பொது மக்களிடையே உருவாகிய கலையை, இத்தகைய சிந்தனையுடன் பொது மக்களிடையே பரவல் செய்தால் தான், இக்கலை மேலதிக புத்துயிர் பெறும் என்று சீன களிமண் சிற்ப அருங்காட்சியகத்தின் இயக்குநரின் உதவியாளர் திங் சி காங் கருத்துத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"வூ ச்சியின் குய் ஷான் களிமண் சிற்பக் கலை, பொது மக்களின் கலை அவர்களால் உருவானது. இது, நாட்டுப்புறக் கலையாகும். குய் சான் களிமண் சிற்பக் கலை பற்றி பல்வேறு சமூகத் துறையினரிடம் விழிப்புணர்வு அதிகரிக்கும் பொருட்டு, பொதுநல நடவடிக்கைகளையும், பரப்புரை நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார் அவர்.