• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ்ப் பிரிவின் புதிய முயற்சியும், புதிய வளச்சித் திட்டங்களும்
  2013-04-25 17:11:41  cri எழுத்தின் அளவு:  A A A   

 

வெளிநாடுகளில் கிளை நிறுவனங்களையும் அலுவலகங்களையும் உருவாக்குவது, தமிழ் மொழி ஒலிபரப்பின் வளர்ச்சிக்கு மாபெரும் வாய்ப்புகளைக் கொண்டு வருவதும் என்பது திண்ணம். வெளிநாடுகளிலுள்ள கிளை அலுவலகத்தின் மூலம், உள்ளூர் மக்கள், இதில் வேலை செய்யும் வாய்ப்புகளைப் பெற்று, எமது சகப் பணியாளர்களாக மாறலாம். அப்படியிருந்தால், தமிழர்களே சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் பங்கெடுக்கலாம். இதன் மூலம், நேயர் நண்பர்களுடன் நெருக்கமாக பேசி உரையாடி, அதாவது, அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். உங்களுடைய விருப்பத்தின்படியே, எமது நிகழ்ச்சிகளைச் மேம்படுத்தலாம்.

அது மட்டுமல்லாமல், சீனா பற்றி அறிந்துகொண்டு, சீனாவில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நண்பர்கள், உள்ளூர் பிரதேசத்திலுள்ள கன்ஃப்யுசியெஸ் வகுப்பில் சேர்ந்து, சீன மொழியைக் கற்றுகொள்ளலாம். இவ்வகுப்பில் சீன மொழி மட்டுமல்லாமல், சீனத் திரைப்படங்கள், நூல்கள் போன்ற சேவைகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீன-தமிழ், தமிழ்-சீனம் என்ற இரட்டை மொழி இதழ்களை நாங்கள் வழங்குவோம். இப்படியிருந்தால், சீனாவிலுள்ள தமிழ் நண்பர்கள், வெளிநாடுகளில் வாழ் சீனர்கள் மற்றும் தமிழர்கள் முதலியோர், தமிழொலி எனும் இதழ்களைப் படிக்கலாம். பயனுள்ள தகவல்களைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளிலுள்ள எமது கிளை நிறுவனங்கள் இச்சேவைக்குப் பொறுப்பேற்கும் என்பதால் இது எளிதானது.

ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தவிர, சீன வானொலியின் மூலம், சீனப் பண்பாடு, சீனாவில் சுற்றுலா தகவல்கள், சீனாவிலுள்ள வணிக வளர்ச்சி வாய்ப்புகள், கல்வி தகவல்கள், பொருட்கள் வாங்கும் மையங்கள், புதிதாக தயாரிக்கப்படுகின்ற திரைப்படங்கள், கார் போன்ற பொருட்காட்சிகள் முதலியவற்றை நேயர் நண்பர்கள் எளிதாக அறிந்துகொள்ளலாம். சீனா பற்றிய ஈர்ப்பு மிகுந்த தகவல்களை தமிழ்ப் பிரிவு பன்முகங்களில் வழங்கும்.

சரஸ்வதி.....சீன வானொலி தமிழ்ப் பிரிவின் வளர்ச்சி எதிர்காலம் ஒளிமிக்கதாக உள்ளது என்று நம்புகிறேன். வளர்ச்சித் திட்டங்கள் அதிகம் உள்ளன. மதியகழகன், இணையதளப் பணிகளில் அனுபவங்களைக் கொண்ட நீங்கள், தமிழ் வளர்ச்சிக்கு எந்த விதமான முயற்சிகள் எடுக்க உள்ளீர்கள்?

மதியழகன்..... பன்முக பல்லூடக நிறுவனமாக வளர தமிழ்ப் பிரிவு பாடுபடும். எனவே, ஊடக உள்ளடக்கங்களின் கட்டுமானத்தை வலுப்படுத்த தமிழ்ப் பிரிவு எதிர்காலத்தில் முயற்சி மேற்கொள்ளும். நேயர் நண்பர்களுக்கு மேலதிக சிறப்பு அம்சங்களை வழங்குகின்றோம். எதிர்காலத்தில் தமிழ் மொழி ஊடகத்தை வளர்க்கும் போக்கில், உலகப் பார்வையில் தகவல்கள் வழங்கப்படும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040