Zhang Yu திராட்சை மது தொழில் நிறுவனம், துவக்கக் காலத்தில் ஐரோப்பியாவிலிருந்து சிறந்த திராட்சை விதைகளையும், இயந்திரமயமாக்க உற்பத்தி வழிமுறைகளையும் சீனாவுக்கு அறிமுகப்படுத்தியது. அக்காலம் முதல் சீனத் திராட்சை மது உற்பத்தித் தொழில் நுட்பம் புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்க. அடுத்து ஜிங் டோ, பெய்ஜிங், ஜிலின் முதலிய பிரதேசங்களில் திராட்சை மது தொழிற்சாலைகள் படிப்படியாக நிறுவப்பட்டன. சீனத் திராட்சை மது தொழில் அடிப்படையில் உருவாகியது.
ஐரோப்பியத் திராட்சை வகைகளைத் தவிர, சீனாவில் மது உற்பத்திக்காகச் சீனாவின் திராட்சை வகைகளும் உண்டு. சீன வடகிழக்கு பகுதியில் ஜி லின் மாநிலத்தின் டுங் குவா நகரில் சேன் என்று பெயரிடப்பட்ட திராட்சை, அமிலத் தன்மை அதிகமாக உள்ள, சீனாவின் சில மது உற்பத்திக்கான திராட்சை வகைகளில் ஒன்றாகும். அது ரஷியாவிலும் வட கொரியாவிலும் வளர்ந்து, குளிரைத் தாங்கும் தன்மையுடையது. டுங் குவா நகரின் Li Jia Xiang என்றும் ஓவியர் கூறியதாவது
"சிலர் மலை ஏறி சேன் திராட்சையைத் திரட்டி எடுத்து, மது உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை திராட்சையால் உருவாக்கப்பட்ட மது, மிகவும் சுவையாக இருக்கிறது."என்றார் அவர்.