மத்திய உற்பத்திப் பிரதேசத்தின் மிக முக்கியமான திராட்சை பயிரிடும் தளமான HuaiLai மாவட்டம், திராட்சை மதுத் துறையால் அதிக நம்பிக்கை செலுத்தப்பட்டு வரும் உற்பத்திப் பிரதேங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் 40ஆயிரத்துக்கு மேலானோர், அதன் பத்தில் ஒரு பகுதி விளை நிலத்தில் திராட்சைகளைப் பயிரிட்டு வருகின்றனர். உலகளவில் ஏறக்குறைய அனைத்து சிறந்த திராட்சை வகைகளும் இம்மாவட்டத்தில் பயிராகின்றன. HuaiLai மாவட்டத்தின் தலைவர் Li Chang qing கூறியதாவது
"சீனாவில் மிக பெரிய கன்று வளர்ப்பு தளத்தை நிறுவியுள்ளோம். உலகில் தலைசிறந்த திராட்சைகளை வளர்த்த பிறகு, அவற்றைப் பயிரிடும் தொழில் நிறுவனங்களுக்கும் வேளாண் குடும்பங்களுக்கும் கொடுக்கிறோம். தோட்ட முறையில் அல்லது கூட்டுறவு முறையில் திராட்சை பயிரிடும் பரப்பளவை விரிவாக்க, அரசு உரிய மானியத்தை வழங்கியுள்ளது."என்று Li Chang qing தெரிவித்தார்.
சீன மேற்கு உற்பத்திப் பிரதேசத்தில் அமைந்துள்ள கான் சு மாநிலத்தின் வூ வே நகரம், பழங்காலத்தில் பட்டுத்துணிப் பாதையின் முக்கிய பகுதியாகும். இங்கு பயிரிடப்படும் திராட்சைகள், பக்குவமடைந்து, இனிப்பாகவும் பூச்சியற்றதாகவும் இருக்கின்றன. வூ வே நகரம் தற்போது சீனாவின் திராட்சை மது நகரமாக திகழ்கிறது. மேற்கு உற்பத்திப் பிரதேசம் திராட்சை பயிரிடும் வரலாறு, ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிய போதிலும், திராட்சை மது உற்பத்தி, கடந்த 80ஆம் ஆண்டுகளில் தான் துவங்கியது. 1983ஆம் ஆண்டு சீனத் திராட்சை மதுத் துறையின் பெரியோர் GuoQiChang மது உற்பத்திக்கான திராட்சை விதையை, நிங் ஷியா குய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்துக்கு முதன்முறையாகக் கொண்டு வந்து, இப்பிரதேசத்தில் திராட்சை மது வரலாற்றைத் துவக்கினார். மேற்கு உற்பத்திப் பிரதேசம் தாமதமாகத் தொடங்கிய போதிலும், விரைவாக வளர்ந்துள்ளது. சாங் யு எனும் திராட்சை மது குழுமம், ShanXi, NingXia முதலிய பிரதேசங்களில் திராட்சை பயிரிடும் பரப்பளவை, சுமார் 16ஆயிரத்து, 660 ஹெக்டராக அதிகரித்தது. 2006ஆம் ஆண்டு சீனாவும் பிரான்ஸும் கூட்டாக இயக்கிய வாங் ச்சோ திராட்சை மது குழுமம், ஒத்துழைப்புக் கூட்டாளியுடன் மது தொழிற்சாலையை உருவாக்கியது. தொண்மை வாய்ந்த பட்டுத்துணிப் பாதை, திராட்சை மதுவால் மீண்டும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறது.