சீனக் கடல் நிழற்படச் சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் தை சேன் ஜுன், வெளிநாட்டுச் சுற்றுலா பயண ஆர்வம் அதிகரிப்பதன் காரணம் பற்றி கூறியதாவது:
"வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்வது, அங்கே பொருட்கள் வாங்குவது, பரந்த பார்வை மனப்பாண்மை உருவாவது முதலியவை, இப்போது சீன மக்களுக்கு, புதிய விடயங்கள் அல்ல. பல வெளிநாடுகள் சீனப் பயணிகளுக்குப் புதிய கொள்கைகளை வகுத்து முன்வைத்துள்ளன. குறிப்பாக விசா பெறுவதற்கு அதிகமான வசதிகள் வழங்கியுள்ளன. அந்நாடுகள் சீனாவிலிருந்து அதிக பயணிகள் வருவதில் நம்பிக்கை கொள்கின்றன. அதிக மக்கள் தொகையுடைய சீனாவில், பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. பொது மக்களின் வருமானமும் உய்ர்ந்து வருகிறது. அதிக வருமானம் பெறுவதால், மக்கள் மேலும் உயர் தர வாழ்க்கையை விரும்புகின்றனர். இது பல்வேறு நாடுகளின் பொருளாதாரம், சுற்றுலா சந்தை, உற்பத்திப் பொருட்கள் ஆகியவை வளர, தீவிரமான முறையில் தூண்டி வருகிறது."என்று தை சேன் ஜுன் கூறினார்.
விரைவாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம், நடுத்தர வகுப்பின் வளர்ச்சி ஆகியவை, உலகில் பல நாடுகளுக்கு பயன் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் சீனப் பயணிகளின் நபர்வாரி செலவு சுமார் 6ஆயிரம் டாலராகும். அமெரிக்காவில் பிற நாடுகளின் பயணிகள் செலவை விட, இது மிகவும் அதிகமாக இருக்கிறது. கண்டிப்பான முறையில் இச்செலவு, அமெரிக்க ஏற்றுமதியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இவ்வாறு 2011ஆம் ஆண்டு சீனாவுடனான அமெரிக்காவின் சாதக வர்த்தக நிலுவை, 440கோடி டாலரை எட்டியது.