சீனாவின் சியாங் சூ மாநிலத்தின் வூ ச்சி நகரின் வாண்டா சதுக்கத்தில், பெரிய பொது நல நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சீன களிமண் சிற்ப அருங்காட்சியகம் இந்நடவடிக்கையை ஏற்பாடு செய்த நிறுவனங்களில் ஒன்றாகும். வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட மேசைகளில், வெவ்வேறான உருவங்களும் வண்ணங்களும் கொண்ட களிமண் சிற்பப் படைப்புகள் காணப்படுகின்றன. அவ்விடத்தில் களிமண் சிற்பக் கைவினைஞர் குழந்தைகளுக்கு களிமண் சிற்பங்களை தயாரிப்பது எப்படி என கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தையின் தாய் செய்தியாளரிடம் கூறியதாவது:
"என் குழந்தை களிமண் சிலைகளை தயாரிக்கும் அனுபவத்தைப் பெற்று, இந்த கலையில் ஈடுபாட்டு உணர்வை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார் அவர்.
<< 1 2 3 4 5 6 7 8 9 >>