ஜப்பான் 1936ஆம் ஆண்டு நிறுவிய Lao Ye Ling திராட்சை மது தொழிற்சாலையும், 1938ஆம் ஆண்டு நிறுவிய ஜி லின் மாநிலத்தின் டுங் குவா திராட்சை மது தொழில் நிறுவனமும், தொழில்மயமாக்க வழிமுறையின் மூலம் திராட்சை மதுவை உற்பத்தி செய்யத் தொடங்கின. இவ்விரு தொழிற்சாலைகளை நிறுவியது, சீனாவில் முக்கியமான திராட்சை மது உற்பத்திப் பிரதேசமான வட கிழக்கு உற்பத்திப் பிரதேசத்தின் உருவாக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. திராட்சையின் தரம், திராட்சை மதுவின் தரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் வகிகிறது. எனவே திராட்சை உற்பத்திப் பிரதேசங்கள், வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும். நிலவியல் மற்றும் காலநிலை சிறப்புக்களுக்கு இணங்க, சீனா, வட கிழக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு உற்பத்திப் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகிறது. அப்பிரதேசங்கள் தனிச்சிறப்புக்களைக் கொண்டுள்ளன.
மத்திய உற்பத்திப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹெப்பேய் மாநிலத்தின் HuaiLai மாவட்டம், திராட்சை பயிரிடும் வரலாறு, ஆயிர ஆண்டுகளைக் கொண்டது. HanPeng என்பவர் HuaiLai மாவட்டத்தில் வாழ்ந்து வரும் திராட்சை பயிரிடுபவர். ஆண்டுதோறும் ஆக்ஸ்ட் திங்களில் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். திராட்சை மதுவை உற்பத்தி செய்யும் தலைசிறந்த நேரம், சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். ஓராண்டில் கடினமான உழைப்பால், நல்ல பலன் கிடைக்குமா இல்லையா என்பது, இந்நாட்களில் உறுதிப்படுத்தப்படும். 13 ஹெக்டர் பரப்பளவுள்ள திராட்சை தோட்டத்தில் HanPeng 15 ஆண்டுகளில் Chi Xia Zhu எனும் திராட்சை வகை கவனமாகப் பயிரிட்டு வருகிறார். கடந்த ஆண்டில் காலநிலை சிறப்பாக இருந்ததால், திராட்சைகள் உயர் விலையில் விற்க வேண்டுமென HanPeng விரும்பினார். அவர் கூறியதாவது
"திராட்சை விலை மிக உயர்வாக இருப்பதிலோ அல்லது மிக குறைவாக இருப்பதிலோ, எனது விருப்பமில்லை. திராட்சை விலை நிலையாக உயர்வதைத்தான், எதிர்பார்க்கிறேன்."என்றார் அவர்.