சீன மது உற்பத்திச் சங்கத்தின் புள்ளிவிபரங்கள்படி, 2011ஆம் ஆண்டு வெள்ளை மது, பீர் ஆகியவற்றின் உற்பத்தித் தொகை, முறையே ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 20ஆயிரம் டன், மற்றும் 4 கோடியே 89இலட்சத்து 80 ஆயிரம் டனாகும். இவற்றை விட சீனத் திராட்சை மதுவின் சந்தை இன்னும் சிறியது.
உலகில் நபர்வாரி திராட்சை மது நுகர்வின் அளவு சுமார் 7 லிட்டர். சீனாவில் அது ஒரு லிட்டரை விட குறைவு. சீன மக்களின் வருமான அதிகரிப்பு, திராட்சை பண்பாடு மற்றும் அறிவு பரவல் ஆகியவற்றுடன், சீனத் திராட்சை மதுச் சந்தையில் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. 2016ஆம் ஆண்டு உலகளவில் இரண்டாவது பெரிய திராட்சை மது நுகர்வு நாடாக, சீனா மாறுமென மதிபிடப்படுகிறது.
நேயர்கள் இது வரை, சீன வரலாற்றில் திராட்சை மது தயாரிப்புத் துறையின் வளர்ச்சி பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர் நண்பர்களே.