இந்நடவடிக்கை நடைபெற்ற இடத்தில், களிமண் சிற்பக் கலைஞர் ச்சி ட்சு ஜியன் தயாரித்த, "குழந்தைகளின் மகிழ்ச்சி" எனும் படைப்புகள், மக்களின் கவனத்தை ஈர்த்தன. இப்படைப்புகளில், பண்டைக்கால குழந்தைகள் மூவரின் சிலைகள் இடம்பெறுகின்றன. ச்சி ட்சு ஜியன் கூறியதாவது:
"இப்படைப்புகளில், கடந்த காலத்தில் குழந்தைகளால் மிகவும் வரவேற்கப்பட்ட விளையாட்டுப் பொம்மைகள் காணப்படுகின்றன. அர் ஹூ எனும் இசைக் கருவி, யாவ் கு எனும் கிலுகிலுப்புக் கருவி முதலியவை அப்பொம்மைகளில் இடம்பெறுகின்றன. இக்குழந்தைகள் மூவர், சீனப் பாரம்பரியப் பண்பாடுகளிலுள்ள குழந்தைகளின் தனிச்சிறப்புகளை வெளிப்படுத்துகின்றனர்" என்றார் அவர்.