சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீண்டகாலமாகக் கவனம் செலுத்திய பெரிய அரசு சாரா தொழில் நிறுவனமான TongWei குழுமத்தின் தலைமை இயக்குநர் Liu Han Yuan கூறுகையில், நிலக்கரியை முக்கியமாகக் கொண்ட எரியாற்றல் கட்டமைப்பை சீனா மாற்றாவிட்டால், சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அவர் கூறியதாவது
"கடந்த இரண்டு ஐந்தாண்டு திட்ட காலங்களில், சீனாவில் நிலகரி நுகர்வு அளவு, முன்பு இருந்ததை விட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்து பொது மக்கள் அனைவரும் அணி திரண்டு முயற்சி மேற்கொள்ளாவிட்டால், 2050ஆம் ஆண்டில் மக்களுக்கு மூச்சு விட முடியாது. வாழ முடியாது."என்றார் அவர்.