முந்தைய நடவடிக்கைகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட களிமண் சிலைகளைப் போல்லாமல், இந்நடவடிக்கையில் காட்சிக்கு வைக்கப்பட்ட களிமண் உருவங்களில், பாரம்பரிய அஃபூ, அச்சி உருவங்களைத் தவிர, அதிகமான கவர்ச்சியான கேலிச்சித்திர உருவங்களும் இருக்கின்றன. இளம் தலைமுறை குய் ஷான் களிமண் சிற்பக் கலைஞர்கள் இக்களிமண் உருவங்களை கைவினை கலை வடிவமாக தயாரித்துள்ளனர். கைவினைஞர் சிற்பக் கலைஞர் லு யி ட்சு (Lu Yi Zhi)கூறியதாவது:
"பாண்டா, சீனாவின் தேசியச் செல்வமாகும். விளையாடிக் கொண்டிருக்கும் பாண்டாக்களின் உருவங்களைத் தயாரித்தேன். தவிர, குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, கேலிச்சித்திர உருவங்களைத் தயாரித்தேன்" என்றார் அவர்.