• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனரின் வெளிநாட்டுச் சுற்றுலா
  2013-06-13 14:25:54  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளிநாட்டுச் சுற்றுலாச் சந்தையை எதிர்பார்த்து, சீனப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல நாடுகள் கொள்கைகளை வகுத்து முன்னுரிமை வழங்கியுள்ளன. இரு ஆண்டுகளில் சீனாவிலிருந்து நியூசிலாந்துக்கு பல முறை போய்வரக் கூடிய விசாவை, நியூசிலாந்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் சீன மக்களுக்கு இவ்வாண்டு மே முதல் நாள் தொடக்கம் விண்ணப்பிக்க முடியும் என்று நியூசிலாந்து தலைமையமைச்சரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஜோன் கி அறிமுகப்படுத்தினார். பிரான்ஸ் சுற்றுலாத் துறையமைச்சர் சில்வியா பைநல் கூறுகையில், பிரான்ஸும் சீனாவும் சுற்றுலாவை முன்னேற்றுவதற்கு உடன்படிக்கையை உருவாக்கியுள்ளன. சீன மக்களுக்கு விசா விண்ணப்ப ஒழுங்கு முறையை எளிதாக்குவது, விசா வழங்கப்படும் நேரத்தைக் குறைப்பது முதலியவை அவ்வுடன்படிக்கையில் அடங்குகின்றன. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து 3இலட்சத்துக்கு மேலான விசா விண்ணப்பங்களைப் பிரிட்டன் பெற்றுள்ளது. அவற்றில் 96விழுக்காடு விண்ணப்பங்களுக்கு விசா வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட விசா எண்ணிக்கை, 2009ஆம் ஆண்டு இருந்ததை விட 75 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டு சீன வெளிநாட்டுச் சுற்றுலா வளர்ச்சி அறிக்கையில், 2013ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டுச் சுற்றுலா சந்தை விரைவாக வளர்ந்து வருகிறது. இது பற்றி சீனச் சுற்றுலா ஆய்வகத்தின் சர்வதேசப் பிரிவைச் சேர்ந்த JiangYiYi அம்மையார் கூறியதாவது:

"எதிர்காலத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா துறையின் மீது மிகுந்த நம்பிக்கை காணப்படுகிறது. இந்தச் சந்தை விரைவாக வளரும் போக்கை நிலைநிறுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 9கோடியே 43இலட்சத்தை எட்டி, கடந்த ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 15 விழுக்காடு அதிகரிக்குமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது."என்றார் அவர்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040