• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனரின் வெளிநாட்டுச் சுற்றுலா
  2013-06-13 14:25:54  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் நாள் சீனச் சுற்றுலா ஆய்வகம் வெளியிட்ட 2013ஆம் ஆண்டு சீன வெளிநாட்டுச் சுற்றுலா வளர்ச்சி அறிக்கையின்படி, 2012ஆம் ஆண்டு வெளிநாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட சீன மக்கள் எண்ணிக்கை, சுமார் 8கோடியே 30இலட்சம். 2011ஆம் ஆண்டு அதே காலத்தில் இருந்ததை விட இது 18.41 விழுக்காடு அதிகமாகும். ஜெர்மனி, அமெரிக்கா ஆகியவற்றைத் தாண்டி, உலகளவில் பெரியளவு வெளிநாட்டுச் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் நாடாயாக சீனா மாறியுள்ளது. கடந்த ஆண்டு சீனச் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் செலவு செய்த தொகை, 10ஆயிரத்து 200 கோடி டாலர் எட்டி, உலகில் முதலிடம் வகிக்கிறது. அதுவும் உலகச் சுற்றுலா பொருளாதாரத்தில் 13விழுக்காடு பங்கு வகிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணம் மேற்கொள்வதன் வழிமுறைகளை, சீனப் பயணிகள் மாற்றி வருகின்றனர். முன்பு சற்று பார்ப்பதை மட்டுமே விட்டுவிட்டு, இப்போது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஆழமாக ஆராய்ந்து பண்பாடுகளை உணர்கின்றனர். அதேவேளை உலகெங்கும் சீனச் சுற்றுலா பயணிகளின் கால் தடம் பதிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு சீனர்கள் தென்கிழக்காசியா, ஐரோப்பியா, அமெரிக்கா முதலிய பிரதேசங்களில் பயணம் மேற்கொள்வதுண்டு. தற்போது தென் மற்றும் வடத் துருவ மண்டலங்கள் உள்ளிட்ட சூடற்ற இடங்களிலும் சீனப் பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்டு மகிழ்கின்றனர்.

சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு அளவு, மேலும் உயர்வாக வளர்வதுடனுன், பொருளாதார உலகமயமாக்கப் போக்கு தொடர்ந்து முன்னேறுவதுடனும், சீனாவுக்கும் உலகத்துக்குமிடையே இடைவெளி குறைந்து வருகிறது. இவ்வாண்டு ஏப்ரல் 7ஆம் நாள் சீனாவில் நடைபெற்ற ஆசிய போ ஆவ் கருத்தரங்கு ஆண்டுக் கூட்டத்தில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் கூறியதாவது

"அடுத்த ஐந்தாண்டுகளில் 10இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களைச் சீனா இறக்குமதி செய்யும். வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 50 ஆயிரம் கோடி டாலரை எட்டும். 40கோடிக்கு மேலானோர் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளக் கூடுமென மதிப்பீடு செய்யப்படுகிறது. சீனா எவ்வளவு வளர்கிறதோ, அவ்வளவுக்கு ஆசியாவுக்கும் உலகத்துக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும்."என்றார் ஷி ச்சின்பீங்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040