இணையதளப் பொறுப்பாளர் மதியழகன்
1998ஆம் ஆண்டு டிசெம்பர் திங்களில் சீன வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத் துவக்கியது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ரஷியம், ஸ்பெனியம், போர்த்துக்கீசியம் உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளிலும் 17 மொழி இணையக் கிளைகள் இடம் பெறும் பன்னோக்க இணையத் தொகுதி நிறுவப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டது. அப்போது முதல் வெளிநாட்டு வானொலிகளின் மூலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலை அதிகரித்துள்ளது. 2003ஆம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் ஆங்கிலம், ரஷியம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலான நிகழ்ச்சிகள், நாளுக்கு நாள் சுமார் 80 மணி நேரத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளின் மத்திய அலை மற்றும் பண்பலைவரிசை மூலம் நேரடியாக ஒலிபரப்பாகி, நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
2003ஆம் ஆண்டில், சீன வானொலி தமிழ் இணையதளம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. செய்தி, செய்தவிளக்கம், சீனப் பண்பாடு போன்ற நிழற்படத் தொகுப்பு, காணொளி, அறிவுப் போட்டி முதலியவை இதில் இடம்பெறுகின்றன. உலகில் எங்கெங்கும், எப்போதும், சீன வானொலி தமிழ் இணையத்தளத்தில் நேயர் நண்பர்கள் எமது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். 2013ஆம் ஆண்டில், இணையதளத்தின் கைபேசி வடிவம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மதியழகன்.....சரி. உங்களுடைய அறிமுகம் மிகவும் விளக்கமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் இணையதளம் உள்ளிட்ட புதிய வளர்ச்சியை நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றோம். நீங்கள் இது பற்றி, அறிமுகம் செய்ய விரும்புகிறீர்களா?
சரஸ்வதி.....ஆமாம்.
கடந்த 2 ஆண்டுகளில், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் ஒலிபரப்பு இலட்சியம் பெரிதும் வளர்ந்துள்ளது. கைபேசி வடிவத்திலான இணையத்தை, நேயர் நண்பர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, கத்தார் முதலிய நாடுகளில், மேலதிகமான நேயர் நண்பர்கள் எமது நிகழ்ச்சியைக் கேட்டு வருகின்றனர். இணையதளத்தில் உலா வருகின்றனர்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவின் வளர்ச்சிப் போக்கில், இதுவரை பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. நேற்று, இன்று, நாளை என்ற போக்கில், தமிழில் உலகோடு இணைதல் என்ற வளர்ச்சிதான் விருப்பமாக உருவாகியுள்ளது.
மதியழகன்......உங்களுடைய விளக்கத்தின்படி, தமிழ்ப் பிரிவு, விரைவான வளர்ச்சிப் போக்கில் நுழைந்துள்ளது. மேலும், அடுத்த சில ஆண்டுகளில், தமிழ்ப் பிரிவின் வளர்ச்சித் திட்டம் என்ன?உங்களுக்குத் தெரியுமா?
சரஸ்வதி.....நிச்சயமாக. இனி, சீன வானொலி தமிழ்ப் பிரிவின் அடுத்த சில ஆண்டுகளின் வளர்ச்சித் திட்டத்தை நாங்கள் விரிவாக எடுத்துக்கூறுகின்றோம். முதலில், அடுத்த சில ஆண்டுகளில், பல்லூடக ஒலிபரப்பு நிறுவனத்தை தமிழ்ப் பிரிவு உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, மேலதிக அலுவல்களும் சேவையும் மேற்கொள்ளப்படும். உலகின் தமிழ் ஒலிபரப்புச் சேவை வழங்குகின்ற நிறுவனங்களில் தமிழ்ப் பிரிவு முன்னணி வகிக்க முயற்சி செய்து வருகின்றது. தமிழ் நண்பர்கள், உலகில் மேலதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில், சிற்றலை, சமுதாய மற்றும் பள்ளிப் பண்பலை, இணையதளம், செல்லிடபேசி, இதழ் முதலிய வழிமுறைகளின் மூலம், எமது நிகழ்ச்சியைக் கேட்டு, பார்த்து மகிழலாம். மேலும், உலகில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, தூய தமிழ் ஒலிபரப்பை உருவாக்க தமிழ்ப் பிரிவு முயற்சி செய்து வருகிறது. தவிர, வெளிநாடுகளிலுள்ள சீன வானொலி தமிழ்ப் பிரிவின் கிளை அலுவலகம், கன்ஃப்யுசியெஸ் கழகம், தமிழொலி இதழுக்கான வடிவமைப்பு, உருவாக்கம், வெளியீட்டகம் உள்ளிட்ட கிளை நிறுவனங்களை தமிழ்ப் பிரிவு நிறுவ திட்டமிட்டுள்ளது.