விடுமுறை நாட்களில் சீனாவின் பல்வேறு காட்சி இடங்களில் அதிக பயணிகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றுலா பயணம் மேற்கொள்வதுண்டு. அக்காலத்தில் சீன மக்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பயணம் மேற்கொள்வதை விரும்பி, தெரிவு செய்கின்றனர். இவ்வாண்டு மே முதல் நாளான தொழிலாளர் நாள் விடுமுறையில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை, சுற்றுலா மேற்கொண்டோரின் மொத்த எண்ணிக்கையில் 60விழுக்காடு வகித்தது. லி ஜுன் ஒரு சுற்றுலா நிறுவனத்தின் மேலாளர் ஆவார். மே திங்கள் பலர் வெளிநாட்டுச் சுற்றுலா பயணம் மேற்கொண்டதன் காரணம் பற்றி அவர் கூறியதாவது:
"மே தினம் விடுமுறை காலத்தில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணச் செலவு, விரைவாக உயர்ந்தது. உயர்வு மிக பெரிய அளவாக இருந்தது. அதற்கு மாறாக, வெளிநாட்டுச் சுற்றலா பயணச் செலவு, குறைவாக இருந்தது. மேலும் உள்நாட்டின் காட்சி இடங்களில் மக்கள் நெரிசல் காணப்படுகிறது."என்று அவர் தெரிவித்தார்.
1 2 3 4