பொருளாதாரமும், எரியாற்றலும் இரட்டையர் போல இருக்கின்றனர். தற்போது நிலக்கரியை முக்கியமாகக் கொண்ட சீன எரியாற்றல் கட்டமைப்பு, சுற்றுச்சூழலுக்கு வன்மையான நிர்ப்பந்தத்தை விளைவித்து வருகிறது என்று சீனத் தேசிய புதுப்பிக்கவல்ல எரியாற்றல் மையத்தின் இயக்குநர் WangZhongYing குறிப்பிட்டார். அவர் கூறியதாவது
"எரியாற்றல், குறிப்பாகப் புதைபடிவ எரியாற்றல் பயன்படுத்தப்படும்போது, அனல் வேதியியல் மூலம் எமக்குத் தேவையான ஆற்றல் உருவாகிறது. பொருளாதார மதிப்பு வாய்ந்த, பயன்படுத்தக் கூடிய ஆற்றல், 14 விழுக்காடு மட்டும் தான். 86விழுக்காடு ஆற்றல், கழிவு வாயு, கழிவு நீர், தூசி, கன உலோகம் முதலிய வடிவங்களில் வெளியேறி விடுகிறது. சீன நிலக்கரி நுகர்வு அளவு, எரியாற்றல் கட்டமைப்பில் 66 விழுக்காட்டைத் தாண்டுகிறது."என்று தெரிவித்தார்.