிக்கான நான்காவது கட்டுரையை வழங்குகின்றோம். இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில், தமிழ்ப் பிரிவின் புதிய முயற்சியும், புதிய வளச்சித் திட்டங்களும் என்பது பற்றி கூறிகின்றோம். தொகுத்து வழங்குபவர் மதியழகன். சரஸ்வதி.
முதலில், இன்றைய கட்டுரை பற்றிய 2 வினாக்களைக் கேளுங்கள்
1. சீன வானொலி தமிழ்ப் பிரிவின் இணையதளம் எப்போது இயங்கத் துவங்கியது?
2. தமிழ்ப் பிரிவு எதிர்காலத்தில் வழங்க இருக்கும் ஊடக சேவைகளில் நீங்கள் எதை எதை மிகவும் விரும்புகிறீர்கள்?
மதியழகன்...... சரஸ்வதி, நீங்கள் முதலில், எமது நேயர் நண்பர்களுக்கு, சீன வானொலி தமிழ்ப் பிரிவின் வளர்ச்சி பற்றி, சுருக்கமாக அறிமுப்பகப்படுத்த முடியுமா.
சரஸ்வதி........ மகிழ்ச்சி. முதலில், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் வளர்ச்சியை நான் விவரிக்கின்றேன்.
சீன வானொலி நிலையம் 1941ஆம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 3ம் நாள் ஒலிபரப்பைத் துவங்கியது. துவக்கத்தில் ஜப்பானிய மொழியில் மட்டும் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. 2012ஆம் ஆண்டின் அக்டோபர் வரை, 61 அந்நிய மொழிகள், மெண்டரின் மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 3500 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
சீன வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் உலகமெங்கும் ஒலிக்கின்றன. அளவிலும் சரி, செல்வாக்கிலும் சரி, சீன வானொலி நிலையம் உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது.
சீன வானொலியின் 40 பொது செய்தியாளர் நிலையங்கள், நிறுவப்பட்டுள்ளன. தவிர, சீனாவில் பல்வேறு மாநிலங்களிலும், ஹாங்காங் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலும் செய்தியாளர் நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் மாபெரும் தகவல் வலைப்பின்னல் உருவாகியுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வாழ்கின்ற நேயர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு நேயர்கள் விரைவாகவும் வசதியாகவும் பயன் தரும் முறையிலும் சீனாவை அறிந்து கொள்ளும் வழிமுறையாக சீன வானொலி நிலையம் மாறியுள்ளது.