ஆனால், சீன வரலாற்றில் அதிக புகழ் பெற்றுள்ள குய் ஷான் களிமண் சிற்பக் கலை, தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் சேர்க்கப்பட்ட பின், அதன் வளர்ச்சிக்கு தடைகள் இன்னும் இருக்கின்றன. மக்களுக்கு மகிழ்ச்சி தருவதற்காக, குய் ஷான் களிமண் சிற்பக் கலைஞர்கள், சிற்பப் பொருட்களின் புத்தாக்கத்தில் அதிக முயற்சி மேற்கொண்டுள்ளனர். சீன களிமண் சிற்ப அருங்காட்சியகத்தின் இயக்குநரின் உதவியாளர் திங் சி காங் கூறியதாவது:
"தற்போது களிமண் உருவங்களின் வடிவமைப்பில், இளைஞர்களால் வரவேற்கப்படும் பொருட்கள் முக்கியமாக கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நகைச்சுவை, அசைவூட்டம், தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களாகும். சீனாவின் பாரம்பரிய நாட்காட்டியின்படி, இவ்வாண்டு பாம்பு ஆண்டு ஆகும். பாம்பு ஆண்டு தொடர்பான அஃபூ உருவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்றார் அவர்.