காணொளி பகுதிப் பொறுப்பாளர் மோகன்
இன்றைய ஊடகம் தொடர்பான தொழில் நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தினமும் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். தமிழ்ப் பிரிவின் பணியாளர்களால் எல்லாவற்றையுமே வழங்க இயலாது. எதிர்வரும் வளர்ச்சியில் நேயர் நண்பர்களின் ஆலோசனைகளும், பங்களிப்பும் தேவைப்படுவது உறுதி.
சரஸ்வதி.....தற்போது புதிய ஊடகத் தொழில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. மதியழகன், எதிர்காலத்தில் நேயர் நண்பர்களுடன் தொடர்பு கொள்வதில் புதிய வழிமுறை இருக்கிறதா?
மதியழகன்.....நேயர் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள தமிழ்ப் பிரிவு பல்வகை வடிவங்களை அதிகரிக்கும். இதுவரை, கடிதம், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி ஆகியற்றை முக்கியமாக பயன்படுத்தி நண்பர்கள் எங்களுடன் தொடர்பு கொள்கின்றனர்.
கூகுள் ப்ளஸ், டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவுச் செய்து, இணைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு இணையத்தில் உடனடியாக பரிமாற்றம் செய்ய நாங்கள் முயல்கிறோம். அடுத்த கட்ட பணியில் கூகுள் ப்ளஸில் தமிழ்ப் பிரிவின் பெயர் பதிவு செய்யப்படும். செயல்பட துவங்கிய பின் நண்பர்களுக்கு அறிவித்து, தகவல்களைக் கூடிய விரைவில் வழங்குவோம்.
சரஸ்வதி.....எதிர்காலத்தில் நண்பர்களே உங்களுடைய ஒத்துழைப்பும் உங்கள் ஆதரவும் தேவைப்படும். சீன வானொலி தமிழ்ப் பிரிவு பல்ஊடக நிறுவனமாக வளர்ச்சியடையவும், அதிக துறைகளில் முன்னேற்றமடையவும், பல்வகை ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுவது உறுதி. மதியழகன், நீங்கள் இது பற்றி அறிமுகம் செய்யுங்கள்..
உலகின் தமிழ் ஊடக நிறுவனம், ஆய்வு கழகம், கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் நடத்த இருக்கின்றோம். இதற்கிடையில், உலகின் தமிழ் அமைப்புகள் பங்கெடுப்பதை மிகவும் வரவேற்கிறோம்.
மேலும், நீங்கள், தமிழ் மொழி பேசு நபராக இருந்தால், சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் வேலை செய்ய ஆவல் இருந்தால், தமிழ்ப் பிரிவுக் குடும்பத்தில் சேர்வதை வரவேற்கின்றோம். எமது தமிழ்ப் பிரிவு வளர நீங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றோம். கடந்த 50 ஆண்டுகளில் சீன வானொலி தமிழ்ப் பிரிவு வளர எமது நேயர் நண்பர்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். எதிர்காலத்தில் தமிழ்ப் பிரிவு மேலும் வளர, நேயர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி, ஆதரித்து வருவர் என்று நம்புகின்றோம்.
சரஸ்வதி.....நண்பர்களே, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன் விழா எனும் பொது அறிவுப் போட்டிக்கான நான்காவது கட்டுரையைக் கேட்டீர்கள். இன்றைய 2 வினாக்களை மீண்டும் ஒருமுறை குறிப்பிடுகின்றோம்.
1, சீன வானொலி தமிழ்ப் பிரிவின் இணையதளம் எப்போது இயங்கத் துவங்கியது?
2, தமிழ்ப் பிரிவு எதிர்காலத்தில் வழங்க இருக்கும் ஊடக சேவைகளில் நீங்கள் எதை எதை மிகவும் விரும்புகிறீர்கள்?
நேயர்களே, இவ்வினாக்களின் விடைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜுன் திங்கள் 30ஆம் நாள்.
வணக்கம், நேயர் நண்பர்களே.