கைவினை சிற்பக் கலைஞர் லு யி ட்சுவின் மேசையில், சில கேலிச்சித்திரப் பாத்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் களிமண் சிற்ப உருவங்கள் காணப்படுகின்றன. எட்டு தேவதைகள் கடல் கடத்தல், கேலிச்சித்திரப் புலி, சிங்கம், பூனை ஆகியவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம்.
புத்தாக்கத்தில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நாடுவது, தற்போது குய் ஷான் களிமண் சிற்பக் கலைஞர்களின் கருத்தாகும். 2013ஆம் ஆண்டு, குய் ஷான் களிமண் சிற்பத் திட்டம் சந்தைமயமாகும் போக்கு விரைவாக இருக்கும். களிமண் சிற்பத் தொழிலின் சங்கிலித் தொடர் வளர்க்கப்படும். களிமண் பண்பாட்டு மறுமலர்ச்சி அடையும் சூழல் உருவாக்கப்படும்.
நேயர்களே, "குய் ஷான் களிமண் சிற்பக் கலையின் வளர்ச்சி" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.